Author: Editor TN Talks
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் களமிறங்கினர். மிக நிதானமாக ஆடத்தொடங்கிய இருவரும் வாய்ப்புள்ள பந்துகளை மட்டும் ரன்களாக மாற்றினர். 42 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுல், கார்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். பின்னர் ஜெய்ஸ்வாலுடன், கேப்டன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இந்த இணை பொறுப்புடனும், நிதானமாகவும் விளையாடியது. அதேசமயம், ஜெய்ஸ்வால் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.…
ஈரான், இஸ்ரேலுக்கு இடையிலான போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலால் அங்குள்ள இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, இருக்க இடம் இன்றியும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மீதான போர் எதிரொலியாக ஈரான் தமது வான்வெளியை மூடி இருந்தது. தற்போது இந்தியாவின் கோரிக்கையை ஏற்று வான்வெளியை திறந்துள்ளது. இந்த நிலையில், ஈரானில் இப்போதுள்ள அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற அங்குள்ள இந்திய தூதரகம் “ஆபரேஷன் சிந்து” என்ற பெயரில் நடவடிக்கை துவங்கி உள்ளது. இந்த ஆபரேஷன் மூலம் முதல்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஈரானில் இருந்து சாலை மார்க்கமாக அர்மேனியா தலைநகர் எரவான் எல்லை அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இந்தநிலையில், ஈரானில் இருந்து அடுத்த கட்டமாக 1000…
பீகார் மாவட்டம் சிவான் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சவுகான், விஜயகுமார் சின்ஹா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நான் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினேன். எனது வெளிநாட்டு பயணத்தின்போது இந்தியாவின் வளர்ச்சி குறித்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஆச்சரியமடைந்தனர். உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என நினைக்கின்றனர். நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிபெற பீகாரின் பங்கு முக்கியம். பீகாரில் காட்டாச்சியை கொண்டுவந்தவர்கள் மீண்டும் அந்த வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். உங்கள் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் குறி த்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பீகாரின் வளர்ச்சி…
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜூன் 20) தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு முதல் இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஜூன் 20 முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை மாணவர்கள் www.tngasain என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 18 ஆம் தேதி மாணவர் தரவரிசைப் பட்டியல் வெளியாகும். தொடர்ந்து, ஜூலை 21 முதல் 25 ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விருப்பக் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும். ஜூலை 28 ஆம் தேதி இடஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டு, மாணவர்கள் அதனை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கல்லூரிகளில் சேரலாம். ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கொடிகம்பங்களை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அக்கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு , இந்தியாவின் பெரிய கட்சியாக உள்ள எங்களது கட்சி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி செயல்பட்டு வருகின்றது. எங்களது கட்சியின் சின்னமான அருவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எங்களது கொடியை தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நிறுவி உள்ளோம். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் எங்களது கட்சி கொடி கம்பங்களை அந்தந்த மாவட்டங்களில் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஒரு சில இடங்களில் எந்தவிதமான முன்னறிவிப்பு இன்றியும் கொடிக்கம்பங்களை அகற்றி வருகின்றனர். ஆகவே மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற தடை…
மக்கள் பிரச்சனைக்காக அரசுக்கு எதிராக தொடர்ந்து நான் குரல் கொடுத்ததால் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் புதிய கலை கல்லூரி துவக்க விழாவில் கலந்து கொண்ட புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். உங்கள் மீது கூறப்பட்டிருக்கிற குற்றச்சாட்டிற்கும் நீதிமன்றம் உங்களை கண்டித்து இருப்பதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அரசுக்கு எதிராக மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் தொடர்ந்து பேசி வருகிறேன். மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி வருகிறேன. இந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக சம்பந்தமே இல்லாமல் என்னை சிக்க வைத்துள்ளார்கள். உயர்நீதிமன்றமும் சில கருத்துக்களை சொல்லி உள்ளது நீதிமன்றத்தை நம்புகின்றோம். நீதிமன்றத்திற்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். நான் என்ன தீவிரவாதியா அல்லது பயங்கரவாதியா ஊழல் செய்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது காவல்துறை.…
சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், பாஸ்போர்ட் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து விசாரித்த போது, கணவரின் கையெழுத்து பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பித்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்திருந்தார். கணவருக்கும் தனக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு தனது கணவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதால், கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி, ரேவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை. கணவரின் கையெழுத்து பெற வேண்டும் என்று வற்புறுத்துவதன் மூலம், ஒரு பெண்ணை கணவனின் உடமையாக கருதும் இந்த சமூகத்தின் மனப்பான்மையே மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் செயல் காட்டுகிறது. ஏற்கனவே கணவன் மனைவி…
டெல்லியில் இருந்து மகாராஷ்டிராவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கடந்த 12-ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடு பாதையில் இருந்து மேல் எழும்பிய சில நிமிடங்களிலேயே அங்கிருந்த மருத்துவக் கல்லூரியின் விடுதியில் விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட மொத்த 274 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறா, பறவை மோதியதா? என பல்வேறு காரணங்கள் இந்த விபத்துக்கு கூறப்பட்டு வருகிறது. பலரும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்று (20.06.2025) டெல்லியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. 150 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் மகாராஷ்டிரா வான்பரப்பில் நுழந்து, நடுவானில் பறந்து…
சன் குழும நிறுவனர் கலாநிதி மாறன், அந்நிறுவன பங்குகளை முறைகேடாக தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக, அவரது சகோதரர் தயாநிதிமாறன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், முரசொலி மாறன் உடல்நிலை சரியில்லாதபோது, சட்டவிரோதமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்குகளை மாற்றியதாகவும், இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்றும் தயாநிதி மாறன் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். ஒரு வாரத்திற்குள் பங்குகளைத் திருப்பித் தராவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய துறைகளிடம் புகார் அளித்து சன் குழும வணிகங்களை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும், சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று தயாநிதி மாறன் எச்சரித்துள்ளார். கலாநிதி மாறன், அவரது மனைவி உட்பட 8 பேருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டால், சன் டிவி நிறுவன பங்குகள் வீழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சன் டிவி நிறுவனம் மும்பை பகுங்கு சந்தைக்கு விளக்கமளித்துள்ளது. அதில், தயாநிதி மாறன் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை…
சிவகாசியை சேர்ந்த சமுத்திரவள்ளி, அலமேலு, காளீஸ்வரி, வேலுதாய் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், எங்கள் கணவர்கள் சிவகாசி எட்டக்காபட்டி தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தனர். இங்கு 2.12.2014-ல் நடைபெற்ற விபத்தில் கணவர்கள் உயிரிழந்தனர். எங்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் அரசுக்கு பரிந்துரை செய்தார். அதில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. எஞ்சிய ரூ.4 லட்சம் இழப்பீடு தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இந்த இழப்பீட்டு தொகை மற்றும் எங்கள் கல்வித்தகுதிக்கு ஏற்பட சத்துணவு மையங்கள் மற்றும் விடுதிகளில் வேலை வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ”வெடி பொருட் சட்டப்படி 15 கிலோ வரை வெடி பொருட்களை பயன்படுத்தும் பட்டாசு ஆலைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் வழங்கலாம். 15 கிலோ முதல் 500 கிலோ வரை…