Author: Editor TN Talks
இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலும் பருவமழை பெய்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா மற்றும் குல்லு மாவட்டங்களில் கடந்த 25-ம் தேதி முதல் மழை பெய்தது. மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்த்டால், ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் அடித்துசெல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். அதனடிப்படையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4-ம் தெதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், வருகிற 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை, பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும், நம் வெற்றித் தலைவரின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது. எனவே, கழக சட்ட விதிகளின்படி மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், கழக மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி, தலைவர் ஒப்புதலுடன் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25-ம் தேதி அதிகாலை இந்து முன்னணி வடக்கு ஒன்றிய தலைவர் பாலமுருகன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி சுமன் மற்றும் அவரது நண்பர் தமிழரசன் ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் நரசிம்மப் பிரவீன் மற்றும் அஸ்வின் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், தலைமறைவாக உள்ள இருவருக்கும் சம்பவத்தன்று தமிழரசன் இருசக்கர வாகனம் கொடுத்து உதவியுள்ளார். மேலும் சுமன், அஸ்வின் இடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தலைமறைவாக உள்ள இருவரும் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சுமன் தமிழரசன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி…
தி.மு.க. இலக்கிய அணி -கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை – மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 30 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு இலக்கிய அணி, காலை 11 மணிக்கு கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, பகல் 12 மணிக்கு மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில், தி.மு.க. இலக்கிய அணி -கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை – மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளின் மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் இலவச வைஃபை இப்போது கிடைப்பதால், விமானப் பயணிகளின் கோரிக்கைகளில் ஒன்று நனவாகியுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) அதிகாரிகள் கூறுகையில், இந்த வசதி T2 சர்வதேச முனையத்தில் கிடைக்கிறது, மேலும் இதுவரை கிட்டத்தட்ட 200 பயணிகள் இந்த சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். “ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்னர் இந்த வசதியை கிடைக்கச் செய்ய நாங்கள் திட்டமிட்டிருந்தோம், மேலும் காலக்கெடுவை பூர்த்தி செய்ய விரும்பினோம். மொத்தம் நான்கு கியோஸ்க்குகளை நாங்கள் நிறுவியுள்ளோம் – புறப்பாடு மற்றும் வருகை மண்டபங்களில் தலா இரண்டு. பயணிகள் அவற்றைப் பயன்படுத்த உதவுவதற்காக கியோஸ்க்குகளுக்கு அருகில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏதேனும் ஆரம்பக் குறைபாடுகள் இருந்தால், அவற்றை உடனடியாக சரிசெய்வோம், ”என்று ஒரு அதிகாரி கூறினார். பயணிகள் 500 எம்பி வரை டேட்டாவைப் பயன்படுத்தலாம். பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ்களை ஸ்கேன் செய்தவுடன், ஒரு சீட்டில் வைஃபை அணுகுவதற்கான OTP…
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் பருவமழை பெய்யத் தொடங்கிய நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒகேனக்கல் அருவி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணையின் நீர்மட்டம் 121அடியாக உள்ளது. நீர் இருப்பு 44.322 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 52,829கன அடியாக உள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவு நீர் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து மட்டும் 51,000கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஒகேனக்கலுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆகையால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கத்தில் கொகைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அத்தோடு அவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜாமின் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனியார் நிறுவனத்திற்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் இருக்கிறது. இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிடும் என்று கூறினார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பியதற்கு, எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும் எனவும் அதில் பாஜக பங்கு இருக்கும் என்றார். தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடும் எனவும் முதலமைச்சர் அதிமுகவில்…
1988ஆம் ஆண்டு திண்டுக்கல் – கரூர் ரயில் பாதைக்கு இடம் கொடுத்தவருக்கு இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட 12 பொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் சாரங்கபாணி (வயது 70), சவுந்தரராஜன் (60). இவர்களுக்கு சொந்தமான நிலம், கடந்த 1988ஆம் ஆண்டு திண்டுக்கல்-கரூர் ரெயில் பாதை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.1 கோடியை இழப்பீட்டு தொகையாக அரசு நிர்ணயம் செய்தது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த தொகை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காலக்கெடு முடிந்தும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து சாரங்கபாணி, சவுந்தரராஜன் குடும்பத்தினர் திண்டுக்கல் முதன்மை சப்-கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு, அரசு நிர்ணயித்த இழப்பீட்டு தொகையை வட்டியுடன் ரெயில்வே துறையில் இருந்து வசூலித்து மனுதாரர்கள் குடும்பத்துக்கு வழங்க…
தவெக தலைவர் விஜய், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் திருச்சி செல்வதற்காக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.. அதிமுக கூட்டணியை பொறுத்த அளவில் பாஜக தான் வழி நடத்துகிறது என்பதை அமித்ஷாவை வைத்து அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரையில் அதிமுக அமைதியாக இருக்கிறது பாஜக தான் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. அதனால் அந்த கூட்டணியை பாஜக தான் வழி நடத்துகிறது என பார்வை உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக நிலை கொள்வதை எப்படி அனுமதிக்க முடியும் தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான குரல் கடந்த அரை நூற்றாண்டாக வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.. அதிமுக என்ற எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற திராவிட தலைவர்கள் வந்த திராவிட கட்சியிலிருந்து சென்றவர்தான் பாஜகவின் தலைவர் நைனார் நாகேந்திரன் அப்படி…