Author: Editor TN Talks

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மதுபாட்டில் மீதும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, காலி பாட்டில்களை வாடிக்கையாளர்கள் திரும்பக் கொண்டு வரும்போது அந்த 10 ரூபாய் திருப்பி அளிக்கப்படுகிறது. இந்த புதிய பணிகளுக்கு தற்போதுள்ள டாஸ்மாக் ஊழியர்களை நியமிக்காமல், தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும், காலி பாட்டில்களை சேகரிக்க தனி இடம் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.…

Read More

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 20-ம் தேதி லீட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 364 ரன்கள் எடுக்க, இங்கிலந்துக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 4-வது நாளில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில், இங்கிலாந்திற்கு 350 ரன்கள் தேவைப்பட்டது. இங்கிலாந்து வீரர்கள் பொறுமையாக ஆட, முடிவில் இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து விரட்டிப்பிடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்டில் இரு அணிகளும்…

Read More

போதைப்பொருள் வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நடிகர் கிருஷ்ணாவைக் கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் கிருஷ்ணாவின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதால், சைபர் கிரைம் நிபுணர்களின் உதவியுடன் அவரது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தில், நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்ததையடுத்து, போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சீரடி அதிவேக விரைவு ரயிலில் வேலூர் காட்பாடிக்கு பயணம் மேற்கொண்டார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டிடம் முதல் ரயில் நிலையம் வரை ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தளபதி வாழ்க என கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும், திமுக கொடிகளை அசைத்தும் தொண்டர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். முதலமைச்சரை வழியனுப்ப அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். மக்களவை உறுப்பினர் ஜெகத் ரட்சகன் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் காட்பாடி வரை ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் புறப்படும் முன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் இருந்து வெளியே வந்து தொண்டர்களை நோக்கி கை அசைத்தார்.…

Read More

இந்தி முன்னணி நடிகர் ஆமிர்கான் நடித்துள்ள புதிய படம் ‘சித்தாரே ஜமீன் பர்’, ஜூன் 20ஆம் தேதி வெளியானது. ஆர். எஸ். பிரசன்னா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெனிலியா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமஸ் மிஸ்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி மொழியில் உருவாகிய இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மனவளர்ச்சி குறைபாடுள்ளோருக்கான கூடைப்பந்து பயிற்சியாளராக நீதிமன்றத்தின் ஆணைப்படி நியமிக்கப்படும் ஆமிர்கான் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ச்சிபூர்வமாக சொல்லும் கதையம்சம் இப்படத்திற்கு முக்கிய வலுவாக உள்ளது. இந்நிலையில், நடிகர் ஆமிர்கான் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்களை குடியரசுத் தலைவர் அலுவலகம் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. ஆனால், அந்த சந்திப்பின் காரணம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Read More

சென்னையில் பச்சை மற்றும் நீல வழித் தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. நாள்தோறும் மெட்ரோ ரயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அடிக்கடி மெட்ரோ சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் காலை பச்சை வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை சுமார் 22 கிலோ மீட்டர் வரை பபச்சை வழித்தடம் நீள்கிறது. கோயம்பேடு, அசோக் நகர் இடையே தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் நீல வழித்தடமான விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் எவ்வித தடங்களும் இல்லை. கிட்டத்தட்ட 40 நிமிடங்களாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சீரானதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 7.18 மணிக்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு 7.58 மணிக்கு சீராகி, ரயில்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது. அலுவலக நேரம் தொடங்கும் முன்பு இந்த கோளாறு…

Read More

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’- உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி அரங்கு 25-6-2025 புதன்கிழமை காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.முக. அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, அணிச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதுமுள்ள தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்கிறார்கள். இவர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடி வாரியாக உள்ள சமூக வலைத்தள உறுப்பினர்களுக்கு ஜூன் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூலை 1ந் தேதி மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கிவைக்கப்படவுள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு, இந்த செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

லீட்ஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை என்ற பெயரிலான இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 20-ந் தேதி லீட்ஸ் நகரில் நடைபெற்றது. டாஸில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா தனது முதலாவது இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 5-வது சதமாகும். கேப்டன் சுப்மன் கில் 147 ரன்களும், துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் 134 ரன்களும் குவித்தனர். கே.எல்.ராகுல் தன் பங்கிற்கு 42 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து…

Read More

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இடையே கடும் வாக்குவாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் முறையாக நியமிக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை நோக்கி கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்த விஜயபாஸ்கர் 45 வயதுக்கு மேல் ஆட்கள் போடக்கூடாது என நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் கரூரை பொறுத்தவரை கட்சியில் நிர்வாகிகள் இல்லாத நிலை உள்ளது குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் இல்லவே இல்லை என்ற நிலை இருக்கிறது. இதை சொல்வதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லையா நீ எல்லாம் என்ன நிர்வாகியா என உரிமையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி முறையாக பணியாற்ற முடியவில்லை என்றால் எழுதிக் கொடுத்துட்டு…

Read More

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்க இருப்பது, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா? மல்டி ஸ்பெஷாலிட்டி விளம்பரக் கட்டடமா? நோயாளிகளின் உயிருடன் விளையாடத் துடிக்கும் முதல்-அமைச்சருக்கு கண்டனம் தெரிவிப்பததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பலநூறு கோடி செலவுகளில் கமிஷன் ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு பிரம்மாண்ட கட்டடங்களைக் கட்டுவது மட்டுமே சுகாதாரத் துறையின் முன்னேற்றம் என்று இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு நினைத்துக்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என்று பெயரிட்டு அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தை நாளை (25.6.2025), முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read More