Author: Editor TN Talks
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, “ஓரணியில் தமிழ்நாடு” என்ற திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை திமுக முன்கூட்டியே தொடங்கியுள்ளது. அடுத்த 45 நாட்களில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை நேரில் சந்தித்து, 2 கோடி பேரை கட்சியின் உறுப்பினராக்கும் முக்கிய முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. ஒட்டுமொத்த வாக்காளர்களில் 30 சதவிகிதம் பேரை அணி திரட்டும் இந்த முயற்சி, தேர்தல் களத்தில் திமுகவின் வேகமான பயணத்தைக் குறிக்கிறது. மொபைல் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை – பயிற்சி முகாம்: “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை பணிகளை மொபைல் செயலி மூலம் நடத்த திமுகவினர் தயாராகி வருகின்றனர். இதற்காக, அண்ணா அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா ஆகியோர்…
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும், ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து 2022-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலத்தை அனுப்பின. அதன் மூலம் உலகில் முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையை பெற்றது. அதனை தொடர்ந்து ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் கடந்த 10-ம் தேதி ஏவப்பட இருந்தது. தொழில்நுட்பம், வானிலை காரணம் என 6 முறை இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக, கடந்த 22-ந்தேதி விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என நாசா தெரிவித்தது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணிக்க உள்ளனர் என்றும், இந்திய விண்வெளி…
பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சிக்குள்ளே விரிசல் ஏற்பட்டுள்ளது. தனது உயிர்மூச்சு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவர் என கூறிய ராமதாஸ், அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்தவர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி, புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இதனால் கட்சிக்குள் குழப்பம் நீடிக்கிறது. இந்த நிலையில், என்னுடன் இருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டும் தான் எம்.எல்.ஏ., சீட் எனவும், பா.ம.கவில் எனக்கே அதிகாரம் உள்ளது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்கே வந்து இருக்கும் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் தான் தேர்தலில் நிற்க போகிறவர்கள். இவர்களை தான் நான் தேர்ந்து எடுப்பேன். இவர்கள் தான் எதிர்கால சட்டசபை உறுப்பினர்கள். ஏனென்றால் எனக்கு எல்லா அதிகாரமும் உண்டு. அதனால் தான் நான் இந்த கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்று, நல்லவர்களை, வல்லவர்களை சட்டசபை உறுப்பினராக ஆக்குவேன் என்று இந்த நேரத்தில் உங்கள் மூலம்…
தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற குமரேசன் (32) என்ற நபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மாலை கூடலூர் குமுளி சாலையில் கூடலூர் வடக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டபோது, அவர் கையில் வைத்திருந்த சாக்குப் பையில் 5 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டனர். உடனடியாக காவல்துறையினர் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், கைதானவர் தேனி மாவட்டம் கம்பம் வடக்குப்பட்டியைச் சேர்ந்த குமரேசன் என்பதும், கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கஞ்சாவைக் கடத்துவதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, குமரேசன் மீது வழக்குப் பதிவு செய்த கூடலூர் வடக்கு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், கேரளப் பகுதியில்…
கேரளாவில் கடந்தாண்டு ஜூலை 30-ம் தேதி பெய்த கனமழையால், முண்டகை, சூரல்மலை உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்தது. அத்தோடு 400-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் மாயமாகினர். ஒட்டுமொத்த இந்தியாவையும் நிலைகுலைய வைத்த இந்த துயர சம்பவத்தில் இருந்து கடந்த ஒரு வருடமாக மக்கள் மீண்டு வந்து கொண்டு உள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் கேரளாவில் மழை கோரத்தாண்டவம் ஆடுவதால், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு கேரளாவில் பருவமழை விரைவாகத் தொடங்கியது. அதன்படி புன்னம்புழா ஆற்றில் நீர்மட்டம் மழையால் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே இருந்த பெய்லி பாலம், கடந்தாண்டு நிலச்சரிவின் போது கட்டப்பட்டது. பாலத்தின் மறுபுறம் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், வயநாடு, முண்டகை பகுதியில் புதிய நிலச்சரிவு…
