Author: Editor TN Talks
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் பகுதியைச் சேர்ந்த பசு மாடு ஒன்று தண்ணீர் குடிக்க சென்ற இடத்தில் சிறிய செம்புக்குள் வாயை விட்டதால் சிரிய சொம்பு மாட்டின் கீழ்பாக்க தாடை நாக்குடன் சேர்ந்து வசமாக மாட்டிக் கொண்டது. சொம்பை வெளியே எடுக்க இயலாத அந்த பசு மாடு செய்வதறியாமல் கடந்த மூன்று நாட்களாக உணவு உண்ண முடியாமல் அங்கும் இங்குமாக ஊரை சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அதை கவனித்த சில இளைஞர்கள் பெரிய போராட்டத்திற்கு பிறகு சூசகமாக பசுமாட்டை பிடித்து கழுத்திலும் கொம்பிலும் நல்ல இறுக்கமாக கயிற்றில் கட்டிவிட்டு அந்த வாயில் இருந்த சொம்பை மிகவும் போராடி எடுத்து விட்டனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இன்னும் இரண்டு நாட்கள் அந்த சொம்பு பசுமாடு வாயில் இருந்திருந்தால் பசுமாடு இறப்பதற்கான சூழல் உருவாகி இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சரியான சமயத்தில் உதவி செய்ததால் பசுமாடு…
கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ். இவர் கோவை விமான நிலையத்தில் பணி புரிந்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் மூன்று மாடிகள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு மாணிக்கராஜ் வெளியே சென்று உள்ளனர். அப்பொழுது இரண்டாவது மாடியில் மின் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்து உள்ளது. அப்பொழுது அக்கம், பக்கத்தினர் சிங்காநல்லூர் காவல் நிலையம் மற்றும் பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பு வீடு தீப் பற்றி கொண்டு எறிந்த நிலையில், திடீரென அங்கு இருந்த வீட்டின் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் பிடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் அனைத்து . வீட்டில் யாரும் இல்லாததால் தீ விபத்து ஏற்பட்டு சிலிண்டர்…
திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்கள் எல்லாம் எங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பல்வேறு தகவல்களை கூறினார். அகில இந்திய அளவில் தலைமை தாங்குவது பாஜக. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் சந்திக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடி தான் தமிழ்நாட்டில் கூட்டணி அமைந்திருக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் பலமடைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ அந்த கட்சி எல்லாம் எங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என தினகரன் வலியுறுத்தி உள்ளார். தேசிய ஜனநாயக…
தமிழர்களின் தொன்மையை உலகமே ஒப்புக் கொண்ட நிலையில், மத்திய அரசுக்கு மட்டும் ஒப்புக் கொள்வதில் என்ன தயக்கம் என்று மத்திய அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் எழுதியுள்ள பதிவு வருமாறு.. முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது. 5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற…
கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன்? என்பது குறித்து மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார். கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் அரசியல் தலைர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சென்னையில் இன்று செய்தியாளர்களிடையே அவர் இது தொடர்பாக பேசுகையில், “கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் தெரியவேண்டு உள்ளன. இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும். கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்து அளவீடுகளிலும் முழுமை பெறும் போது உரிய அங்கீகாரம் கிடைக்கும்” என்று அவர் குறிப்பிட்டார். எனினும், அயோத்தி ஆய்வை மட்டும் மத்திய அரசு உடனே அங்கீகரித்தது ஏன்? எப்படி? என்றும், தமிழகத்தின் தொன்மையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தொடர்ந்து மறுக்கிறதே என்றும்…
தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் மத்திய அரசு, நமஸ்தே திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமி நாதன் மற்றும் லட்சுமி நாராயாணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் இந்த திட்டத்தில் 213 தகுதியான பட்டியலின சமூகத்தை சேர்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எந்த ஆதரங்களும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட…
முருக பக்தர்கள் மாநாடு குறித்து பலரும் அவதூறாக பேசி வருகின்றனர்., இந்துக்களை ஒற்றுமை படுத்தவே இந்த மாநாடு நடைபெறுகிறது. – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணிய பேட்டி. மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில்., நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆறுபடை வீட்டின் கோபுரம் போன்ற அமைப்புடன் மட்டுமே மாநாடு நடத்த உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மதுரை வண்டியூர் செல்லும் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் 6 படை வீட்டில் இருந்து பூஜிக்கப்பட்ட வேலை எடுத்து வந்து கணபதி ஓமம், வேல் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து., முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள இடத்தை இந்து முன்னணி தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியன் பார்வையிட உள்ளார். முன்னதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்.…
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2151.59 கோடியை மத்திய அரசு வழங்க மறுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஜூலை 13-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை. இது தமிழ்நாட்டுக்கு பெரும் பின்னடைவு ஆகும். ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதியை பெறுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தமிழக அரசு தான் காரணமாகும். இந்த சிக்கலில் தமிழ்நாட்டிற்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய நீதி இப்போது வரை தள்ளிக் கொண்டே போவதற்கு காரணம், தமிழக அரசின் சார்பில் காட்டப்பட்ட அலட்சியமும், அடுக்கடுக்காக இழைக்கப்பட்ட தவறுகளும் தான் . ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில், அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம்…
முதியோருக்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களிலும், அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படுவதில்லை. முதியோர்களை பாதுகாப்பது அரசின் கடமை- நீதிபதிகள் கருத்து வழக்கில் ஒன்றிய அரசின் சமூக நலத்துறையின் முதன்மைச் செயலர், தமிழக அரசின் சமூக நலத்துறையின் முதன்மை செயலர் ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் உத்தரவு. தேசிய முதியோர் மையங்களை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒன்றிய, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரையைச் சேர்ந்த் ரமேஷ், தாக்கல் செய்த மனு. தமிழகத்தில் வயதானவர்களை பேருந்து நிலையங்கள், சாலை ஓரங்கள் போன்ற இடங்களில் அவர்களது பிள்ளைகளும் உறவினர்களும் தனியே விட்டுச் செல்லும் நிலை அதிகரித்து வருகிறது. சுகாதார குறைபாடுகளால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு முதியோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தேசிய முதியோர் மையங்களை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால் இந்த மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் முறையாக அமைக்கப்படவில்லை. ஆகவே…
தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் ஜூன் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால், மற்றும் 7 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 13 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த 13 பேரின் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இரட்டை இலை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் இருப்பதாலும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளர் என்று a மற்றும் b படிவங்களில் கையெழுத்து போட்டிருப்பதால் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி கோரிக்கை வைத்தார்.. ஆனால் அதிமுக வேட்பாளர்களின்…