Author: Editor TN Talks
பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தாருக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. ரத யாத்திரையின் போது, சாரதா பாலி என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஒடிசா மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். இதையும் படிக்க: 8 மணி நேரம் முன்பே வெளியாகும் ரயில் பயணிகள் அட்டவணை.. அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு! மேலும், உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தாருக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே முன்பதிவு அட்டவணைகளை தயாரிக்க ரயில்வே வாரியத்திற்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்புதான் முன்பதிவு செய்த பயணிகளின் அட்டவணை தயாரித்து வெளியிடப்படுகிறது என்றும், இந்த நடைமுறை பயணிகளுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு, அந்த நடைமுறையை மாற்றி ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே பயணிகளின் அட்டவணையை தயாரிக்க ரயில்வே வாரியம் ஆலோசனை வழங்கியது. அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பயணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாதவாறு இதை படிப்படியாக செயல்படுத்துமாறு ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இனி ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரம் முன்பாகவே பயணிகள் அட்டவனை வெளியிடப்படவுள்ளது. இதையும் படிக்க: ஜெய்சங்கர் 3 நாள் அமெரிக்க பயணம்.. குவாட்…
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். நாளை நடைபெற உள்ள குவாட் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவின் அழைப்பின் பேரில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முதல் அமெரிக்காவிற்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதிக்கான பொதுவான பார்வையை முன்னெடுப்பதற்கான புதிய திட்டங்களில் குவாட் குழு கவனம் செலுத்தும் என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதையும் படிக்க: குடியரத் தலைவர் முர்மு உ.பி பயணம்.. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்! நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒரு கண்காட்சியையும் அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைக்க உள்ளார். உலகளாவிய பயங்கரவாத செயல்களின் பேரழிவு தாக்குதலையும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட சர்வதேச சமூகம் எடுத்த நடவடிக்கைகளையும் இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்ட உள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று முதல் இரண்டு நாள்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார். பரேலி மற்றும் கோரக்பூரில் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார். பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் 11வது பட்டமளிப்பு விழாவில் திரௌபதி முர்மு கலந்து கொள்ள இருக்கிறார். அதன் பிறகு, விமானம் மூலம் கோரக்பூருக்குச் செல்லும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு மூன்று நிறுவனங்களின் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இதையும் படிக்க: 89 நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ்.. ராகிங் எதிர்ப்பு விதிமுறைகள் பின்பற்றாததால் யுஜிசி நோட்டீஸ்! மேலும், எய்ம்ஸ் கோரக்பூரின் தொடக்க பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ள உள்ளார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு பரேலி மற்றும் கோரக்பூரில் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக, நாடு முழுவதும் உள்ள 89 கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான்கு IIT-கள், மூன்று IIM-கள் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உட்பட, 89 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராகிங் தொடர்பான UGC விதிமுறையின்படி, UGC உடன் இணைக்கப்பட்ட ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மாணவர்களிடமிருந்து இணக்க ஒப்பந்தம் மற்றும் ராகிங் எதிர்ப்பு ஒப்பந்தங்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இதையும் படிக்க: மாவோயிஸ்ட்டுகளுடன் இனி பேச்சில்லை.. உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்! ஆனால், அதன் படி, இந்த கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து ஒப்பந்தங்களைப் பெற்று சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து, இந்த நோட்டீசை யுஜிசி அனுப்பியுள்ளது.
பழங்குடியினர் மற்றும் பாதுகாப்பு படையினரை கொன்ற மாவோயிஸ்ட்டுகளுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் நடைபெற்ற கிசான் சம்மேளனத்தில் உரையாற்றிய அவர், இடதுசாரி தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணையுமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவை மாவோயிஸ்டுகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான மத்திய அரசின் உறுதியை அமைச்சர் அமித் ஷா மீண்டும் வலியுறுத்தினார். இதையும் படிக்க: இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிக்கை! தெலங்கானா மாநிலத்தை, மாவோயிஸ்ட்டுகளின் கூடாரமாக மாற அனுமதிக்க வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில், ஆதிதிராவிடத் துறை அமைச்சர் மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகர காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் அவரை வரவேற்றனர். இன்று இரவு கோவை மாநகரில் உள்ள நேவல் ஆபீஸர் மெஸ் வளாகத்தில் அமைச்சர் ராஜநாத் சிங் தங்குகிறார். அமைச்சரின் மனைவி திருமதி. சாவித்திரி சிங் (வயது 72), உடல்நலக் குறைவு காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அமைச்சரின் குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக இருந்து கவனித்து வருகின்றனர். இந்த நிலையில், மனைவியைப் பார்ப்பதற்காகவே மத்திய அமைச்சர் கோவை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் வருகையையொட்டி, கோவை மாநகரில் காவல்துறையினரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.…
சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினரான அருள், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் குறித்துப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ராமதாஸ் உடன் இருப்பவர்களின் உயிருக்கு அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “கனத்த இதயத்துடன் மிகுந்த மனவேதனையுடன்…” செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இரா. அருள், “கனத்த இதயத்துடன் மிகுந்த மனவேதனையுடன் உங்களை நான் சந்திக்கிறேன். சில செய்திகளைச் சொல்ல வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டு இருக்கிறேன்” என்று தனது உரையைத் தொடங்கினார். பாமகவில் சாதாரண தொண்டர்களை எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்களாக ஆக்கி அழகு பார்த்தவர் மருத்துவர் ராமதாஸ் என்று குறிப்பிட்ட அவர், தன்னைப்போன்ற சாமானியனையும் எம்.எல்.ஏ. ஆக்கியவர் ராமதாஸ்தான் என்று பெருமிதத்துடன் கூறினார். அன்புமணியின் பேச்சு: “உச்சகட்ட வேதனை” அன்புமணி ராமதாஸ், ராமதாஸைப் பற்றிப் பேசிய சில வார்த்தைகள் **”உச்சகட்ட வேதனை”**யை ஏற்படுத்தியுள்ளதாக…
தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் அரசு தொடர்ந்திடவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும், பொதுக்குழு எடுத்த முடிவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிப்பது என்று மதிமுக நிர்வாகக் குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் எழும்பூரில் உள்ள தாயகத்தில் இன்று நடைபெற்றது. இதில் வைகோ சிறப்புரை ஆற்றினார். இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2026 தேர்தலில் திமுகவுடன் இணக்கமாக நிற்பது என்ற முக்கிய தீர்மானம் நிறைவேறியது. அரசியலமைப்பு சாசனத்தில் மதச்சார்பற்ற, சோசலிச எனும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை சிறுமைப்படுத்திய காணொலிக்கு கண்டனம்…
வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக் காலம் கடந்த 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16ஆம் தேதி முதல் தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்திருப்பார்கள் எனும் நிலையில், இருமுறை அவர்கள் மீது இலங்கை அரசின் ஆதரவுடன் இயங்கி வரும் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இப்போது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. தமிழக…