Author: Editor TN Talks
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் பருவமழை பெய்யத் தொடங்கிய நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒகேனக்கல் அருவி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணையின் நீர்மட்டம் 121அடியாக உள்ளது. நீர் இருப்பு 44.322 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 52,829கன அடியாக உள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவு நீர் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து மட்டும் 51,000கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஒகேனக்கலுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆகையால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கத்தில் கொகைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அத்தோடு அவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜாமின் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனியார் நிறுவனத்திற்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் இருக்கிறது. இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிடும் என்று கூறினார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பியதற்கு, எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும் எனவும் அதில் பாஜக பங்கு இருக்கும் என்றார். தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடும் எனவும் முதலமைச்சர் அதிமுகவில்…
1988ஆம் ஆண்டு திண்டுக்கல் – கரூர் ரயில் பாதைக்கு இடம் கொடுத்தவருக்கு இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட 12 பொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் சாரங்கபாணி (வயது 70), சவுந்தரராஜன் (60). இவர்களுக்கு சொந்தமான நிலம், கடந்த 1988ஆம் ஆண்டு திண்டுக்கல்-கரூர் ரெயில் பாதை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.1 கோடியை இழப்பீட்டு தொகையாக அரசு நிர்ணயம் செய்தது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த தொகை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காலக்கெடு முடிந்தும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து சாரங்கபாணி, சவுந்தரராஜன் குடும்பத்தினர் திண்டுக்கல் முதன்மை சப்-கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு, அரசு நிர்ணயித்த இழப்பீட்டு தொகையை வட்டியுடன் ரெயில்வே துறையில் இருந்து வசூலித்து மனுதாரர்கள் குடும்பத்துக்கு வழங்க…
தவெக தலைவர் விஜய், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் திருச்சி செல்வதற்காக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.. அதிமுக கூட்டணியை பொறுத்த அளவில் பாஜக தான் வழி நடத்துகிறது என்பதை அமித்ஷாவை வைத்து அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரையில் அதிமுக அமைதியாக இருக்கிறது பாஜக தான் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. அதனால் அந்த கூட்டணியை பாஜக தான் வழி நடத்துகிறது என பார்வை உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக நிலை கொள்வதை எப்படி அனுமதிக்க முடியும் தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான குரல் கடந்த அரை நூற்றாண்டாக வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.. அதிமுக என்ற எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற திராவிட தலைவர்கள் வந்த திராவிட கட்சியிலிருந்து சென்றவர்தான் பாஜகவின் தலைவர் நைனார் நாகேந்திரன் அப்படி…
திரை விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிடுவதை தடை செய்யும் வகையில் விதிகளை வகுக்க கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்( TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, தஏபோதைய சமூக வலைதள யுகத்தில், யார் வேண்டுமானாலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விமர்சனங்கள் முன் வைக்க முடியும். எதிர்மறை விமர்சனங்கள் வரும் திரைப்படங்களை மட்டுமே, தான் பார்த்து வருவதாக நீதிபதி குறிப்பிட்டார். இந்தியாவில், எதிர்மறை விமர்சனம் செய்வதை தடுத்தால், வெளிநாடுகளில் இருந்து விமர்சனங்கள் வரும். எதிர்மறை விமர்சனங்களை தடுப்பது குறித்து உத்தரவிட்டால் அதை…
திரை விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிடுவதை தடை செய்யும் வகையில் விதிகளை வகுக்க கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்( TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, தஏபோதைய சமூக வலைதள யுகத்தில், யார் வேண்டுமானாலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விமர்சனங்கள் முன் வைக்க முடியும். எதிர்மறை விமர்சனங்கள் வரும் திரைப்படங்களை மட்டுமே, தான் பார்த்து வருவதாக நீதிபதி குறிப்பிட்டார். இந்தியாவில், எதிர்மறை விமர்சனம் செய்வதை தடுத்தால், வெளிநாடுகளில் இருந்து விமர்சனங்கள் வரும். எதிர்மறை விமர்சனங்களை தடுப்பது குறித்து உத்தரவிட்டால் அதை…
28 மணிநேர பயணத்திற்கு பிறகு சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா. நேற்று மதியம் 12.01 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘பால்கன்-9′ ராக்கெட் மூலம், டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ‘டிராகன்’ விண்கலம் சுமார் 28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது. தொடர்ந்து ‘டிராகன்’ விண்கலம் தற்போது விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. தொடர்ந்து ‘டிராகன்’ விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர்…
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது.தற்போது நீர்வரத்து வினாடிக்கு 6084 கன அடியாகவும், நீர்மட்டம் 134.30 அடியாகவும் உள்ளது. ரூல் கர்வ் முறைப்படி ஜூன் 30-ஆம் தேதி வரை முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிவரை மட்டுமே நீர் தேக்க முடியும். இன்று இரவுக்குள் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்ட கூடும் என்பதால், அணையில் இருந்து வல்லக்கடவு வழியாக கேரளப் பகுதிக்கு நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால்,தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் இருந்து கேரளாவிற்கு முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டது.
டேங்கர் லாரியிலிருந்து வெளியாகி வரும் 16,000 லிட்டர் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் – பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தனர். தூத்துக்குடியில் இருந்து கரூர் செல்வதற்காக 16,000 லிட்டர் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரியை திருநெல்வேலியை சேர்ந்த மகேஷ் ஒட்டி வந்துள்ளார். திண்டுக்கல் ஆத்தூர் பகுதியிலுள்ள தோமையார்புரம் அருகே வந்தபோது டேங்கர் லாரியில் ஓட்டை ஏற்பட்டு லாரியிலிருந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட் வெளியேற தொடங்கியுள்ளது. உடனடியாக டிரைவர் வண்டியை நான்கு வழிச்சாலையின் ஓரம் நிறுத்தி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் டேங்கர் லாரியிலிருந்து வெளியேறி வரும் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் மீது தண்ணீர் அடித்தனர். இந்த ஹைட்ரோ குளோரிக் ஆசிட் தீ பற்றாது என்றாலும் இதனால் வெளியேறும் புகை பொதுமக்களுக்கு மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால்…