Author: Editor TN Talks
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித்குமார் (30) உயிரிழந்த சம்பவத்தில் குற்றப்பிரிவு போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு 27ம் தேதி வெள்ளிகிழமை காலை 9.30 மணிக்கு காரில் அழைத்து வந்தார். காரை நிகிதா ஓட்டி வந்துள்ளார். சிவகாமியால் நடக்க முடியாததால் கோயில் அலுவலகத்தில் வீல்சேர் கேட்டுள்ளார். கோயில் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த தனியார் பாதுகாவலர் அஜித்குமார் (30) வீல்சேர் கொண்டு வந்துள்ளார். அப்போது நிகிதா தாயாரை வீல் சேரில் அழைத்துச் செல்ல வேண்டியுள்ளதால் காரை பார்கிங்கில் நிறுத்துமாறு கூறியுள்ளார். தரிசனம் முடிந்தபின் மீண்டும் காரை எடுத்துவர சொல்லி காரில் ஏறி திருமங்கலம் கிளம்பியுள்ளார். திருப்புவனம் அருகே செல்லும் போது நகையை எடுத்து அணிய கூறியுள்ளார். நகையை எடுக்க முயன்ற போது கட்டைப்பையில் துணிகள் சிதறி கிடந்துள்ளன. நகைகள் அடங்கிய பர்ஸ் மாயமாகி இருந்தது. மீண்டும் கோயிலுக்கு வந்து அஜித்குமாரிடம் கேட்ட…
இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 2029-ஆம் ஆண்டிற்குள் 15 லட்சமாக உயர்த்தப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானாந்தா சோனாவால் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை துறைமுகத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானாந்தா சோனாவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் முதன்முறையாகவும் உலகளவில் இரண்டாவது முறையாகவும் நடைபெறும் இந்த மாநாடு, கப்பல் பயணிகளின் போக்குவரத்தை மேம்படுத்தவும் சுற்றுலாவின் வளர்ச்சிக்கும் உதவும் என்றார். தற்போது 5 லட்சம் பயணிகள் கப்பல் போக்குவரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், வரும் 2029-ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டில் மட்டும் 15 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சர்பானந்தா தெரிவித்தார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் தொடர் முயற்சியின் மூலமாக…
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படும் விவகாரத்தில் நாளை முதல் வேட்புமனு வினியோகம் தொடங்க உள்ளது. வேட்புமனுக்கள் சமர்பிக்க 17ம் தேதி கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களில் உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2 ஆயிரத்து 984 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதன்படி, இதற்கான வேட்புமனுக்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதன்படி நகராட்சி நிர்வாக இயக்குனரம், பேரூராட்சிகள் இயக்குனரகம், ஊரக வளர்ச்சி இயக்குனரகம் ஆகியவற்றின் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன், குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் சொத்து விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும். இந்த…
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. ஜூலை 1-ந் தேதி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முறைப்படி ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை முதலமைச்சர் அறிவிக்க உள்ளார். அடுத்து 38 மாவட்டங்களிலும் பொறுப்பு அமைச்சர்கள்/மாவட்டச் செயலாளர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள். ஜுலை 2-ந் தேதி 76 திமுக மாவட்டங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்கள் நடத்தப்படும். ஜூலை 3-ந் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று மக்களை சந்திப்பார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் எல்லாரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்ல உள்ளனர். திமுக செயல்வீரர்கள் ஒருவர் விடாமல் வீட்டுக்கு வீடு சென்று பரப்புரைச் செய்வதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டள்ளது. வீட்டுக்கு வீடு பரப்புரை– ‘டோர் டூ டோர்’! என்ற அடிப்படையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், ஒரு பெண், ஒரு இளைஞர், BLC உறுப்பினர்…
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது” என சினிமா Review எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா? தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது. தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில்…
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற காவலாளி, போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசை நோக்கி 9 கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார். அவற்றின் விவரம் வருமாறு,.. 1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை? 2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்? 3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து “உண்மையை” வரவழைக்க மாவட்ட SP திரு. ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும்…
பிரபல இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா உள்ளிட்டோர் குடும்பமாக சேர்ந்து ஆன்லைன் பங்குச்சந்தை மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கனவே மனைவி அஸ்மிதா கொடுத்த புகாரில் youtuber விஷ்ணுவை அதிரடியாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடும்பத்தின் உறுப்பினர்களை தனித்தனியாக பழகி மோசடி செய்து இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு குடும்பம் மோசடி செய்ததாக புகார் Forex ஆன்லைன் டிரேடிங் செய்வதாக கூறி சுமார் ஒரு கோடி 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு. தன் பெயரை பயன்படுத்தி டிரேடிங் மோசடி செய்ததாக மனைவி அஸ்மிதா புகார் அளித்த நிலையில், மனைவி அஸ்மிதா மீதும் வழக்கு பதிவு செய்துள்ளார்.