ரயிலில் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம்… மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.. ரயிலில் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் – குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது… AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க…
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”வெறும் ஜாதி அரசியலையும், மத அரசியலையும், ஜாதி பெருமிதங்களையும், மத பெருமிதங்களையும் அரசியலாக இங்கு மக்கள் மத்தியில் அள்ளி இறைத்து கொண்டு இருப்பவர்கள் மத்தியில், இடதுசாரி பார்வை கொண்ட கருத்தியல், இந்த மண்ணுக்கு தேவை. தேசிய அளவில் அது வலிமை பெற வேண்டும். அதற்கு தேசிய பார்வையும் தேவை என்கிற அடிப்படையில் இயங்கும் இயக்கம் தான் விடுதலை சிறுத்தை கட்சி. அதனால் தான் எல்லோரும் தேர்தல் கணக்கு போடுகிற போது, நாம் தேசத்தின் பாதுகாப்பை பற்றி, கவலைப்பட்டு கொண்டு இருக்கிறோம். பேரணி நடத்தி கொண்டு இருக்கிறோம். எத்தனை இடங்களில் நீங்கள் போட்டியிட போகிறீர்கள் என்று திரும்ப, திரும்ப கேள்வி கேட்கிறார்கள். பாவம் அவர்களுக்கு இன்னும் சிறுத்தைகளை மதிப்பிட தெரியவில்லை. திருமாவளவனை மதிப்பிட செய்ய முடியவில்லை என்பது தான் என்னுடைய பார்வை. ஏதோ திருநீற்றை அழித்துவிட்டான் திருமாவளவன்…
சமீபகாலமாக படிப்பு என்றாலே மாணவர்களுக்கு அச்சம் அதிகரித்து வருகிறது. அத்தோடு படிக்கச் சொன்னாலோ, அல்லது செல்போனில் கேம் விளையாட வேண்டாம் என்றாலோ தற்கொலை செய்து கொள்வதும், விபரீத செயல்களில் ஈடுபடுவதாக பல சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் நெல்லையில் கல்லூரிக்கு போக சொன்ன தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தங்கப்பாண்டி(19) பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும், ஆகையால் கல்லூரிக்கு செல் என தங்கப்பாண்டியை மாரியப்பன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தங்கப்பாண்டி, தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத்ஹனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தங்கப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செக் குடியரசு நாட்டில் ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இப்போட்டில் முதல் வாய்ப்பில் பவுல் செய்து அதிர்ச்சியளித்தார் நீரஜ். இரண்டாம் வாய்ப்பில் 83.45மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்தவர், மூன்றாவது வாய்ப்பில் 85.29மீட்டர் தூரமும், 4-வது வாய்ப்பில் 82.17மீட்டரும், 5-வது வாய்ப்பில் 81.01 மீட்டர் தூரமும் எறிந்தார். இறுதி வாய்ப்பிலும் பவுல் செய்தார் நீரஜ். இதன் மூலம் மற்றவர்களைவிட அதிகபட்சமாக அதிகபட்சமாக மூன்றாவது வாய்ப்பில் 85.29 மீட்டர் எறிந்த இவர், முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தினார். அதே போல் 6 வாய்புகளில் 2 வாய்ப்புகளை தவறவிட்ட தென்ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த தவ் ஸ்மித் அதிகபட்சமாக 84.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் அனைத்து வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார். இருப்பினும் 83.63…
தி. நகரில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு பெட்ரோல் போட வந்த மருதம் கமாண்டோ ஃபோர்ஸ் படை காவலர் சக்திவேல் (27) மீது காரில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவலர் சக்திவேல் அரசு வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக வந்தபோது, ஷிஃப்ட் காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அவர்கள் போன் செய்து மற்றொரு நபரை வரவழைத்து, காவலர் சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தான் காவல்துறை என்பதை சக்திவேல் தெரிவித்த போதிலும், மர்ம நபர்கள் அவரை கொடூரமாகத் தாக்கி, அவதூறாகப் பேசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவலர் சக்திவேல் அளித்த புகாரின் பேரில், பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.