Author: Editor TN Talks
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் சமூகநீதி அடிப்படையில் பின்பற்றப்பட்டு வந்த தரவரிசைப் பட்டியலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதன் எதிர்கால விளைவுகள் குறித்து ஆய்வு செய்யவும், சட்டரீதியான தீர்வுகளை அளிக்கவும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஜி.எம். அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குழுவின் செயல்பாடு மற்றும் காலக்கெடு இந்தக் குழு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழுவின் பணிகளுக்கு உதவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வில் சமூகநீதியை உறுதி செய்வதற்கான சட்டரீதியான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை இந்தக் குழு ஆராய்ந்து, மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்…
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 24 முதல் 29-ம் தேதி வரை பெய்த கனமழையைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் பலத்த மழை பதிவாகி வருகிறது. தொடர் கனமழை மற்றும் மண் சரிவுகளின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் லேசான மழை பதிவாகி வந்தாலும், குந்தா தாலுகாவுக்குட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர் மழை காரணமாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். இது மாணவர்களின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.…
முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமியின் 107-வது பிறந்தநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, விழுப்புரம் வழுதரெட்டி நினைவரங்கத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரவிருக்கும் தேர்தல்களுக்கான கட்சியின் தயார்நிலை மற்றும் தமிழக அரசு மீதான விமர்சனங்கள் குறித்துப் பேசினார். நயினார் நாகேந்திரன் பேசுகையில், “நாங்கள் தேர்தலுக்கு முழுமையாகத் தயாராக இருக்கிறோம். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவுக்கு வரும்” என்று தெரிவித்தார். இது தமிழக அரசியல் களத்தில் வரவிருக்கும் தேர்தலுக்கான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. மதுரையில் நடைபெற உள்ள முருகன் பக்தர்கள் மாநாடு குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழக அரசு அனுமதி மறுப்பதாகக் குற்றம் சாட்டினார். “முருகன் பக்தர்கள் மாநாட்டிற்கு மோட்டார் சைக்கிளில் செல்லக்கூட தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்…
நடிகர் விஜய்க்கு ரூ.500கோடி கொடுத்து திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதாக அதிமுக எம்.எல்.ஏ கருப்பணன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் அருகே செங்கப்பள்ளியில், ஊத்துக்குளி அதிமுக ஒன்றிய பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்களிடையே பேசிய பவானி அதிமுக எம்எல்ஏ கருப்பணன், ”எடப்பாடி பழனிசாமி தலைமையில் அருமையான கூட்டணி அமைந்துள்ளது எனவும், எனவே நாம்தான் 200 தொகுதிகளில் ஜெயிக்க போகிறோம். கடந்த தேர்தலில் இருகட்சியும் தனித்தனியே பிரிந்து நின்றதால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தது என்றார். மேலும் கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வரவுள்ளதாகவும், மேலும் இப்போது கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு ரூ.500 கோடி கொடுத்து திமுக கூட்டணிக்கு அழைக்கின்றனர். ஆனால் அவர் வாங்கமாட்டார். அப்படி வாங்கினால் அவர் அரசியல் அத்துடன் முடிந்துவிடும்” என்றார்.…
தமிழ் சினிமாவில் ஃபீல் குட் படமாக சமீபத்தில் வருவது என்பது மிகவும் அரிதாக உள்ளது. சிறிய பட்ஜெட்டில் அதிக லாபம் எடுத்த படங்கள் வரிசையில் இணைந்திருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. கடந்த மே 1-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். இலங்கையிலிருந்து கடல் மூலமாக தமிழ்நாடு வந்தவர்கள் எப்படி அவர்களை இங்கு தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. குடும்ப கதைக்களத்தில் வெளியான இப்படம் ரூ.75கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இப்படத்தின் வெளியான சூர்யாவின் ரெட்ரோ படத்தையே பின் தள்ளியது டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜமௌலி, நானி, கிச்சா சுதீப் என பலரும் இப்படத்தை பாராட்டினர். அந்த வகையில் நடிகர்…
வீடுபுகுந்து இளைஞரை கடத்திய வழக்கில் தொடர்புடையதாக எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி மீது புகார் எழுந்த நிலையில், முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியை சேர்ந்த பெண்ணை சமூக வலைதளம் மூலம் பேசி பழகி, காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், கூலிப்படையை ஏவி இளைஞரின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். அத்தோடு வீட்டில் இருந்த இளைஞரின் சகோதரனையும் அந்த கும்பல் கடத்தி சென்று, சிறிது நேரம் கழித்து வீட்டிலேயே விட்டு சென்றுள்ளது. இந்த சம்பவத்தில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கும் தொடர்புடையதாக புகார் எழுந்தது. அவர் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணின் பெண்ணின் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பூந்தமல்லியில் உள்ள பூவை…
கடந்த 12-ம் தேதி நாட்டை மட்டுமில்லாது உலகையே உலுக்கியது ஒரு விமான விபத்து. ஆமதபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில் 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட போயிங் 787-8 டிரீம் லைனர் விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பிய சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. மருத்துவக்கல்லூரி விடுதியில் விமானம் விழுந்து வெடித்ததில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் இருந்த 241 பேர், மருத்துவ மாணவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ளவர்கள் என மொத்தம் 274 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த இந்திய நபர் ஒவர் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. விமானம் வெடித்த விபத்தில் பலர் உடல் கருகி…
பாமகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தந்தை, மகனுக்கு இடையிலான கருத்து மோதலால், கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து வருகிறார். எனது உயிர்மூச்சு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவர் என சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ் கூறியிருந்தார். புதிய நிர்வாகிகளுடன் தைலாபுரத்தில் ஆலோசனை மேற்கொண்ட ராமதாஸ், பாமகவின் பொதுச்செயலாளராக இருந்த வடிவேலு ராவணனை நீக்கி, புதிதாக முரளி சங்கர் என்பவரை நியமித்தார். இந்த நிலையில், திருவள்ளூர் மணவாள நகரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, திருவள்ளூரில் முப்போகம் விளையும் 1,200 ஏக்கர் நிலத்தை பறித்து அமெரிக்க நிறுவனத்திற்கு தாரைவார்க்க திமுக அரசு துடிக்கிறது. ஏன் அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு தரிசு நிலம்…
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடியும் முன்னரே மழை பெய்யத் தொடங்கியது. கேரளாவில் பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதால், தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று(25.06.2025) நீலகிரியில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேப் பொல கோவையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை(16.06.2025) தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 17 ஆம் தேதி நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தடையை மீறி தூத்துக்குடியில் பனைமரம் ஏறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள் விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார். விவசாயிகள் நலன் கருதியும், மரம் ஏறும் தொழிலாளர்கள் நலன் காக்கவும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தற்கு தமிழ்நாடு மட்டுமின்றி மத்தியிலும் எந்தவொரு கட்சிகளும் ஆதரவு தரவில்லை. தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குரல் கொடுத்து வருகிறார். கள் இறக்க அனுமதி வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (15.06.2025) தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை அருகே போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து சீமான், பனைமரம் ஏறி கள் இறக்கினார். இந்த போராட்டத்தில்…