Author: Editor TN Talks
தமிழக அரசின் இரு முக்கியத் துறைகளான பள்ளிக்கல்வித்துறை, வணிகவரித் துறை ஆகியவற்றில் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பவும், தகுதியான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கவும் தமிழக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது என்று பாமக செயல் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முதன்மைத் துறை வணிகவரித்துறை ஆகும். அத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வணிகவரி அலுவலர், உதவி ஆணையர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படாததால் 200க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியிடங்களுக்கான பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, அதை செயல்படுத்த அரசு தயாராக இல்லை. அதனால், அத்துறையில் வரி வசூல் பாதிக்கப்படுவதுடன், பணியில் உள்ள அதிகாரிகளுக்கு தேவையற்ற…
2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இணைத்தால் தேர்தல் களம் கடும் போட்டியாக மாறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். சிபிஎம் கடந்த தேர்தலை ஒப்பிடும் போது இந்த முறை அதிக தொகுதிகளை கோரும் என தெரிவித்துள்ள சண்முகம். முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு மாநில முதலாளித்துவக் கட்சியாக திமுகவை சிபிஎம் கருதுகிறது, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலத்திலிருந்தே இந்தக் கருத்தை சிபிஎம் கொண்டுள்ளோம். திமுகவின் முக்கிய குணம் மாறவில்லை. திராவிட மாடல் அனைவரையும் உள்ளடக்கியது என்று முதல்வர் ஸ்டாலின் கூறிவருவதாகவும் ஆனால் அது நிறைவேறிவிட்டதா? என்ற கேள்வியை சண்முகம் எழுப்பியுள்ளார். சிவகங்கை லாக் அப் மரணம் குறித்தான கேள்விக்கு … திமுக ஆட்சி பொறுப்பு வந்த பிறகு 24 என் கவுண்டர் நடந்துள்ளதாகவும். தேர்தல் நேரத்தில் திமுக இதற்கு பதிலளிக்க வேண்டும். திமுக ஆட்சியில் மனித…
கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். சம்பவத்தின் பின்னணி: மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில், கோவில் பணியாளர் சக்தீஸ்வரன் முக்கிய சாட்சியாக உள்ளார். தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை தாக்கிய வீடியோவை தனது செல்போனில் பதிவு செய்து, அதை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். பாதுகாப்பு கோரிக்கைக்கான காரணம்: இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா என்ற தனிப்படை காவலர் ரவுடிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், அவர் ஏற்கனவே ஜூன் 28 அன்று தன்னை மிரட்டியதாகவும் சக்தீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது நீதிமன்றத்தில் ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளதால், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இரு மகன்களில் மூத்த மகனான விஜய பிரபாகரன் அரசியலிலும், இளைய மகனான சண்முக பாண்டியன் தந்தையைப் போல் சினிமாவிலும் காலூன்றி வருகின்றனர். 2015ம் ஆண்டில் ’சகாப்தம்’, 2018-ல் ’மதுர வீரன்’ போன்ற படங்களில் நடித்தவர், தொடர்ந்து இயக்குநர் அன்பு இயக்கத்தில் ’படைத்தலைவன்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் ’கொம்பு சீவி’ என்ற படத்தில் நடித்துள்ளார் சண்முக பாண்டியன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என தொடர்ந்து நகைச்சுவை கலந்த குடும்ப படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பொன்ராம். இவரது இயக்கத்தில் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அவருடன் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசயமைத்து…
“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 1 ஆம் தேதி வைத்தார். இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி பகுதியிலும், அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை கூறி (வீட்டுக்கு வீடு) மக்களை தேடிச் சென்று பரப்புரையை தி.மு.க.வினர் இன்று முதல் 45 நாட்கள் நடத்துகின்றது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், வாக்குச்சாவடிதோறும் 30 சதவீதம் வாக்காளர்களை தி.மு.க உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவித்தார். இதையடுத்து, இந்த உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை ஜூலை 1 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நேற்று திமுகவின் நிர்வாக ரீதியான 76 மாவட்டங்களிலும் “ஓரணியில் தமிழ்நாடு” விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று தமிழகம் முழுவதும்…
