Author: Editor TN Talks

திருமணத்திற்கு பிறகும் கூட, கணவனோ, மனைவியோ வேறுஒருவருடன் தகாத உறவு வைத்துக் கொள்வதும், அதற்கு உடந்தையாக இருக்கும் துணையை கொல்வதும் அவ்வப்போது நடந்து வரும் ஒரு நிகழ்வு. ஆனால் சமீபத்தில் வடமாநிலங்களில் திருமணமான பெண்கள் சில நாட்களிலேயே காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்வது தொடர்கதையாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சோனம் ரகுன்ஷி என்ற பெண், தனது தேனிலவின் போது கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. அதேப் போன்றதொரு சம்பவம் பீகாரிலும் நடந்தேறியுள்ளது. பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் குஞ்சா. இவருக்கு கடந்த மே மாதம் பிரியான்ஷூ என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 45 நாட்களுக்கு பிறகு, தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் புதுமனைவி. அதன்படி கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி இரவு நபிநகர், லெம்போகாப் பகுதியருகே, பிரியான்ஷூ சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கின்…

Read More

தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2021 – 23ம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய, 1,182 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஒப்பந்ததாரர்கள் லாபமடையச் செய்ததன் மூலம் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக…

Read More

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Read More

HOLLYWOOD WALK OF FAME என்பது அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம். இது ஹாலிவுட் வுல்வார்ட் மற்றும் வைன் ஸ்ட்ரீட் ஆகியவற்றில் உள்ள நடைபாதையில், திரைப்படம், தொலைக்காட்சி, இசை, வானொலி, நாடகம் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களை கவுரவிக்கும் வகையில் நட்சத்திர வடிவிலான பதக்கங்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிரபலத்தின் பெயர் மற்றும் அவர்கள் சாதனை புரிந்த துறையைக் குறிக்கும் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். 1960ல் தொடங்கப்பட்டு, ஹாலிவுட் சேம்பர் ஆப் காமர்ஸால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், புதிய பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நட்சத்திரம் வழங்கப்படுகிறது. இது உலகளவில் புகழ்பெற்ற ஒரு கவுரவமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள இந்த HOLLYWOOD WALK OF FAME-க்கு இந்தியாவிலிருந்து தீபிகா படுகோனே தேர்வாகியுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா, நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு துவா…

Read More

கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 247 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து ஏர் இந்தியா விமானங்கள் உட்பட பல விமானங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வாஷிங்டனுக்கு நேற்று (02.07.2025) ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. வழக்கமாக ஆஸ்திரியாவின் வியன்னாவில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்படும். இதனால் விமானம் வியன்னாவில் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டும், முடியவில்லை. அதனால் பயணிகள் அனைவரும் வியன்னாவில் இறக்கி…

Read More

நீட் தேர்வின் போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மே 4ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையில் அன்றைய தினம் பெய்த கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை… மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நாடு முழுவதும் 22…

Read More

போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஶ்ரீகாந்த் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஶ்ரீகாந்த், கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, இதே வழக்கில் கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி, எஸ்.ஹெர்மிஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை விசாரணைக்கு அழைத்த போது தாம் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்ததாக கூறினார். மேலும், மருத்துவ பரிசோதனையில் தாம் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாகவும் கிருஷ்ணாவின் கைது நடவடிக்கை அடிப்படை உரிமையை மீறிய செயல் என்றும் தெரிவித்தார். மேலும்,…

Read More

இந்தியாவில் மிகப்பெரிய வியாபார இடமாக பார்க்கப்படுவது ஐபிஎல் தொடர்கள் தான். வருடத்திற்கு ஒருமுரை நடைபெறும் இந்த ஐபிஎல் தொடர்பில் பணம் கோடிக்கணக்கில் விளையாடும். குறிப்பாக மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்சிங் என சூதாட்டங்களும் நடைபெறும். அப்படி கடந்த 2013-ம் ஆண்டு பிரிமியர் லீக் கிரிகெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் ஊழல் நடைபெற்றது. இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருண்ட காலகட்டம் எனலாம். இந்த ஸ்பாட் பிக்சிங்கில் ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அஜித் சந்திலா, அங்கீத் சவான் ஆகிய மூன்று வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டி போட்டது. இதே வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அங்கீத் சவான், பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்கிறார். மும்பை கிரிக்கெட் சங்கம் சவானை 14 வயதுக்குட்பட்ட மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் அங்கீத் சவானுக்கு 2013ம் ஆண்டு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது.…

Read More

தமிழக அரசின் இரு முக்கியத் துறைகளான பள்ளிக்கல்வித்துறை, வணிகவரித் துறை ஆகியவற்றில் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பவும், தகுதியான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கவும் தமிழக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது என்று பாமக செயல் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முதன்மைத் துறை வணிகவரித்துறை ஆகும். அத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வணிகவரி அலுவலர், உதவி ஆணையர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படாததால் 200க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியிடங்களுக்கான பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, அதை செயல்படுத்த அரசு தயாராக இல்லை. அதனால், அத்துறையில் வரி வசூல் பாதிக்கப்படுவதுடன், பணியில் உள்ள அதிகாரிகளுக்கு தேவையற்ற…

Read More

2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இணைத்தால் தேர்தல் களம் கடும் போட்டியாக மாறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். சிபிஎம் கடந்த தேர்தலை ஒப்பிடும் போது  இந்த முறை அதிக தொகுதிகளை கோரும் என தெரிவித்துள்ள சண்முகம். முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு மாநில முதலாளித்துவக் கட்சியாக திமுகவை சிபிஎம் கருதுகிறது, முன்னாள் முதல்வர்  அண்ணாதுரை காலத்திலிருந்தே இந்தக் கருத்தை சிபிஎம் கொண்டுள்ளோம். திமுகவின் முக்கிய குணம் மாறவில்லை. திராவிட மாடல் அனைவரையும் உள்ளடக்கியது என்று முதல்வர்  ஸ்டாலின் கூறிவருவதாகவும் ஆனால் அது நிறைவேறிவிட்டதா? என்ற கேள்வியை சண்முகம் எழுப்பியுள்ளார். சிவகங்கை லாக் அப் மரணம் குறித்தான கேள்விக்கு … திமுக ஆட்சி பொறுப்பு வந்த பிறகு 24 என் கவுண்டர் நடந்துள்ளதாகவும். தேர்தல் நேரத்தில் திமுக இதற்கு பதிலளிக்க வேண்டும். திமுக ஆட்சியில் மனித…

Read More