Author: Editor TN Talks

[9:49 PM, 6/7/2025] +91 90432 00200: போடி பகுதியில் மாம்பழத்திற்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி, தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கருக்கும் மேல் மாங்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. காதர், இமாம்பசந்த், சப்பட்டை, கிளி மூக்கு, மல்கோவா, செந்தூரம், போன்ற உயர்ரக மாம்பழங்கள் அதிகம் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ளது . இந்த ஆண்டு மாங்காய் விலை போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் கடும் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். கடந்த ஆண்டு கிலோ 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட கல்லாமை மாங்காய் தற்போது கிலோ நான்கு ரூபாய்க்கு கேட்கப்படும் நிலையில், உயர் ரக ஏற்றுமதி ரக மாம்பழங்கள் கேட்க வழியின்றி அழுகி கீழே கொட்டப்படும் நிலையில் உள்ளது. இதனால் மாங்காய் உற்பத்தி…

Read More

மகாராஷ்ட்ர சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலின் போது மாலை 5 மணியளவில் பதிவான சிசிடிவி காட்சிகளை வெளியிட முடியுமா என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மகாராஷ்ட்ர மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில் முதலாவதாக தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவை மத்திய அரசு மாற்றி அமைத்தது குறித்து கேள்வி எழுப்பினார். இரண்டாவதாக போலியான வாக்காளர்களை சேர்த்தது. மூன்றாவதாக வாக்கு சதவிதம் அதிகமானது. நான்காவதாக போலி வாக்குகள் அதிகரித்தது என குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு நேரடியாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. மாறாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பலரும், மகாராஷ்ட்ர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போன்றவர்கள் பதில் கூறி இருந்தனர். இதற்கு…

Read More

சிறந்த இயற்கை விவசாயம் ஆராய்ச்சி மாணவருக்கு நம்மாழ்வார் பெயரில் விருது தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மறைந்த டாக்டர் நம்மாழ்வார் அவர்களின் பங்களிப்பை நினைவு கூறும் வகையில் இந்த விருது அளிக்கப்பட உள்ளது. கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வளாகத்தில் ஆண்டுதோறும், இயற்கை விவசாயத்தில் சிறந்த ஆய்வு செய்து தேர்வாகும் மாணவருக்குப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும். விருதுடன் ₹50,000/- ரொக்கப்பரிசும், தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். நம்மாழ்வாரின் பணியையும், இயற்கை விவசாயத்தின் மேன்மையையும் இன்றைய விழாவில் நினைவு கூர்ந்த ஆளுநர் நம்மாழ்வாரை பெருமைப்படுத்தும் வண்ணம் இவ்விருதை அறிவித்துள்ளார். நம்மாழ்வார் முதுநிலை ஆய்வு விருது – இயற்கை விவசாயம் என்கிற புதிய விருதை ஆளுநர் அறிவித்துள்ளார்.

Read More

கொடைரோடு அருகே ஊத்துப்பட்டியில் அருள்மிகு மாலம்மாள், வீரபுத்திரன், சென்னப்பன் மற்றும் கருப்பணசாமி கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்…… திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ஜம்புத்துரைக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு மாலம்மாள், வீரபுத்திரன், சென்னப்பன், கருப்பணசாமி மற்றும் செல்வ விநாயகர் கோவில் வைகாசி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய விழாவில் இரவு மேளதாளம் தாரை வாணவேடிக்கைகள் முழங்க அம்மன் பூங்கரகம் ஊர்வலமாக அழைத்து வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாலம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது, விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ஆணிக்கால் செருப்பு அணிந்து சாமியாடி வந்த பூசாரி சரவணன் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து,பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கியும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர், மேலும்…

Read More

உடன் வந்த தாயார் 25 பேரின் எச்சரிக்கையையும் மீறி,ஆபத்தான பகுதியில் சென்று குளித்ததால் நேர்ந்த விபரீதம். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குரங்கணி மலைக் கிராமம்.கேரள எல்லையை ஒட்டி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள இப்பகுதிக்கு டாப் ஸ்டேஷன், முதுவாக்குடி,சென்ட்ரல்,முட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து மழை நீர் மற்றும் காட்டாற்று வெள்ளநீர் வழிந்து இப்பகுதியில் அருவியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்து குளித்து தொடர்ந்து விபத்துகளில் சிக்கியதால் இப்பகுதியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.இதனையும் மீறி வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று காலை கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதி தனது குடும்பத்தினர் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோருடன் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர்.…

