Author: Editor TN Talks
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க, சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் வான் வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களது உடைமைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அதில் வந்த பெண் பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது 3.155 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பயணி அவரது பையில் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் கோடிக் கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.…
நான் வைத்து இருக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான், இன்றும் அதில் தான் கம்போஸ் செய்கிறேன்., என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இளைஞானி இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய விருதான தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜாவிற்கு ரசிகர்கள் பூங்கொத்து, ஓவியங்கள் வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா கூறும் போது : நான் பேச்சாளர் இல்லை. நான் ஒரு பட்டாளி. பட்டாளி என்றால் பாட்டு படுபவன். பட்டாளி என்பவன் வேலை செய்பவன். அவன் படும் பாடுகளால் அவன் பட்டாளியாக இருக்கிறான். அந்த பட்டாளிகளில் நானும் ஒருவன். என் பாடு என்பது வேறு. அவர்களது பாடு வேறு. என் பாடு தான் பாட்டுகளாக மாறுகிறது. கோவையில் என் காலடி படாத இடமே இல்லை. அப்போது இருந்த…
அமெரிக்காவில் அகங்காரம் vs பிடிவாதம்! நீடிக்கும் எலான் மஸ்க் – டொனால்ட் டிரம்ப் மோதலின் பின்னணி! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கும் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அகங்கார தலைவரும், பிடிவாத தொழிலதிபரும் நீயா நானா என மோதிக் கொள்ளும் போக்கு, அமெரிக்க அரசியலில் முக்கிய பேசுபொருள் ஆகியுள்ளது. அதன் பின்னணியை அறிந்துகொள்வோம். டிரம்ப்பும் மஸ்க்கும் அமெரிக்காவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் உலகப் பணக்காரர்களில் முதன்மை இடத்திலுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் போட்டியிட நினைத்தார். ஆனால் அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை இல்லாததால் தேர்தலில் பங்கேற்க முடியவில்லை. உடனே, தனக்கு சாதகமான டொனால்ட் டிரம்ப்பை ஆதரிக்கத் தொடங்கினார். ஒரு காலத்தில் தீவிர இடதுசாரியாக இருந்த மஸ்க், திடீரென வலதுசாரிக்கு ஆதரவானார். அக்டோபர் மாதம் 27-ம் தேதி நியூயார்க்கில் நடந்த மேடிசன் ஸ்கொயர் கார்டன் பேரணியில்…
ரஜினிகாந்தின் 171-வது படமாக உருவாகியுள்ள ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர்கான், சிறப்பு தோற்றத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். தற்போது, இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதை ஆமிர்கான் உறுதிப்படுத்தியுள்ளார். வரும் ஜூன் 20-ஆம் தேதி வெளியாக உள்ள ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தின் பிரமோஷனில் கலந்துகொண்ட போது, “லோகேஷ் இயக்கும் ஒரு பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ படத்தில் நான் நடிக்க இருக்கிறேன். அதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும்,” என்று கூறியுள்ளார். முன்பே, லோகேஷ் கனகராஜ், ‘இரும்பு கை மாயாவி’ என்ற சூப்பர் ஹீரோ கதையை உருவாக்கவிருக்கிறார், அதில் நடிகர் சூர்யா…
சூர்யா, வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தனு கூட்டணியில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் தனு பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “இந்தப் படத்துக்கான அனிமாட்ரானிக்ஸ் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன், படப்பிடிப்பு வேலைகளை தொடங்க உள்ளோம்.” சிறந்த தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம், தமிழ்சினிமாவில் மைல்கல்லாக அமையும் என எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ⏳ சூர்யா × வெற்றிமாறன் × தனு – வெறித்தனமான பயணம் தொடங்கவிருக்கிறது!
கோவை அருகே கண்ணம்பாளையம் பகுதியில் வீடுகளில் உலரப் போடப்பட்டிருந்த உள்ளாடைகள் திருடப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் ஒருவர் இந்த துணிகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கோவை கண்ணம்பாளையத்தில் வசிக்கும் பொதுமக்கள், வீடுகளில் துவைத்து உலரப் போடப்பட்டிருந்த துணிகள், குறிப்பாக உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் அளித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் வீடுகளுக்கு வந்து துணிகளைத் திருடிச் செல்வது தெரியவந்துள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்…
பட்டமளிப்பு கொண்டாட்டம்! நடிகை சிம்ரன் மற்றும் தீபக் பாக்காவின் மகன் பட்டம் பெற்றார்! பட்டமளிப்பு விழாவின் பரிமளம் நிறைந்த இந்த நாட்களில், பிரபல நடிகை சிம்ரனும், அவரது கணவர் தீபக் பாக்காவும் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர். இவர்களின் மகன் தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து, பட்டம் பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், சிம்ரன் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுடன் சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். பலரும் வாழ்த்துகளும், பெருமைமிகுந்த பதிவுகளும் பகிர்ந்து வருகின்றனர். சினிமா துறையிலும், குடும்ப வாழ்க்கையிலும் சிறந்த முன்னேற்றம் காணும் சிம்ரனுக்கு இது மேலும் ஒரு பெருமைமிக்க தருணம். வாழ்த்துக்கள் சிம்ரன் & தீபக் பாக்கா குடும்பத்துக்கு!
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், தமிழகத் தளத்தில் இப்படத்தின் விநியோக உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜயின் முந்தைய படங்களையும் விநியோகம் செய்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மீண்டும் இணையப்போவது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் சேர போலி சான்றிதழ் கொடுத்தால் பெற்றோர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு தவறான மதிப்பெண் பட்டியல் , தவறான சாதி சான்றிதழ், தவறான பிறப்புச் சான்றிதழ் மற்றும் போலி தூதரகச் சான்றிதழ்களை வழங்கினால் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை மேற்காெள்ளப்படும் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 2024-25 ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையின் போது என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் போலி ஆணவங்களை அளித்ததை கண்டுபிடித்தனர். அதேபாேல் தவறான சான்றிதழ்களை அளித்தும் மருத்துவப்படிப்பில் இட ஒதுக்கீட்டில் இடங்களை பெறுவதற்கு முயற்சி செய்ததையும் கண்டுபிடித்தனர். அப்போது அவர்களிடம் மருத்துவக்கல்வி மாணவர் சேரக்கை குழுவின் விசாரணை நடத்தியப் போது, அந்த தவறுகளை தாங்கள் செய்யவில்லை எனவும், பதிவு செய்த…
“நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1256 உயர் மருத்துவ சேவை முகாம்கள் செயல்படுத்திட நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு உயர் மருத்துவ சேவைகள் வழங்க 862 மருத்துவ முகாம்கள் ரூ12.78 கோடி செலவில் செயல்படுத்தப்படும்” என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை செயல்படுத்தும் வகையில், ஜூன் 2025 முதல் பிப்ரவரி / மார்ச் 2026 வரை 1256 உயர் மருத்துவ சேவை முகாம்கள், ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 இலட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 இலட்சத்திற்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் நடத்தப்பட…