Author: Editor TN Talks
தனிமனித பொருளாதார வளர்ந்தால் தான் முதல்வர் கூறியது போல் 2030ல் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் தமிழக வளர்ச்சி அடையும் என்று கள்ளக்குறிச்சியில் புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து அமைச்சர் எ.வ. வேலு பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம்,மற்றும் தினசரி காய்கறி அங்காடி கட்டிடங்கள்,குடிநீர் அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றிற்கான ரூ.46.30 கோடி மதிப்பிலான புதிய கட்டிடப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொது பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில்:- தமிழக முதல்வர் 2030ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஒரு ட்ரில்லியன் டாலர் ஆக உயரும் என கூறியுள்ளார்.அந்த பொருளாதார வளர்ச்சி என்பது தனி மனித பொருளாதார வளர்ச்சி -மற்றும்…
ருத்ராட்சம் அணிவது குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்து பிற்போக்குத்தனமானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கோவை மாவட்ட கல்வித் துறை சார்பில் “கற்றல் அடைவு” குறித்த ஆய்வு கூட்டம் புரூக்பீல்ட்ஸ் சாலையில் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கோவை மாவட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவருக்கும் மதம் சார்ந்த நம்பிக்கை உள்ளது அதில் யாருடைய தலையிடும் இருக்க கூடாது, பள்ளிக்கூடம் என்பது பொதுவான ஒரு இடம் அங்கு அறிவு சார்ந்த விஷயங்களை சொல்லித் தாருங்கள் என்று அறிவுரை கூற வேண்டும் என்றார். அதை விட்டு ருத்ராட்சம் அணிவது போன்று கூறுவதை தான்…
என்னுடைய தந்தை டாக்டர் ராமதாஸ் அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணிக்கு வேண்டாம் என சொல்லப் போகிறேன் என ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் மத்தியில் அன்புமணி பேசியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாசின் கருத்துக்களை மறுக்கும் வகையில் அன்புமணி பேசியுள்ளார். அதாவது தன்னுடைய தந்தை ராமதாஸ் சொல்லி தான் பாஜகவுடன் 2024ல் கூட்டணி பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் சரி என்று கூறியதால் தான் பாஜகவினர் தைலாபுரம் வீட்டிற்கு வந்தனர் என்றும் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது என்றும் தற்போது இல்லை என ராமதாஸ் மறுக்கிறார் என்றும் அன்புமணி விமர்சித்துள்ளார். அவர் வயது முதிர்வு காரணமாக ஒருகுழந்தை போல மாறிவிட்டார் அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். அதேபோன்று அதிமுகவின் சிவி சண்முகம் தைலாபுரம் தோட்டம் வந்து சென்றபோது அவர் எதற்காக வந்தார் என கேட்டதாகவும் அதற்கு அவர் பத்திரிகை வைப்பதற்காக வந்து சென்றார் என…
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தனது பிரசாரப் பயணத்தை ஜூலை 7 ஆம் தேதி தொடங்குகிறார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு தொகுதியிலும் ‘ரோட் ஷோ’ நடத்தி, தேர்தல் பரப்புரை வாகனத்தில் நின்றவாறு உரையாற்ற திட்டமிட்டுள்ளார். முதற்கட்டப் பயணம் எடப்பாடி பழனிசாமியின் முதற்கட்ட சுற்றுப்பயணம் ஜூலை 7 ஆம் தேதி மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடங்கி, ஜூலை 21 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நிறைவடைய உள்ளது. இந்த முதற்கட்ட பயணத்தில், வழக்கமாக தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்படும் டெம்போ டிராவலர் பரப்புரை வாகனத்தையே அவர் பயன்படுத்த உள்ளார். பிரசார உத்தி ஒவ்வொரு தொகுதியிலும் ‘ரோட் ஷோ’: எடப்பாடி பழனிசாமி தனது பயணத்தின்போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு இடத்தில் ‘ரோட் ஷோ’ நடத்த உள்ளார். கேரவான் பிரசாரம்: மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தேர்தல் பரப்புரை வாகனத்தில் (கேரவான்) நின்றவாறு அவர்…
திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில், எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வது குறித்து சிபிசிஐடி போலீஸார் சட்ட ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை காஞ்சிபுரம் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஐபிஎஸ் அதிகாரியான ஏடிஜிபி ஜெயராம் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகப் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அவரது மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது. இதனால், சிபிசிஐடி போலீஸார் பூவை ஜெகன்…
தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ராமசாமி (52) என்பவரை, திமுக நகரச் செயலாளர் பாலமுருகன் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, பாலமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவப் பின்னணி கடந்த ஜூன் 24 ஆம் தேதி, நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராமசாமி, நகராட்சி ஆணையாளருடன் வரி வசூல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திமுகவைச் சேர்ந்த தேனி வடக்கு நகரப் பொறுப்பாளரும், அல்லிநகரம் நகராட்சி நகர் மன்றத் தலைவர் ரேணுபிரியாவின் கணவரும், 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான பாலமுருகன், ராமசாமியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, பாரஸ்ட் ரோட்டில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற ராமசாமியிடம், “பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன…
சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அழைப்பின் பேரில் டெல்லி செல்கிறேன். வருகிற 1-ம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவின் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரை தேர்வு செய்யும் நிகழ்வு நடக்கிறது. அதற்காக அழைக்கப்படுகிறேன் என நினைக்கிறேன். மக்களை சந்திக்காமல் ஏன் தி.மு.க. நிர்வாகிகளை மட்டும் சந்திக்கிறார்…. மக்கள் மற்றும் போராடி வரும் மருத்துவர்கள் உள்ளிட்டவர்களிடம் ஒன் டூ ஒன் நடத்த வேண்டும். பெரியார் விலை போக மாட்டார் என நினைத்தோ நாடாளுமன்ற தேர்தலின் போது கனிமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பெரியார் படத்தை நீக்கி பனைமரம் புகைப்படத்தை வைத்தவர் கனிமொழி. பாரதிய ஜனதா கட்சி மற்றும் அ.தி.மு.க. கூட்டணி ஆளும் கட்சிக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. அமித்ஷா ஒரு தெளிவான பேட்டி அளித்து…
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது தொடர் சரிவை சந்தித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து எதிர்பாராத வகையில் உயர்ந்த தங்கம் விலை, பல்வேறு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் போன்ற காரணங்களால் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.9,320 ஆகவும், ஒரு பவுன் ரூ.74,560 ஆகவும் விற்பனையாகி வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஜூன் 21 ஆம் தேதி முதல் தங்கம் விலை சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.9,235 ஆகவும், ஒரு பவுன் ரூ.73,880 ஆகவும் இருந்தது. ஜூன் 22 ஆம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஜூன் 23 ஆம் தேதி பவுனுக்கு ரூ.40 குறைந்து*ரூ.73,840 ஆக விற்பனையானது. கடந்த ஜூன் 24 ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம்…
சனாதன தர்மம் குறித்த தனது விமர்சனத்திற்காகத் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) ஆஜரானார். அவருக்கு ₹1 லட்சம் பிணைத் தொகைக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னணி கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல ஒழிக்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகளிடையே கடும் கண்டனத்தை எழுப்பியதுடன், உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. பெங்களூரு வழக்கு இந்தக் கருத்துக்கு எதிராக, பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பரமேஷ் என்பவர், கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்குத் தொடர்ந்தார். இதேபோல், சனாதன ஒழிப்பு மாநாட்டை…
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை காணொளி காட்சி மூலம் நடக்கிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடந்து முடிந்த திமுக பொது குழு கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை ஜூலை மாதம் தொடங்கும் என்று அறிவித்திருந்தார். அதன்படி வரக்கூடிய ஜூலை ஒன்றாம் தேதி முதலமைச்சர் ஒரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை காண பணிகள் தொடங்க இருக்கிறது இதற்காக ஆலோசனை மேற்கொள்வதற்காக இன்று மாவட்ட செயலாளர் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பு…