Read More

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான புதிய கேப்டன் யார் என்ற பந்தயத்தில் ஸ்ரேயாஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டனாக ரோகித் ஷர்மா செயல்பட்டு வருகிறார். அவருக்கு பிறகு அணியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் பெயர்கள் பரிசீலினையில் உள்ளன. நடந்து முடிந்த 18-வது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான அபாரமாக செயல்பட்டவர் ஸ்ரேயாஸ். இறுதிப்போட்டி வரை அணியை அழைத்துச் சென்றதில் அவரது பங்களிப்பு முக்கியமானது. இந்நிலையில் கில், பண்ட் பெயர்களோடு ஸ்ரேயாஸ் பெயரும் இணைந்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் தொடரில் 2020-ம் ஆண்டு டெல்லி கேப்டனாக அதனை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது, கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்தது, நடப்புத் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இறுதிப்போட்டி வரை முன்னேறியது என்று ஸ்ரேயாஸ் ஒரு கேப்டனாக திறபம்டி செயலாற்றி…

Read More

உத்தரகாண்ட் மாநிலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் ஒன்று சாலையில் அவசரம், அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்குள்ள குப்த்காஷி என்ற இடத்தில் இருந்து 5 பயணிகளுடன் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அந்த சிக்கலை சரி செய்ய விமானி முயன்றபோதும் அது பலனளிக்கவில்லை. மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்புவதற்குள் அசம்பாவிதம் நேரிடும் என்பதை உணர்ந்த விமானி, சமயோசிதமாக செயல்பட்டு மாநில நெடுஞ்சாலை ஒன்றில் ஹெலிகாப்டரை தரையிறக்கினார். சாலையின் குறுக்கே ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்குவதைக் கண்ட பொதுமக்கள் அச்சத்துடனும், ஆச்சர்யத்துடனும் அதனை பார்த்தனர். நட்டநடு சாலையில் ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது விமானிக்கு சிறிது காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் நற்செயலாக பயணிகள் 5 பேருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக விரைந்து வந்த போலீசார் ஹெலிகாப்டரை வல்லுநர்கள் உதவியுடன் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால்…

Read More

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ரோகித் ஷர்மா ஓய்வு பெற்று விட்டநிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் இந்திய டெஸ்ட் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 20-ந் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கான இடையிலான போட்டியில் சாய் சுதர்சனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விளையாட்டு இதழ் ஒன்றுக்கு சாய் சுதர்சன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.. நான் ஐ.பி.எல் தொடரின் இறுதிபோட்டிக்கு பிறகு விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்தேன். இதற்கு முன்பாகவும் அவருடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். நான் எப்போதெல்லாம் அவரிடம் பேசுகிறேனோ அப்போதெல்லாம் பேட்டிங் குறித்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். குறிப்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடும்…

Read More

பாரதிய ஜனதாவினருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது முருகன் மாநாட்டை நடத்துகிறோம், திமுக அரசுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது பிறகு ஏன் அவர்கள் முருகன் மாநாட்டை நடத்தினார்கள் என்பதில் தான் சந்தேகமாக இருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வரவுள்ள நிலையில், அவரை வரவேற்பதற்காக மதுரை சென்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அவர்களின் கேள்விகளுக்கு தமிழிசை அளித்த பதில்கள் வருமாறு…. நாங்கள் பயபக்தியோடு முருகன் மாநாடு நடத்த இருக்கிறோம். ஆனால் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பயத்துடன் முருகன் மாநாட்டை பார்க்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், ஆன்மிகம் தழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகிறோம். நாங்கள் எப்போதுமே முருகனை வணங்குபவர்கள்தான். ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறுபவர்கள் முருகன் மாநாடு நடத்தியதுதான் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே திருமாவளவன் கவலைப்பட…

Read More

பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக இணையவுள்ள புதிய திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படம் நவம்பர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படம் ஒரு டைம் டிராவல் (காலப்பயணம்) கதை தொடர்பான எனக் கூறப்படுகிறது. மிகவும் வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகவுள்ள இந்தப் படத்தில், இரண்டு முக்கியமான பெண் கதாபாத்திரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபுவின் தனித்துவமான படைப்பியல், சிவகார்த்திகேயனின்நடிப்பில் உருவாகும் இந்த டைம் டிராவல் படம், தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிசோதனையை கொண்டு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More