Author: Editor TN Talks
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோவையில் ‘அரபுக் கல்லூரி’ என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்காக 4பேர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் எனும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு கோவை அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்புத் தாக்குதலை, வெறும் சிலிண்டர் விபத்து என தி.மு.க., அரசு பூசி மொழுக முயன்ற நிலையில், அதற்கு அடுத்து தொடர்ச்சியாக பயங்கரவாத அமைப்புகளைச் சார்ந்தோர் தேசியப் புலனாய்வு அமைப்பால் கோவையிலிருந்து கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் தொடர்ச்சியாக நடந்து வரும் முதியோர்கள் கொலை, மறுபுறம் கோவில் சிலைகள் சேதம். இதற்கிடையில் மனதை அதிர வைக்கும் அளவிற்கு பயங்கரவாத அமைப்பினரின் புழக்கம் என கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளை மொத்தமாக அச்சுறுத்தல் வளையத்திற்குள் வைத்து மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு. தொழில் வளமும் கல்வி வளமும் நிறைந்து செழித்தோங்க…
இந்தியாவில் அடுத்தடுத்து நடைபெறும் விமான சேவைகளில் ஏற்படும் கோளாறுகளால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 12-ம் தேதி ஆமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியது. அதனை தொடர்ந்து கேதர்நாத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கிய சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஹஜ் பயணிகளை ஏற்றி வந்த விமானம் தரையிறங்கியது. அப்போது விமானத்தில் இடதுபுற சக்கரத்தில் இருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, 250 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் டெல்லியில் இருந்து லே விமான நிலையத்திற்கு இன்று காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது. லே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பின்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மீண்டும்…
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’குபேரா’ படத்திலிருந்து ’என் மகனே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தமிழ் உட்பட இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இயக்கம் மட்டுமின்றி பான் இந்தியா படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ’குபேரா’ படத்தை, சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தா, ஜிம் சர்ப், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் தனுஷ் பேசிய பேச்சு இணையத்தில் வைரலகி வருகிறது. மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின. சமீபத்தில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குபேரா படத்திலிருந்து 4-வது பாடலாக ’என்…
சமீபத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சென்னை காவல் ஆணையர் அருண் அவர்கள் போக்குவரத்து போலீசாருக்குப் புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம், சாலை விபத்துகளைக் குறைத்து, குறிப்பாக பள்ளி மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். முக்கிய அறிவுறுத்தல்கள்: கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு: இனிமேல், காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்கள் நுழைய அனுமதி இல்லை. இந்த விதிமுறையை மீறி கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார். விபத்து ஏற்படுத்திய வாகனங்களுக்குத் தடை: விபத்துகளை ஏற்படுத்தும் வாகனங்கள் இனி குறைந்தது 100 நாட்களுக்கு திருப்பி அளிக்கப்படாது. இது போன்ற வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு…
நடிகர் வைபவ், நடிகை அத்துல்யா ரவி உட்பட ஜான்விஜய், ராஜேந்திரன், கிங்க்ஸ்லீ உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் கோவை பிராட்வே திரையரங்கில் சென்னை Chenni City Gangsters திரைப்படம் மலைவாழ் மக்களுக்காக பிரீமியம் ஷோ திரையிடப்பட்டது.படத்தின் தயாரிப்பாளர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆனைகட்டி மலைவாழ் மக்களுக்கு பிரிமியர் ஷோவாக படத்தை திரையிட்டனர். படம் முடிந்த பிறகு இத்திரைபடத்தின் நடிகர் வைபவ், நடிகை அதுல்யா, ஜான் விஜய் உள்ளிட்டோர் மலைவாழ் மக்களிடம் படம் குறுத்து கேட்டறிந்து கலந்துரையாடினர். அப்போது நடிகர் நடிகைகளை பார்த்த மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். பின்னர் மலைவாழ் மக்களுடன் திரைப்பட குழுவினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வைபவ் அதிகமான நகைச்சுவை நடிகர்களுடன் இத்திரைப்படத்தை எடுத்துள்ளதாகவும் அனைவருக்கும் பிடிக்கும் படமாகவும் இது அமையும் என தெரிவித்தார். நடிகர் ஜான்விஜய்…
