Author: Editor TN Talks
வேட்பு மனுவில் வழக்கு விவரங்களை மறைத்ததால், ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்ததாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம், ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது, 1 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்ற நிலையில், ஜனநாயக தீர்ப்பிற்கு மதிப்பளிக்காமல் தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதாக கூறுவது தவறு என…
”திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்” என்ற வசனத்தை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அந்த ஆயிரங்காலத்துப் பயிரை, பலர் அவசரகால செயல்களைச் செய்து கருக வைக்கும் அவலங்களும் இதே தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. 21-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வந்துவிட்ட பிறகும், எத்தனையோ அறிவியல், உலக வளர்ச்சிகளைக் கண்டுவிட்ட பின்பும், சாதிய ஏற்றத்தாழ்வுகள் நம் பூமியை விட்டு மறைந்தபாடில்லை. அன்றாட வாழ்வில் அதன் தாக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்திருக்கிறதோ, திருமணம் என்று வரும்போது அதன் பார்வை அவ்வளவுக்கு அவ்வளவு பெருகிக் கிடக்கிறது. “இந்தக் காலத்தில் யாரு ஜாதி பார்க்குறா?” என்று கேள்வி கேட்பவர்கள் கூட, அதன் பிடிமானத்திலிருந்து விலக அஞ்சும் அளவு நெருக்கடியான கட்டமைப்பை சாதிகள் உருவாக்கி வைத்திருக்கின்றன. அதுவே இளைஞர்கள் பலரது வாழ்வையும் வருங்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கி வருகிறது. அண்மையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைக்காட்டிபுதூரில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த ரிதன்யாவின் கதையிலுள்ள சோகமும் இதன் விளைவுதான். கடந்த ஏப்ரல் மாதம் ரிதன்யாவுக்கு…
காவல் நிலையத்தில் மூன்று பெண்கள் காவலரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மனித உரிமை ஆணையம், இதுசம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் பேக்கரி நடத்தி வரும் சிவாஜி என்பவர், மதுமிதா என்பவருக்கு செல்போனில் தகாத வார்த்தைகளால் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மதுமிதா தனது தோழி செவ்வந்தி, தனம் ஆகியோருடன் சென்று கனகம்மாசத்திரம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றபோது, ராமர் என்ற காவலர், மூவரையும் தாக்கியதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், இதுசம்பந்தமாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கை செம்பியம் காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரும் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து வரும் நிலையில், மாநில காவல்துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும்,…
மிரட்டல் வந்திருந்தால் மன்னித்து விடுங்கள்.. விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டது ஏன்? மகனால் வந்த சோதனை…
வாரிசு நடிகர்கள் சினிமாவில் வருவது என்பது வழக்கமான ஒன்று தான். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே அடுத்தடுத்து சினிமாவை ஆள்வது என்னவோ வாரிசு நடிகர்கள் தான். அந்த வகையில் தமிழ் சினிமாவின் புதிய வாரிசு நடிகராக வளர்ந்து கொண்டு வருகிறார் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் நேரடியாக வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு வெளியான ஏஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அவரது மகனான சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் புரமோஷனில் சூர்யா சேதுபதி பேசிய வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக புகார் எழுந்தது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா பேசும் போது, நான் வேறு அப்பா வேறு என பேசியிருந்தது விமர்சனங்களை சந்தித்தது. பீனிக்ஸ் திரைப்படம் வரும் 4-ம் தேதி…
திருமணத்திற்கு பிறகும் கூட, கணவனோ, மனைவியோ வேறுஒருவருடன் தகாத உறவு வைத்துக் கொள்வதும், அதற்கு உடந்தையாக இருக்கும் துணையை கொல்வதும் அவ்வப்போது நடந்து வரும் ஒரு நிகழ்வு. ஆனால் சமீபத்தில் வடமாநிலங்களில் திருமணமான பெண்கள் சில நாட்களிலேயே காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்வது தொடர்கதையாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சோனம் ரகுன்ஷி என்ற பெண், தனது தேனிலவின் போது கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. அதேப் போன்றதொரு சம்பவம் பீகாரிலும் நடந்தேறியுள்ளது. பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் குஞ்சா. இவருக்கு கடந்த மே மாதம் பிரியான்ஷூ என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 45 நாட்களுக்கு பிறகு, தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் புதுமனைவி. அதன்படி கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி இரவு நபிநகர், லெம்போகாப் பகுதியருகே, பிரியான்ஷூ சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கின்…
தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2021 – 23ம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய, 1,182 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஒப்பந்ததாரர்கள் லாபமடையச் செய்ததன் மூலம் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
HOLLYWOOD WALK OF FAME என்பது அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம். இது ஹாலிவுட் வுல்வார்ட் மற்றும் வைன் ஸ்ட்ரீட் ஆகியவற்றில் உள்ள நடைபாதையில், திரைப்படம், தொலைக்காட்சி, இசை, வானொலி, நாடகம் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களை கவுரவிக்கும் வகையில் நட்சத்திர வடிவிலான பதக்கங்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிரபலத்தின் பெயர் மற்றும் அவர்கள் சாதனை புரிந்த துறையைக் குறிக்கும் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். 1960ல் தொடங்கப்பட்டு, ஹாலிவுட் சேம்பர் ஆப் காமர்ஸால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், புதிய பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நட்சத்திரம் வழங்கப்படுகிறது. இது உலகளவில் புகழ்பெற்ற ஒரு கவுரவமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள இந்த HOLLYWOOD WALK OF FAME-க்கு இந்தியாவிலிருந்து தீபிகா படுகோனே தேர்வாகியுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா, நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு துவா…
கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 247 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து ஏர் இந்தியா விமானங்கள் உட்பட பல விமானங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வாஷிங்டனுக்கு நேற்று (02.07.2025) ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. வழக்கமாக ஆஸ்திரியாவின் வியன்னாவில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்படும். இதனால் விமானம் வியன்னாவில் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டும், முடியவில்லை. அதனால் பயணிகள் அனைவரும் வியன்னாவில் இறக்கி…