Author: Editor TN Talks

தஞ்சையைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கொரோனா நோய் தொற்று காலத்தில் கோவிட் பெட்டகம் அரசு பள்ளிகளுக்கு என கொள்முதல் செய்யப்பட்டது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடமிருந்து மட்டுமே கோவிட் பெட்டகத்தை வாங்க வேண்டும் போன்ற ஏராளமான விதிகள் வகுக்கப்பட்டன. இந்நிலையில் தஞ்சையில் உள்ள பள்ளிகளுக்காக தஞ்சையின் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. அதே அளவு பொருட்களை வேறு சந்தைகளில் குறைவான விலைக்கு வாங்கலாம். அவற்றை விட 75% அதிகமாக விலை கொடுத்து கோவிட் பெட்டகம் வாங்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு மிகப்பெரும் வருவாய் இழப்பு. கோவிட் பெட்டகம் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்கக்கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கோவிட் பெட்டகம் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்றுள்ள மோசடி தொடர்பாக விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்பு துறையின்…

Read More

சென்னையில் காதல் விவகாரதிதில் இளைஞர் கடத்தல் வழக்கில், புரட்சி பாரதம் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் ஏடிஜிபி-யை கைது செய்ய நீதிபதி அதிரடி உத்தரவிட்டார். வழக்குப் பதிவு : திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் இன்ஸ்டாவில் பழக்கமான தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், கூலிப் படையை ஏவி, கடந்த 6-ம் தேதி தனுஷின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு, அங்கிருந்த தனுஷின் சகோதரனையும் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து இளைஞரை வீட்டில் விட்டுள்ளனர் கூலிப் படையினர். இது தொடர்பாக தனுஷின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக இருந்ததாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும்,…

Read More

இந்தியாவை இந்து தேசம் என அறிவிப்பதே அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு எனவும், 140 கோடி இந்திய மக்களின் உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்.கிருஷ்ணசாமி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய அரசியல் சாசனம் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய பொக்கிஷம். 200 ஆண்டுகால ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்வதே அன்று சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் பிரதான லட்சியமாக இருந்ததுள்ளது. அதனால் தான் “வெள்ளையனே வெளியேறு” என்பது அவர்களின் முக்கிய கோசமாக இருந்தது. சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு, இந்தியாவை எப்படிப்பட்ட சமூகமாக உருவாக்க வேண்டும் என்பதில் போராட்டத்தை  முன்னெடுத்தவர்களில் சுபாஷ் சந்திர போஸ் போன்ற ஒரு சிலரைத் தவிர, எவருக்கும் பரந்துபட்ட சிந்தனை இல்லை. அரசியல் சாசனத்தில் காஷ்மீரைத் தவிர, இந்தியாவில் எவரும் சொத்து வாங்கலாம் என்ற சரத்தும் இருந்ததுள்ளது; ஆனால் அனைவரும் சொத்து வாங்குவதற்கான…

Read More

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கனிமா பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் சில காலம் இயக்கத்தில் இருந்து விலகி இருந்தார். படங்கள் தயாரிப்பதில் கவனமும் செலுத்தி வந்தார். தமிழை தாண்டி ஹிந்தி சினிமாவிற்கும் சென்று படங்களை இயக்கி வந்தவர், தற்போது சிவகார்த்திகேயனின் மதராஸி என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கனிமா பாடலுக்கு குடும்பத்துடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார். தனது மகளின் பூப்புனித நீராட்டு விழா பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதில் தனது மகள், மகன், மனைவி ஆகியோருடன் இணைந்து சூர்யாவின் ரெட்ரோ படத்தில் இடம்பெற்றிருந்த கனிமா…

Read More

கடந்த 12-ம் தேதி ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இந்தியர்கள் மட்டுமின்றி வெளி நாடுகளை சேர்ந்தவர்கள் என 242 பேர் பயணம் செய்திருந்தனர். அதில் ஒரு இந்தியர் தவிர்த்து 241 பேர் உயிரிழந்தனர். நேற்று(15.06.2025) விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரையிலும், 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து கேதர்நாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 1 குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது உத்திரபிரதேசத்தில் ஹஜ் பயணிகள் சென்ற விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது மேலும் பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங்…

Read More

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாமக நிர்வாகியும், வழக்கறிஞராக பணியாற்றிய சக்ரவர்த்தி, மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சக்ரவர்த்தி. இவர் வேலூர் ஒருங்கிணைந்த பாமக மாவட்ட இளைஞரணி செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 11-ம் தேதி வீட்டிற்கு செல்லும் வழியில் சக்ரவர்த்தி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பாமகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்திருந்தார். அத்தோடு சக்ரவர்த்தி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தினார். சக்ரவர்த்தியின் உடற்கூறு ஆய்வில் அவரது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து வழக்கை மரண…

Read More

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் காலில் காயத்துடன் வந்த ஒரு நோயாளிக்கு, அங்கு பணிபுரியும் ஒரு தூய்மைப் பணியாளர் மருத்துவம் அளித்ததாகக் கூறப்படும் காணொலி ஒன்று பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முன்வைத்துள்ளார். இச்சம்பவம், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் சந்திக்கும் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனை விளக்கமும் மறுப்பும் காயமடைந்த நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் மருத்துவம் அளிக்கவில்லை என்றும், ஏற்கனவே போடப்பட்ட கட்டை மட்டுமே பிரித்தார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், இந்த விளக்கத்தை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் “அபத்தமானது” என்று கூறி மறுத்துள்ளார். நோயாளிகளுக்கு கட்டை பிரிப்பது என்பது தூய்மைப் பணியாளரின் வேலை அல்ல என்றும், பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய பணி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் ஒருவர் நோயாளிக்கு…

Read More

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15, 2025 அன்று 3 நாள் பயணமாக சைப்ரஸ், கனடா, மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.இந்த பயணம் “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் இந்திய இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் ஆகும். பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாள் பயணத்தின் முதல் நாடாக நேற்று சைப்ரஸ் சென்றடைந்தார். அங்கு சைப்ரஸ் குடியரசுத் தலைவர் நிகோஸ் கிறிஸ்தோடோலைட்ஸ் (Nikos Christodoulides) அவர்களால் விமான நிலையத்தில் சடங்கு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இந்தியப் பிரதமர் சைப்ரஸுக்கு மேற்கொளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சைப்ரஸ் தலைநகர் நிகோசியாவில், பிரதமர் மோடி, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்தோடோலைட்ஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைகளில் கல்வி, டிஜிட்டல் கூட்டாண்மை, பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம்,…

Read More

திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் சந்தித்து பேசி உள்ளது பேசுபொருளாகியுள்ளது. திமுக கூட்டணியில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியான இடங்களை கேட்டு பெறுவோம் என தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை கூறிவரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவின் முக்கிய தலைவர்கள், கூட்டணி இல்லை என்றால் விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்தவர்களால் ஒரு இடம் கூட வெல்ல முடியாது என கூறி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளார். தான் எழுதியுள்ள ”பேசு பேசு நல்லா பேசு” என்ற புத்தகத்தை வழங்கி உள்ளார். தொடர்ந்து நடப்பு அரசியல் குறித்து கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு…

Read More

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11.06.2025 அன்று இருசக்கர வாகனத்தில்தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இதே ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, இந்த அரசை நான் எச்சரித்தேன். ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை. ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ,…

Read More