Author: Editor TN Talks
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து களமிறங்கினார். இவரை எதிர்த்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவரும் உலகின் தரவரிசையில் 8-வது இடத்தில் இருப்பவருமான போர்ன்பாவீ சோச்சுவாங் மோதினார். 1 மணி நேரம் 18 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பி.வி.சிந்து 22-20, 10-21, 18-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.வி.சிந்து, மூன்றாவது செட்டின் போது 16-13 என்ற முன்னிலை கிடைத்ததை வெற்றியாக மாற்றி இருக்க வேண்டும், ஆனால் எதிர்பாராத விதமாக அதனை செய்ய தவறி விட்டேன் என்றார். இருப்பினும் இளம் வீராங்கனை ஒருவரிடமிருந்தும், இந்த தொடரில் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது என்று பி.வி.சிந்து குறிப்பிட்டார்.
சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.. அந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.. இன்று, உலக சுற்றுச்சூழல் நாள், மட்டுமல்ல. நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் இருக்கிறது என்கின்ற கடினமான உண்மையை உணர வேண்டிய நாளும் கூட ! நம்முடைய குழந்தைங்களின் எதிர்காலம், இப்போது நாம் செய்யும் செயல்களைப் பொறுத்துதான் அமையும் என்ற அந்த நினைவூட்டலோடு என்னுடைய உரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். காடுகள் என்றால் வரைபடத்தில் தெரிகின்றது போல பச்சை திட்டுகள் என்று சாதாரணமாக யாரும் நினைத்துவிடக் கூடாது. காடுதான் இந்த புவி மூச்சுவிட உதவுகின்ற நுரையீரல். இந்தியாவிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வேறு எந்த மாநிலத்திலும் “இத்தனை இயக்கங்கள், திட்டங்கள் இல்லை” என்று நான் அடித்து சொல்கிறேன்! அந்த அளவுக்கு கடந்த 4…
தேர்தலுக்குப் பிறகு இன்டெக்ஸ் கார்டுகள் மற்றும் பல்வேறு புள்ளிவிவர அறிக்கைகளை உருவாக்க ஒரு தொழில்நுட்ப சார்ந்த, ஸ்ட்ரீம்லைன் செய்யப்பட்ட அமைப்பை இந்திய தேர்தல் ஆணையம் உருவாகக் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய தலைவர் ஞானேஷ் குமாரின் தலைமையில், தேர்தல் ஆணையாளர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் அடங்கிய குழுவினர் இதனை உருவாக்கி உள்ளனர். இன்டெக்ஸ் கார்டு என்பது, தேர்தலுக்குப் பிறகு தயாரிக்கப்படும், சட்டப்பூர்வமற்ற ஒரு புள்ளிவிவர அறிக்கை வடிவமாகும். இது தொகுதி மட்டத்திலான தேர்தல் தொடர்பான தகவல்களை ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொது மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது வேட்பாளர்கள், வாக்காளர்கள், பதிவான வாக்குகள், எண்ணப்பட்ட வாக்குகள், கட்சி மற்றும் வேட்பாளர் அடிப்படையிலான வாக்குப் பங்குகள், பாலின அடிப்படையிலான வாக்குப்பதிவு நடைமுறைகள், பிராந்திய வேறுபாடுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயல்திறன் போன்ற பல பரிமாணங்களிலான தரவுகளை வழங்குகிறது.…
பாமக தலைவர் ராமதாசை, தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து பாஜக பிரமுகரும் ஆடிட்டருமான குருமூர்த்தியும், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் 3 மணிநேரம் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக தலைவர் ராமதாசுக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் பேரன் முகுந்தனை, இளைஞர் அணி தலைவர் பதவியில் நியமித்தார் ராமதாஸ். இதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து தான் பனையூரில் புதிய அலுவலகம் திறந்துள்ளதாக கூறினார். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், இனி பாமகவில் தலைவர் பதவியை தானே தொடர உள்ளதாகவும், அன்புமணி செயல்தலைவராக பொறுப்பு வகிப்பார் என்றும் தடாலடியாக அறிவித்தார். கடந்த மே மாதம் 11-ந் தேதி மாமல்லபுரம்…
எல்லோரும் சமாதானமாக செல்வது தான் பா.ம.க- விற்கு நல்லது – பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் !!!
