Author: Editor TN Talks
சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு மிக முக்கிய வசதியாக மாறியிருக்கிறது மெட்ரோ ரயில் சேவை. சென்னை மெட்ரோவில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மட்டும், மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் விவரத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோ ரெயில் சேவையை நடப்பாண்டு ஜனவரி மாதம் 86,99,344 பேர், பிப்ரவரி மாதம் 86,65,803 பேர், மார்ச் மாதம் 92,10,069 பேர், ஏப்ரல் மாதம் 87,89,587பேர், மே மாதத்தில் 89,09,724 பேரும் பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 92,19,925 பேர் பயன்படுத்தியுள்ளனர். அதிகபட்சமாக ஜூன் 27-ந்தேதி 3,72,503 பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளனர். கடந்த மாதத்தில் பயண அட்டைகளை 6,09,226 பேரும், க்யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 42,07,124 பேரும், சிங்கார சென்னை அட்டையை 44,03,575 பேரும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பரமக்குடி-ராமநாதபுரம் இடையே ரூ.1,853கோடி மதிப்பில் 4வழி தேசிய நெடுஞ்சாலை… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…
தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.1,853 கோடி செலவில் கலப்பின ஆண்டுத்தொகை மாதிரியில் அமைக்கப்பட உள்ளது. தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான 2-வழி தேசிய நெடுஞ்சாலை எண் 87, அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதன் காரணமாக குறிப்பாக அதிக மக்கள் தொகை நடமாட்டம் கொண்ட பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் உள்ள முக்கிய நகரங்களில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், இந்தத் திட்டத்தின்கீழ் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண்-87 இனி 4-வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். இதன் மூலம் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். மேலும், நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை உறுதி…
பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை எட்டு நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கியுள்ளார். இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீண்டகால பயணமாக அமைந்துள்ளது. இந்த பயணத்தில் அவர் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் உள்ள ஐந்து நாடுகளுக்குச் செல்கிறார். இந்தியாவுக்கும் உலகளாவிய தென் பகுதிகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. பயணத் திட்டம்: கானா (ஜூலை 2 & 3): கடந்த 30 ஆண்டுகளில் கானாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். இது இவருக்குமான முதல் கானா பயணம். டிரினிடாட் அண்ட் டொபாகோ (ஜூலை 3 & 4): இங்கு அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜென்டினா: பிரேசில் (ஜூலை 5 – 8): பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோவிலில் நகை பணம் தொலைந்த விவகாரத்தில் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமார் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை CBI அல்லது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். ரூ.50,00,000 இடைக்கால நஷ்ட ஈடாக அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு வழங்கி, சம்பந்தப்பட்ட காவலர்களின் மீது இந்தியச் சட்டப்பிரிவு 103 (கொலை) உட்பட வழக்கு பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து, காவல்துறையினர் வன்முறைகளை தடுக்கும் வகையில் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் ஹென்றி ஆஜராகி, பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு தாக்கிய புகைப்படங்கள் மற்றும் காவல்துறையினர் அடித்த வீடியோ நீதிபதிகளிடம் காண்பித்தார். தொடர்ந்து, தாக்குதல் நடத்தும் போது…
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திரு. அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன்.* *இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல்.* *இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.* *நேற்றைய தினம் , 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது.* *இன்று சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணைக் கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்துக்கப்பட்டு வருகிறது.* *துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு எனது வருத்தத்தை…
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. எத்தனை விபத்துகள்? எத்தனை உயிர்கள்? இன்னும் எத்தனை முறை தான் நான் சுட்டிக்காட்ட வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு? பளபளக்கும் போட்டோஷூட் வீட்டுக்கு சென்றவர், ஒருமுறை உண்மையான பட்டாசு ஆலைக்கு சென்று ஆய்வு செய்திருந்து பாதுகாப்பு குறித்த உத்தரவுகளை பிறப்பித்திருந்தால், இவ்விபத்தை தடுத்திருக்கலாம் அல்லவா? பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்யாமல், தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளை கண்டுகொள்ளாத ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். சின்னக்காமன்பாட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் பேசி ஆறுதல் கூறினார். தமிழக அமைச்சரும், சிவகங்கை மாவட்டச் செயலாளருமான பெரியகருப்பன், இன்று மடப்புரத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்றார். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், அங்கிருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டார். உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரருடன் முதலமைச்சர் செல்போனில் பேசினார். அப்போது, திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று கூறினார். மேலும் கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும் என்றும் அவர் கூறினார்.
நகை காணாமல் போன வழக்கில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி இளைஞர் அஜித்குமாரின் படுகொலைக்கு நீதிகேட்டு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வருகிற 3-ந் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு.. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 03.07.2025…
திருவண்ணாமலையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் இருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை நகர எல்லைக்கு உட்பட்ட தாமரை நகர் கோரிமேடு 5-வது தெருவில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை பார்ப்பதற்காக தேனி மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கோட்டை முத்து என்பவர் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களும் அந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் கோட்டை முத்து என்ற வாலிபர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தியதில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் சுனில்(16). என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கத்தியால் குத்திய இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த மாணவனும் , கத்தியால்…
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க மேற்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது :- ஒன்றிய அரசால் தமிழகத்திற்கு இழைக்கப்படுகிற அநீதிகளை எடுத்துச் சொல்லியும், தமிழ்நாட்டிற்கு வழங்கக் கூடிய நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் மறுத்து வருவதையும், கீழடி உள்ளிட்ட நம்முடைய தொன்மைகளை வெளியிடுவதற்கும், காலம் தாழ்த்துவதும், மறுப்பதும் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நிலைகளை தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்களுக்கு எதிராக செயல்படுத்தக் கூடிய சூழ்நிலை இந்த நான்கு ஆண்டுகளில், உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்திட்ட சாதனை திட்டங்களை, குறிப்பாக கோவை மாவட்டத்தில் இந்த நான்கு ஆண்டுகளில் கோவையில் 10 தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வென்று இருந்தாலும் கூட, 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினராக முதல்வரை முன் நின்று கோவை மக்களுக்கு கட்சி திட்டங்களை வழங்கி இருக்கிறார். வீடு வாரியாக வாக்காளர்களை சந்தித்து இதனை எடுத்துச் சொல்லி, ஓரணியில் தமிழ்நாடு என்ற கழகத்தின் முன்னெடுப்பை…