இன்றைய காலகட்டத்தில் ஒருவரால் செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது. காலை எழுந்து முதன் முதலில் நாம் காணுவது செல்போனாக தான் இருக்கும். அதேப் போல் இரவு தூங்கும் முன்பு கடைசியாக பார்ப்பதும் செல்போனாக தான் இருக்கும். அப்படியிருக்க ஒருநாள் செல்போனோ அல்லது நெட்வொர்க்கோ இல்லை என்றால் அன்றைய தினம் அனைவருக்கும் பித்து பிடித்தாற் போல் ஆகிவிடும். அப்படியிருக்க, நடிகை சமந்தா 3 நாட்கள் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு இருந்துள்ளாராம். இது குறித்து அவர் பகிர்ந்த கருத்து ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “என் கையில் எப்போதும் வைத்திருக்கும் செல்போன் குறித்து எனக்கு ‘திடீர்’ சிந்தனை எழுந்தது. இதையடுத்து 3 நாட்கள் என் செல்போனை ‘சுவிட்ச்-ஆப்’ செய்தேன். யாருடனும் பேசவில்லை. யாரையும் தொடர்புகொள்ளவும் இல்லை. யாரையும் பார்க்கவும் இல்லை. புத்தகம் படிப்பது, எழுதுவது என எந்த வேலையும் செய்யவில்லை. 3 நாட்கள் என் மூளைக்கு முழு ஓய்வு தந்தேன். இது…
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுகவின் மாபெரும் வீட்டுக்கு வீடு பரப்புரை இயக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. இந்த பரப்புரையின் ஒரு பகுதியாக, திமுகவினர் தங்கள் சொந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று மக்களைச் சந்திக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளையும் 100% சென்றடையும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ‘மண், மொழி, மானம் காக்க தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும்’ முன்னெடுப்பாகக் கருதப்படும் இந்த பரப்புரையில், எதிர்க்கட்சியினர் வீடுகளுக்கும் திமுகவினர் இன்று முதல் நேரில் சென்று மக்களைச் சந்திக்கவுள்ளனர். இந்த வீட்டுக்கு வீடு பரப்புரை, வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு மக்களின் ஆதரவைத் திரட்டவும், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோயில் நிர்வாகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், காவல்துறையினர் விரைந்து செயல்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்ப் படையினர் கோயில் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் நுணுக்கமாக ஆய்வு செய்தனர். நீண்ட நேர சோதனைக்குப் பிறகு, வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனையடுத்து, காவல்துறையினர் இந்த மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணையின் முதல் நாள், மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் காலை முதல் இரவு வரை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது. மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று திருப்புவனம் காவல் நிலையம் அருகேயுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் காலை 10:45 மணிக்கு விசாரணையைத் தொடங்கினார். இரவு 10 மணி வரை நீடித்த இந்த விசாரணையில், பல்வேறு தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. விசாரணை ஒரு பார்வை: காவல்துறை அதிகாரிகள்: முதலில், திருப்புவனம் ADSP சுகுமாறன் மற்றும் திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நகை காணாமல் போனது தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட CSR, FIR ஆவணங்கள் மற்றும் காவல் நிலைய, கோவில் CCTV DVR பதிவுகள்…
வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினார். அவருக்கு அந்நாட்டு அதிபர் மஹாமாவால் சிறப்பு வரவேற்பு அளித்தார். பிரதமர் நரேந்திர மோடி கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினார். அவரை கானா ஜனாதிபதி ஜான் டிராமானி மஹாமோ விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார். Landed in Accra, Ghana. I’m honoured by the special gesture of President John Dramani Mahama for welcoming me at the airport. Our nations look forward to working together to strengthen our long-standing relationship and explore fresh avenues for collaboration. 🇮🇳🇬🇭@JDMahama pic.twitter.com/HDONiVt7tr — Narendra Modi (@narendramodi) July 2, 2025 இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினேன். ஜனாதிபதி ஜான் டிராமானி மஹாமோ விமான நிலையத்திற்கே வந்து என்னை வரவேற்றது…