Author: Editor TN Talks

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும், கூட்டணி ஆட்சி என்பதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். திமுக அரசுக்கு எதிராக எந்த கட்டத்திலும் மதிமுக விமர்சனத்தை முன் வைத்ததில்லை வைக்கவும் மாட்டோம். என்னுடைய 61 வருட பொது வாழ்வில் 30 ஆண்டுகள் திமுக, 31 ஆண்டுகள் மதிமுக என வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். கொள்கையில் உறுதியாக இருப்பவன் நான். திமுகவுக்கு பக்க பலமாக இருப்பேன் இந்துத்துவா சக்திகள், சனாதன சக்திகள் பா.ஜக கட்சியுடன் இருந்து கொண்டு தமிழகத்தில் திராவிட கட்சியை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள், இமயமலை கூட அசைத்து விடலாம் திராவிட இயக்கத்தை தமிழகத்திலிருந்து யாரும்…

Read More

தைரியமாக இருங்கள், உங்களுக்கு நீதி கிடைக்கின்ற வரை அ.தி.மு.க. துணை நிற்கும் என்று திருப்புவனம் அஜித்குமார் தாய், தம்பியை செல்போனில் தொடர்பு கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார். அஜித்குமாரை இழந்து வாடும் அவரது தாய், தம்பி ஆகியோரிடம், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்து பேசியதாவது:- துரதிர்ஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாக தாக்கியதினால் உங்கள் மகன் அஜித்குமார் அவர்கள் மரணமடைந்து விட்டார். தைரியமாக இருங்கள் அம்மா. உங்களுக்கு நீதி கிடைக்கின்ற வரை அ.தி.மு.க. துணை நிற்கும். நாங்களும் துணை நிற்போம். இது மீள முடியாத துயரம். ஒரு தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது மிகப்பெரிய கொடுமையான விஷயம். இதை யாராலும் மன்னிக்க முடியாது. இது பெற்ற…

Read More

மதுரை ஆதீனம் வரும் 5 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சென்னை கிழக்கு சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். உளுந்தூர்பேட்டையில் நடந்த விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விபத்தையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், கார் ஓட்டுநர், நம்பர் பிளேட் இல்லாத வாகனம் மூலம் திட்டமிட்டு குறிப்பிட்ட மதத்தினர் மோதியதாக கூறினார். இதனையடுத்து நடந்தது விபத்து என சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்த நிலையில் புகாரின் பேரில் மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதீனம் மீது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பொது தீமைக்கு வழிவகுக்கும் அறிக்கைகள் அல்லது தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன்…

Read More

பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரா. அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை. அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த…

Read More

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டத்தில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது, அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிய வழக்கு முடித்து வைத்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு. கேசவமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது . 2014 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது எனவும் அனைத்து சமூக மக்களையும் இணைத்து அவர்களது பங்களிப்புடன் திருவிழா நடைபெற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு புதிய தேரோட்டமும் திருவிழாவும் நடைபெற்றது. அப்போது அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் முதல் மரியாதை பெறுவதற்காக சில நாட்டார்கள் அவர்கள் சார்ந்த அதிக நபர்களை கூட்டிச் சென்று தேரின் வடத்தை பிடித்ததால்…

Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீர் சந்திப்பு மேற்கொண்டார். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பு நடைபெற்றது. வைகோ-வுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் மீண்டும் வழங்கப்படாததால் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறலாம் என பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டது. திமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றுள்ளோம். இன்று வரை அரசை எதிர்த்து சிறிய ஆர்ப்பாட்டம் கூட நாங்கள் நடத்தியது இல்லை. அறிக்கை கொடுத்ததில்லை. இத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்று சொல்லியது இல்லை. எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார். இந்த சூழலில் முதலமைச்சருடன் வைகோ சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். திமுக கூட்டணியில் மதிமுக இணைந்தபின்னர், மதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் திமுகவுக்குள் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக இந்தநிலை தான் நீடித்து வந்தது. ஆனால் கடந்தவாரம் 2021 சட்டமன்ற தேர்தலில் பல்லடம்…

Read More

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கோவையில் ஒரே மேடையில் 50 ஜோடிகளுக்கு சீர் வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அரை பவுன் தாலி உட்பட பல்வேறு சீர்வரிசைகள் அறநிலையத்துறையால் வழங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. திருமண தம்பதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசினார். அதன்படி கோவையில் உக்கடம் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் சிரவை ஆதீனம், மாநகராட்சி துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மணமக்களின் உறவினர்கள் கோவிலுக்கு வந்து இருந்த மக்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை உட்பட பல்வேறு சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்…

Read More

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்பவர் மானாமதுரை போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் என்பவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்த அவர், தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்திருந்தார். இதன் அடிப்படையில் இன்றைய தினம் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு சிவகங்கை மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் காரைக்குடி டெக்னீஷியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கப்பட்டது. இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், நேரில் சென்று வழங்கினார். மேலும் தேளி வருவாய் கிராமத்தில் 3 சென்ட் என்ற அளவில் வீட்டு மனைப் பட்டாவானது, அஜித்குமாரின் தாயார் மாலதி வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர்…

Read More

திமுக ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி இருந்தார். இப்போது அந்த பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தியின் விவரம் வருமாறு.. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் “”சாரி மா” என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை? சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், இதோ மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவல்நிலையங்களிலும், காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்: 1. பிரபாகரன் (வயது 45) – நாமக்கல்…

Read More

சமூகவலைதளம் மூலம் சுமார் 30 பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து உல்லாசம் அணுபவித்த வடமாநில தொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் 15 வயது சிறுமியின் ஆபாச புகைப்படம் ஒன்று, அச்சிறுமியின் தாயார் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு சமூக வலைதளம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாயார் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் புகைப்படத்தை பதிவிட்ட மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரகாஷ் நாயக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், புதுச்சேரியில் இருந்து ஒஇசா தப்பிச் சென்று தப்பியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த தனிப்படை போலீசார் ஒடிசா சென்றனர். அங்கு பாலாசூர் பகுதியில் மறைந்திருந்த பிரகாஷ் நாயக்கை கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு…

Read More