Author: Editor TN Talks
மத்திய அரசின் பல திட்டங்களுக்கு மாநில அரசுகள் அதிக அளவில் நிதிப்பங்கீடு தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த செய்தி.. பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்! படையப்பா படக் ‘காமெடி’ போல “மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். அது நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பதிலளிக்கும்…
திருவாலங்காடு அருகே காதல் திருமணம் சம்பவத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்புடையதாக கூறி புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியாரை கைது செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவர் வீட்டின் அருகே குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. தகவல் அறிந்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ்(23) இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா ஸ்ரீ (21) என்ற இளம் பெண்ணுடன் கடந்த மாதம் 15ம் தேதி காதல் திருமணம் செய்துக் கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் களாம்பாக்காத்தில் வீட்டில் இருந்த தனுஷ் தம்பி இந்திர சந்த்(16) என்ற சிறுவனை காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து தனுஷ் தாயார் காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் செய்தார். திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனி மாவட்டத்தைச்…
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் கூறியுள்ளார். சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நேரில் சந்தித்து, மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தோம் என்றார். தமிழகத்தின் மிகப்பெரிய திட்டமாக இருக்கக்கூடிய நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டம் காவிரி ஆற்றிலே வந்து கலக்கக்கூடிய கிளை நதிகளை அதே இடத்தில் சுத்தப்படுத்தி காவிரியில் கலக்க செய்ய வேண்டும். அதேபோல் பெருநகரங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்தப்படுத்தி காவிரி கலக்கச் செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கான ஒட்டுமொத்த திட்ட மதிப்பு…
புதுக்கோட்டையைச் சேர்ந்த சபீக்யாசிர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், “புதுக்கோட்டை பாப்புலர் மர ஆலை அருகே அமைந்துள்ள ரெட்போர்ட் மனமகிழ் (மதுபான) மன்றம் செயல்பட தடை விதித்து உத்தரவிடக் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியகிளாட் அமர்வு, “புதுக்கோட்டை பகுதியில் அரசு டாஸ்மாக் கடைக்கு நேர் எதிரே ரெட்போர்ட் மனமகிழ் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. காலை 11:00 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் பார் வசதியுடன் அமைந்துள்ள நிலையில், அதற்கு எதிரே தனியார் மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டிருப்பதால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி உள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மன மகிழ் மன்றம் கூட்டுறவு சங்கங்களின் விதிப்படி செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்க விதிகளின்படி ஏதேனும் சட்ட விரோதமான செயல்கள் நடைபெறுவது குறித்து தெரிய வந்தால், அது…
வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த படைப்பாக ‘கொம்புசீவி’ படத்தை உருவாக்கி வருகிறார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார். கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கப்பட்டது சென்னையில் இன்று நிறைவுற்றது. புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்தை…
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை 274 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இனி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன் என கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். கடந்த 12-ம் தேதி ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 230 பயணிகள் உட்பட 242 பேருடன் லண்டன் நோக்கி புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து மேல் எழும்பிய சில நிமிடங்களிலேயே அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விமானி அவசரகால அழைப்பை விடுத்ததுடன், மேகனிநகர் பகுதியில் இருந்த குதிரை பந்தைய மைதானத்தில் விமானத்தை நிறுத்த முற்பட்டுள்ளார். அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த விமானம், அப்பகுதியில் இருந்த பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தில் விழுந்து, வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட விடுதிக் கட்டடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்தவர்கள் என…
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி, எ.வ.வேலு, கே.என்.நேரு, சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கனிமொழி, ஆ.ராசா, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்ற வரும் நிலையில் கூடுதல் பணிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. நிர்வாகிகளை மண்டல பொறுப்பாளர்கள் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளை கவனிக்க 8 மண்டல பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
90ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோவான ’சக்திமான்’ கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 1990-களில் முகேஷ் கன்னா நடித்த ’சக்திமான்’ என்ற தொடரானது அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான தொடர். 90ஸ் கிட்ஸ்களின் முதல் சூப்பர் ஹீரோ என்றால் அது சக்திமான் தான். அவரது சிகப்பு கலரில் தங்கநிற சக்கரம் போன்ற டிசைன் பொறித்த ஆடையை வாங்குவது என்பது அன்றைய குழந்தைகளின் கனவாகனவே இருந்திருக்கும். அந்த தொடரை படமாக்கும் முயற்சியில் இன்றைய இயக்குநர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். 2022-ம் ஆண்டு ’சக்திமான்’ படத்தை எடுக்க இருப்பதாக சோனி பிக்சர்ஸ் அறிவித்தது. சக்திமான் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பார் எனவும் பேசப்பட்டது. அதனை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது முகேஷ் கன்னா மறுத்திருந்தார். இந்த நிலையில், புஷ்பா படம் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியுள்ள அல்லு அர்ஜூன் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில்…
2025-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று(14.06.2025) வெளியாகியுள்ளது. மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டிற்கான நீட்-யூஜி தேர்வு கடந்த மே மாதம் 4-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இந்த தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை கடந்த 4-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. மாணவர்கள் இந்த விடைக் குறிப்பின் மீதான ஆட்சேபனைகளை தெரிவிக்க கடந்த 5-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருந்தது. மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகள் பரீசிலிக்கப்பட்டு இறுதி விடைகுறிப்பும், அதன் அடிப்படையில் தேர்வு முடிவுகள் மற்றும் தகுதி பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இணையத்தில் வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் ரிசல்ட் எப்படி பார்ப்பது? மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ இந்த என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம்…
திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு… மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம். ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை! நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான் . உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு…