Author: Editor TN Talks
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் செய்தி வெளியிட்டுள்ளார். My heartfelt thanks to all the Political leaders, Film and Media industry friends, well-wishers, En Nenjil Kudiyirukkum my dear beloved @TVKPartyHQ members and followers from across the world for your overwhelming love and birthday wishes! Your support fuels my journey to serve… — TVK Vijay (@TVKVijayHQ) June 23, 2025 இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தியின் விவரம் வருமாறு.. என் பிறந்தநாளையொட்டி வாழ்த்து கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகம் மற்றும் ஊடக உலகத்தைச் சேர்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள், தவெக தலைமைச் செயலக நிர்வாகிகள்,…
உலகின் தலையில் மெல்லிய இழையில் ஆடிக்கொண்டிருக்கிறது அணுகுண்டு “வக்கிர மனங்களால் உக்கிரமாகுமோ யுத்தம்” கலங்குகிறது உலகு ஈரானின் அணுசக்தித் தளங்களில் டொமாஹக் ஏவுகணைகள்வீசி அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி தான் கட்டமைத்த நாகரிகத்தைத் தானே அழிப்பதன்றி இதுவரை போர்கள் என்ன செய்தன? போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் அணுகுண்டு முட்டையிடும் அலுமினியப் பறவைகள் அதனதன் கூடுகளுக்குத் திரும்பட்டும்
திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட ரயில் சேவைகள்: திருச்சி – காரைக்கால் டெமு ரயில் (வண்டி எண் 76820): இன்றும் (திங்கட்கிழமை), ஜூன் 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில் திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதாவது, திருவாரூர் – காரைக்கால் இடையே சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் – திருச்சி டெமு ரயில் (வண்டி எண் 76819): இன்றும், ஜூன் 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில் காரைக்கால் – திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருவாரூரில் இருந்து மாலை 4.15…
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்; திமுக ஆட்சியில் குறையும் முதலீடுகள்.. முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம்..
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. தமிழ் நாடு “நம்பர் ஒன்” மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு தரவுகள் அம்பலப்படுத்துகின்றன. ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டை ஈர்க்கிறேன்’ என்று பொம்மை முதலமைச்சர் 2022-ல் துபாய் மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் என்ன ? லூலூ மால், நோபுள் ஸ்டீல் என தொடக்கமே ஏமாற்று மாடல்தான்.. 2023-ல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகள், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின், 2024 செப்டம்பரில் அமெரிக்கா சுற்றுப் பயணம் என்று விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ? விடியா திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும்…
ஈரான் அதிபர் மசூத் பெஷேஸ்கியனிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறி, அந்த நாடு மீது கடந்த 13-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் அணு ஆயுதத் தளங்கள், அணு விஞ்ஞானிகள் உள்ளிட்ட அணுசக்தித் துறையை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. அத்துடன் அந்த நாட்டின் ராணுவ நிலைகள், எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட பிற பகுதிகளையும் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகிறது. தங்கள் போர் விமானங்கள் மூலம் ஈரான் முழுவதும் பரவலாக இஸ்ரேல் அதிரடித் தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. இதற்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேல் மீது அலை அலையாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வருகிறது. இதில் இஸ்ரேலும் பலத்த சேதங்களைச் சந்தித்து வருகிறது. மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இந்த ராணுவ மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. நேற்றும் இரு நாடுகளும்…
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு கோலாகலமாக தொடங்கியது. இதனையொட்டி, அங்குள்ள திடலில், அறுபடை வீடு முருகன் கோவில்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு, தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலை, கோவில் பின்னணியில் இருப்பது போன்று இந்த மாநாட்டுக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேடையில் அறுபடை வீடுகளின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு நடுவில் முருகப்பெருமான் வேலுடன் நிற்கும் பிரமாண்ட சிலை போன்ற வடிவமைப்பும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. இருக்கைகள் அமைக்கப்பட்டு நேற்று அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றன. மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது முருக பக்தர்கள் மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பில் 5 லட்சம் பக்தர்கள் அமரும் வகையில்…
