Author: Editor TN Talks
வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது என்றும் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் மாநில மின்துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, ஏற்கனவே விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தற்போது மீண்டும் மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால், இதுகுறித்து மீண்டும் அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை என்றும் மின் கட்டணம் தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
லண்டனில் இன்று தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான கார்லோஸ் அல்காரஸ், ஜானிக் சின்னர், நோவக் ஜோகோவிச் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். டென்னிஸ் உலகின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், இன்று லண்டனில் உள்ள ஆல் இங்கிலாந்து கிளப்பில் தொடங்குகிறது. வரும் ஜூலை 13-ம் தேதி ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியுடன் முடிவடையும் இத்தொடரில், நடப்பு சாம்பியனும், பிரெஞ்சு ஓபனை வென்றவருமான கார்லோஸ் அல்கராஸ், தனது பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள களமிறங்குகிறார். உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர், 24 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற நோவக் ஜோகோவிச் ஆகியோர் அவருக்கு கடும் சவாலாக இருப்பார்கள். ஆடவர் இரட்டையர் பிரிவில் நான்கு வீரர்கள் இந்தியாவிலிருந்து களமிறங்குகின்றனர். இந்தியாவின் மூத்த வீரரான ரோஹன் போபண்ணா, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லேவுடன் இணைந்து களமிறங்குகிறார். யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவேயுடன், ரித்விக் பொல்லிபள்ளி, ருமேனியாவின் நிக்கோலஸ் பேரியன்டோஸுடன் இணைந்து விளையாடுகின்றனர். இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, மெக்சிகோவின்…
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் ஜல் கங்கா சம்வர்தன் அபியான் இன்றுடன் நிறைவடைகிறது. காண்ட்வாவில் நடைபெறும் மாநில அளவிலான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி மெய்நிகர் முறையில் கலந்து கொண்டு இதில் உரையாற்ற உள்ளார். இந்த நடவடிக்கையின் போது, மாநிலத்தில் 2 ஆயிரத்து 48 கோடி ரூபாய் செலவில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணை குளங்கள் கட்டப்பட்டன. மேலும், 40 லட்சம் மக்களின் பங்கேற்புடன் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நீர் ஆதாரங்கள் புதுப்பிக்கப்பட்டன. இன்றைய நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் ஆயிரத்து 518 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நீர் பாதுகாப்பு பணிகளைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார். நீர்வளத் துறையின் 4 நீர்ப்பாசனத் திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி கட்டமைப்புகள் அழிக்கப்படவில்லை என சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ரஃபேல் க்ரோசி கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலுமாக அழித்துவிட்டதாகக் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களுக்குள் யுரேனியம் செறிவூட்டலை தொடங்குவதற்கான திறனை ஈரான் கொண்டுள்ளதாகவும் ரஃபேல் க்ரோசி தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தாக்குதல்களால் சேதம் ஏற்பட்டாலும், அது முழுமையான அழிவை எட்டவில்லை என்றும், ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் தளம் அப்படியே உள்ளதாகவும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் கூறியுள்ளார். ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பை அமெரிக்கா முற்றிலுமாக அழித்ததாகக் கூறிய அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் கருத்துக்கு முரணாக அணுசக்தி அமைப்பின் தலைவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டுக்கான அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை ஆயுஷ் ஷெட்டி படைத்துள்ளார். அமெரிக்காவின் கவுன்சில் பிளப்ஸ் நகரில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் பேட்மின்டன் போட்டியின் இறுதி சுற்றில், இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையான் யங்கினை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 21-18, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் பட்டத்தினை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதையும் படிக்க: பூரி ஜெகநாதர் கோயில் ரதயாத்திரை உயிரிழப்பு.. ரூ. 25 லட்சம் நிவாரணத்தொகை! இதைப்போலவே, மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை தான்வி சர்மா, சீனாவில் பிறந்து அமெரிக்காவுக்காக ஆடி வரும் பெய்வென் ஜாங் உடன் மோதினார். இறுதி வரை போராடிய தான்வி சர்மா 11-21, 21-16, 10-21 என்ற செட் கணக்கில் பெய்வென் ஜாங்கிடம்…
தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவது கேள்வி குறியாக இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் நடைபெற்ற பிரதமர் மோதியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். பாலியல் வன்கொடுமைகள், காவல்துறை அத்துமீறல்கள், போதைப்பொருள் புழக்கம் போன்றவற்றை சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், வேண்டாம் இனி திமுக வேண்டாம் என்ற தாரக மந்திரத்தை தேர்தல் வரை மக்களிடம் எடுத்துச் செல்வோம் எனக் கூறினார். நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த அவர், மதுரையில் இந்து முன்னணி நடத்திய மாநாடு தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறினார். தாமிரபரணி நதி தூய்மைப்படுத்துதல் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு அதற்கு உதவும் என்றும் நயினார்…
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பேசினார். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததாகவும் அதிமுகவை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது எனவும் பழனிசாமி உறுதிப்படத் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி பலமானதாக அமையும் அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் முதற்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்து ஸ்டாலின் பதற்றமாக இருக்கிறார் என்றும் தெரிவித்தார். இதையும் படிக்க: புதிய புறநகர் பேருந்து முனையம்.. நவம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்! திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளோம் எனக் குறிப்பிட்ட பழனிசாமி அதிமுக பொன் விழா கண்ட கட்சி என்பதால் அதை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது என்றார். 2026 சட்டமன்றத் தேர்தலில்…
பருவமழையின் தாக்கம் பெரிதாக இல்லையெனில் நவம்பர் மாதத்திற்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அடுத்த குத்தம்பாக்கத்தில் சுமார் 414 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து முனையத்தில் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் தனித்தனியாக வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. 41 கடைகள், எட்டு டிக்கெட் கவுண்ட்டர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிவறைகள், 1,800 இருசக்கர வாகனங்கள் மற்றும் 250 கார்கள் நிறுத்தும் வசதியுடன் மாநிலத்தின் முதல்முறையாக குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை வசதியோடு இந்தப் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இதையும் படிக்க: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்.. 8 மீனவர்களுக்கும் 8ஆம் தேதி வரை சிறை! இந்நிலையில் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர் பாபு நேற்று மாலை…
இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் ஜூலை எட்டாம் தேதி வரை சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீன்பிடித் தடைக்காலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிந்த நிலையில், ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று கரைக்கு திரும்பி கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 8ம் தேதி வரை அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் மற்றும் படகை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…
மக்கள் ஆதரவு உள்ளதால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமோக வெற்றி பெறும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பாமல் இருப்பதை கண்காணிப்பதற்காக 2023 ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும், அது தற்போது நீதித்துறையின் மறு ஆய்வில் இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது கைபேசிகளின் உபயோகம் மிகவும் அதிகரித்து விட்டதால் அனைவரும் தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதாகவும் ஆனால் அதில் உண்மை தன்மையும், நாட்டின் இறையாண்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதையும் படிக்க: அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களால் ராமதாஸ் உடனிருப்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்: பாமக எம்எல்ஏ அருள் பகீர் குற்றச்சாட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கூறியுள்ள கருத்துகள், மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் மத்திய இணையமைச்சர்…