மதுரையில் தான் அமித் ஷா காலூன்ற போகிறார் – கோவையில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சூளுரை !!! கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மகள் காலமான நிலையில் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதற்காக வந்திருக்கிறோம் என தெரிவித்தார். பெங்களூரில் கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த நிகழ்விற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், அதில் ஒருவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த காமாட்சி என்பது மிகவும் வருத்தம் வேதனைக்கு உரிய செய்தி என தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் ஆளுங்க சேர்ந்தவர்கள் சரியான முறையில் ஏற்பாடு செய்யாமல் இருந்தது உயிரிழப்பிற்கு காரணம் என தெரிவித்தார். அதே மகாராட்டிர மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி காலத்தில் இது போன்ற நிகழ்ச்சியில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது எனவும், இது போன்ற…
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வம்சி இன்று காலை சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் ரோப் காரின் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றனர். காலை 8 மணியளவில் நடைபெற்ற சிறுகாலை சந்தி பூஜையில், வேடர் அலங்காரத்தில் உள்ள முருகன் திருவுருவத்தை சுமார் அரைமணி நேரம் தவமிருந்தபோல வழிபட்டனர். சூர்யா நடிக்கவுள்ள 45வது திரைப்படத்தின் கதையை மையமாகக் கொண்டு, கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டதோடு, போகர் சமாதி அருகிலும் நெகிழ்ச்சியாக தரிசனம் செய்தனர். திருப்பணிகள் முடிந்த பின், கோவில் நிர்வாகத்தினர் சூர்யா மற்றும் வம்சிக்கு பிரசாதம் மற்றும் சாமி படங்கள் வழங்கினர். ஏராளமான பக்தர்கள் அவரை சுற்றி நின்று புகைப்படங்கள் எடுத்தனர். பின்னர் கோவில் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்த சூர்யா, பின்னர் ரோப் காரில் கீழே இறங்கி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு,செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தைப்திருப்பித் தர உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த…
8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – கோவை கிங்ஸ் அணி மோதுகின்றன. தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமையை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் வலுவான அடித்தளமாக தமிழ்நாடு பிரிமியர் லீக் எனப்படும் டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 8 சீசன் முடிந்து உள்ளன. அதிகபட்சமாக சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் 4 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் பட்டம் வென்று இருக்கின்றன. டி.என்.பி.எல் -ல் கலக்கும் வீரர்களுக்கு ஐ.பி.எல் கனவு நிறைவேறி வருகிறது. வேக பந்து வீச்சாளர் நடராஜன், சுழற் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர் உள்ளிட்ட வீரர்கள் டி.என்.பி.எல் போட்டியில் அபாரமாக செயல்பட்டதால்…
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரக்கூடிய ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 2 ஆம் தேதி முதல் தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் 9 ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற உள்ளது. குறிப்பாக, இந்த 6 இடங்களில் திமுக சார்பில் வில்சன், சல்மா, எஸ் ஆர் சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் என 4 பேர் வேட்பாளர்களாகவும் அதிமுக சார்பில் இன்பதுறை, தனபால் ஆகியோர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் நாளை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடக்கூடிய திமுக அதிமுக வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். ஜூன் 10ஆம் தேதி வேப்பமனுக்கல் மீதான பரிசீலனையும், பனிரெண்டாம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வேப்பமனுக்களை திரும்ப பெறக்கூடிய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சரியான முன்மொழிகளுடன் ஆறு…
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் உயர்ந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றது. கடந்த சில நாட்களாகவே, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஜூன் 4 காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 564 புதிய கொரோனா தொற்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். . இதுவரை, நாட்டில் மொத்தமாக 4,866 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று வரை மொத்தமாக 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று புதிதாக 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இன்று 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மாநில வாரியான விபரம்: மகாராஷ்டிரா – 3 பேர் கர்நாடகா – 2 பேர் டெல்லி – 2 பேர்