1962-ல் மாநிலங்களவையில் தனது கன்னிப்பேச்சில் I belong to the Dravidian stock என்றார் பேரறிஞர் அண்ணா. அந்த ஒரு வார்த்தைக்கே ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் அதிர்ந்து போனதை அவைக்குறிப்புகளில் காண்கிறோம். அன்றுமுதல் இன்றுவரை திராவிடம் என்றாலே வடஇந்தியா ஒவ்வாமையுடன் அணுகுவதையும், தென்னிந்தியாவிலேயே கூட புரிதல் இல்லாத நிலைமையும் தான் காணப்படுகிறது. இன்று உலக அளவில் கம்யூனிசம், சோஷலிசம் போன்ற சித்தாந்தங்கள் பரந்து விரிந்திருக்கிறது என்றால் அது உயர்கல்விக் கூடங்களில், ஆய்வுத் தளங்களில் மீண்டும் மீண்டும் பயிலவும் விவாதிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டதால் தான். அந்த சித்தாந்தங்களை எதிர்ப்பவர்கள் கூட அதனை பல்கலைக்கழங்களில் பாடமாக பயில வேண்டிய ஒரு சூழல் கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்டதே அவை இன்றளவும் பேசுபொருளாக இருக்கக் காரணம். ஆனால் நூற்றாண்டு கால சித்தாந்தம், பல்லாயிரம் ஆண்டுகால நிலப்பரப்பின் பெயராக இருந்தும் திராவிடம் என்றால் தமிழ்நாட்டைத் தாண்டி பலபேருக்கு தெரிவதில்லை. சுதந்திரத்திற்கு பிறகு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியை விடவும் பல…
தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் பா.ஜ.க வை 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் எனவும் தமிழ் கடவுள் முருகனை ஏமாற்றி வேஷம் போட முடியுமா ? பா.ஜ.க வேசம் சில மக்களை ஏமாற்றலாம். முருகனை ஏமாற்ற முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ ? அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழ் கடவுள் முருகன் புறக்கணிப்பார் என்றார். தமிழகத்தில் முருகன் மாநாடு எதற்காக நடத்துகிறார்கள் அயோத்தியில் ராமர் நாடியதற்காக நடத்தினார்கள் ? என கேள்வி எழுப்பியதோடு, அயோத்தியில் ராமர் பா.ஜ.க வை கைவிட்டு விட்டார். மக்களை நம்பி பா.ஜ.க கிடையாது. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது பா.ஜ.க என்று குற்றஞ்சாட்டினார். தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி தராமல் மறுதலிக்கிறார்கள் என்றார். காங்கிரஸ் இருக்கும் வரை தமிழகத்தில் இருமொழிக்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தபடி, ஈரானின் பர்தாவ் (Fordow), நடான்ஸ் (Natanz) மற்றும் எஸ்பஹான் (Esfahan) ஆகிய மூன்று முக்கிய அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்திய அதிபர் டிரம்ப், இது ஈரானின் அணு ஆயுதத் திறனை அழிப்பதற்கான ஒரு வெற்றிகரமான நடவடிக்கை என்று தெரிவித்தார். “ஈரானின் முக்கிய அணு செறிவூட்டும் வசதிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன,” என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு B-2 பாம்பர் விமானங்கள் (stealth bombers) மற்றும் Tomahawk ஏவுகணைகள் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாக ஃபோர்டோ அணு ஆலையில் “பங்கர்-பஸ்டர்” குண்டுகள் வீசப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவின் இந்த…
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 51-வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமது கட்சி மூலம் விஜய் எடுத்திருக்கும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு, இந்தப் பிறந்தநாள் விழா முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவர் பெயரில் நற்பணிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளில் அவரது ஹிட் படங்கள் மறுவெளியீடாகி இருக்கின்றன. உலகம் முழுவதிலும் தமக்கிருக்கும் பெரும் ரசிகர்ப் படையின் நம்பிக்கையில் அரசியலில் இறங்கியிருக்கிறார் விஜய். அவரது இந்த முடிவை அலசுகிறது இந்தக் கட்டுரை. விஜய்க்கு எப்படி இந்த மாஸ்? இயக்குநர் எஸ்.ஏ.சியின் மகன் விஜய், நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் 1992-ம் ஆண்டிலிருந்து நடித்து வந்தபோது உருவ கேலிக்கு ஆளானார். பெரும் இயக்குநரின் மகன் என்றால் நடிக்க வந்துவிடுவதா என அடுத்தடுத்த படங்களில் விமர்சிக்கப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து தம்மை மேம்படுத்திக்கொண்டு, நடனத்திற்காகவும் குழந்தைத்தனம் மாறாத முகத்திற்காகவும், சாக்லேட் பாய் தோற்றத்திற்காகவும்…