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வித்தியாசமான வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜமவுலி தற்போது நடிகர் மகேஷ்பாபுவுடன் இணைந்து புதிய பிரம்மாண்டமான திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் பிருத்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர் மாதவனும் இப்படத்தில் சேர வாய்ப்பு உள்ளது. படத்தின் கதைப்போக்கு வகையில், முக்கியமான காட்சிகள் வாரணாசி நகரில் நடைபெறுவதாக இருக்கின்றன. ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், அங்கு நேரடி படப்பிடிப்பு சாத்தியமாகாத நிலையில், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரூ.50 கோடி மதிப்பில் வாரணாசியை பிரதிபலிக்கும் பிரம்மாண்டமான செட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன், அடுத்த மாதம் கென்யாவின் அடர்ந்த வனப்பகுதிகளில் படத்தின் முக்கியமான ஷூட்டிங் தொடங்கவுள்ளது. இதில் மகேஷ்பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா கலந்துக்கொள்ளும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
சுங்கச்சாவடிகளில் தனியார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வருடாந்த கட்டணம் குறைக்கப்பட வேண்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்த புதிய விதிமுறையின் கீழ், தனியார் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்ல ஆண்டுக்கு ரூ.3,000 கட்டணமாக அல்லது வருடத்தில் 200 முறை வரை பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன. இந்த தீர்மானம், தற்போதைய சூழ்நிலையில் நடைமுறைப்படுத்துவதற்கேற்பதல்ல. தனியார் (ஓன் போர்டு) வாகனங்கள் பெரும்பாலும் குறைந்த அளவில் சுங்கச்சாவடிகளை பயன்படுத்துகின்றன. எனவே, அவர்கள் மீது ஆண்டுக்கு ரூ.3,000 கட்டணம் விதிப்பது நேர்மையற்றது மற்றும் அதிகப்படியான நிதிசுமையாகும். இந்நிலையில், இந்த வகை தனியார் வாகனங்களுக்கு வருடாந்தம் ரூ.1,500 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்படுவது சிறந்த மற்றும் நியாயமான அணுகுமுறையாக இருக்கும். மேலும், தற்போது திட்டமிடப்பட்ட ரூ.3,000 கட்டண முறையை வணிக மற்றும் சிறிய சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே அமல்படுத்தும் படியான திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் அந்த வகை வாகனங்களின் நிதிசுமை குறைக்கப்படலாம், அதேசமயம் பொதுமக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.-…
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது
வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதி அதிமுகவில் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது. பூத் கமிட்டி தொடர்பாக மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த அறிக்கையை தலைமைக் கழகத்தில் தாக்கல் செய்யுமாறு ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வருகின்ற இருபதாம் தேதிக்குள் அனைவரும் பூத் கமிட்டி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.. இதனைத் தொடர்ந்து 25 மற்றும் 26 ஆம் தேதி மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. மேலும் பூத் கமிட்டி தொடர்பாக இதுவே கடைசி கூட்டமாக இருக்கும் என தகவல்
“தக் லைஃப்” படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு உறுதயளித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உட்பட பலர் நடிப்பில் கடந்த 5-ம் தேதி கர்நாடகா உட்பட உலகம் முழுவதும் வெளியனது தக் லைஃப். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி என கமல்ஹாசன் தெரிவித்திருந்தது பேசு பொருளானது. கன்னட அமைப்பினர் பலர் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் எனக் கூறி, கமல்ஹாசனின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர். ஆனால் கமல்ஹாசன், நான் தவறாக எதுவும் கூறவில்லை ஆகையால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார். கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதிக் கோரி கமல்ஹாசன் கர்நாடக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கமல்ஹாசன்…
சாகித்ய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் 2 மொழிகளில் வெளியாகும் சிறந்த குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளை படைத்தவர்களுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கி வருகிறது. அதேப் போல 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது மற்றும் யுவ புரஸ்கார் விருதுகளை பெறும் எழுத்தாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழில் இந்தாண்டுகான பால சாகித்ய புரஸ்கார் விருது ”ஒற்றைச் சிறகு ஓவியா” என்ற நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு வழக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுவ புரஸ்கார் விருது ”கூத்தொன்று கூடிற்று” என்ற சிறுகதை தொகுப்புகாக மதுரையை சேர்ந்த எழுத்தாளர் லட்சுமிஹருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.