விழுப்புரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்திக்கு மாற்ற போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் இரங்கநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, நண்பர் என்ற முறையில் தேர்தல் செலவிற்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாயை 5 தவணைகளாக வழங்கினேன். தேர்தல் முடிந்ததும் 2023ம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் என 5 காசோலைகளை வழங்கினார். ஆனால், காசோலையில் பணம் இல்லை என திரும்பவிட்டது. இதையடுத்து, பணத்தை திரும்பி உத்தரவிடக்கோரி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாக்டர் லட்சுமணன் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், திமுக மாவட்ட செயலாளராகவும் இருப்பதால் வழக்கு விசாரணை சரியாக நடத்தவில்லை. விசாரணை நடைபெறாமல் தடுக்க…
பதவிக்காக தந்தையை விட்டு சென்று தமிழ் பண்பாட்டிற்கு அன்புமணி தவறான முன்னுதாரணம் ஆகிவிட கூடாது:- பாமகவில் நிர்வாகிகளை நீக்கவும், நியமிக்கவும் டாக்டர்.ராமதாசிற்கே முழு அதிகாரம் உள்ளது என சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ அருள் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாசை நேரில் சந்திக்க வருகை தந்த சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏவும், பாமக இணை பொதுச் செயலாளருமான அருள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்:- பாமக நிறுவனராக ராமதாஸ் கடந்த 45 ஆண்டுக் காலம் இருந்து பொறுப்பாளர்களை நியமிப்பதும், நீக்குவதையும் செய்து வருகிறார். தலைவர் முதல் கிளைச் செயலாளர் வரை நிர்வாகிகளை நியமிக்க கூடிய அதிகாரம் படைத்தவர் ராமதாஸ் மட்டுமே. பாமகவில் தலைவர்களாக தீரன், ஜி.கே.மணி, அன்புமணி போன்றோர் இருந்த போதே நிர்வாகிகளை மாற்றுவதையும், நீக்குவதையும் ராமதாஸ் தான் செய்து வந்தார். அவருக்கே முழு அதிகாரம் உள்ளது. ராமதாசுடன் இருப்பவர்கள்…
விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்த நீருக்கு வரி விதிப்பு என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாமிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நிலத்தடி நீர் எடுப்பை முறைப்படுத்திடும் திட்டத்தை அமலாக்கிட 1,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் (ஜல் சக்தி துறை ) ஹெச்.எம்.பாட்டீல், டெல்லியில் அறிவித்து உள்ளார். நிலத்தடி நீர் கட்டுப்பாடற்ற முறையில் வெளியே எடுத்து பயன்படுத்தப்படுகிறது. என இதை முறைப்படுத்திடும் முறையில் விவசாயிகள் சாகுபடிக்காக வெளியே எடுக்கும் நீரை அளவீடு செய்து விவசாயிகளுக்கு வரி விதித்திடவும், மாநில அரசுகளோடு இணைந்து இத்திட்டத்தை அமலாக்கிட 1600 கோடி ரூபாய் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது எனவும் அறிவித்து உள்ளார். தமிழகத்தின் நீர் தேவை அண்டை மாநிலங்களை நம்பியே உள்ளது. தமிழகத்திற்கு தேவையான நீர் பங்கீடு பாதகமாக உள்ள நிலையிலும், வேளாண்மை உற்பத்தி பெருகி வருவதற்கு அடிப்படை நிலத்தடி…