Author: Editor TN Talks
முல்லைப் பெரியாறு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த டிசம்பர் மாதம் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த மத்திய கண்காணிப்பு குழு மற்றும் துணை கண்காணிப்பு குழு ஆகிய இரண்டும் கலைக்கப்பட்டது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் புதிய கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவிற்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு கடந்த 15 தினங்களாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 130 அடிக்கும் மேலாக உள்ளது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை புதிய கண்காணிப்பு துணைக் குழுவினர்,இன்று முதல் முறையாக அதன் இயக்குனர் கிரிதர் தலைமையில், தமிழக அரசின் சார்பில் தலைமை பொறியாளர் சாம்…
கமலுக்கு ஆதரவாக தமிழக கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு.. தமிழ்நாட்டின் முதன்மையான திரைக் கலைஞரும், “மக்கள் நீதி மையம்” கட்சியின் தலைவருமான கமலஹாசன், அண்மையில் அவரது “தக் லைஃப்” என்ற திரைப்படப்பாடல் வெளியீட்டு விழாவில், அப்படத்தில் நடித்தவரும், அவ்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவருமான கர்நாடகக் கதாநாயக நடிகர் சிவராஜ்குமார் அவர்களைப் பாராட்டும் வகையில், அவரின் தந்தை பிரபல கர்நாடக நடிகர் ராஜ்குமாரை நினைவு கூர்ந்து, நாமெல்லாம் உடன் பிறப்புகள் என்று கூறி – மொழிக் குடும்பமாகவும் நாம் உறவினர்கள் என்பதைக் குறிக்க, தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் என்றார். அது உறவுணர்ச்சியின் வெளிப்பாடே தவிர, கன்னடத்தைத் தாழ்வுபடுத்தும் நோக்கத்தில் கூறப்பட்ட கருத்து அல்ல! ஆனால் கர்நாடகத்தில் எப்போதும் அங்கு வாழும் தமிழர்களைத் தாக்குவதைத் தங்கள் களியாட்டமாகக் கொண்டுள்ள கன்னட இனவெறி அமைப்புகளைச் சேர்ந்த சிலர்,…
ஏழு வயது பேத்தியை தொடர்ந்து மூன்று மாதங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தாத்தாவிற்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியை,சிறுமியின் தாயாருடைய தந்தை வைரவன்(58)என்பவர் தொடர்ந்து மூன்று மாதங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 13.02.2024 அன்று புகார் அளித்தார். தனது 7 வயது மகளை, தனது தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்ததால் அதிர்ச்சி அடைந்த உத்தமபாளையம் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமி, மற்றும் சிறுமிகள் தாத்தாவான வைரவன் என்பவரிடம் விசாரணை நடத்தியதில், சிறுமியை அவரது தாத்தாவை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தொடர்ந்து மூன்று மாதங்களாக சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்ததுடன்,வெளியே…
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்சுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 18-வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற தொடரில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய 4 அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இதில் முதல் போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தியதால் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தியது மும்பை அணி. பின்னர் பஞ்சாப் – மும்பை அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப், பெங்களூரு ஆகிய இரண்டு அணிகளுமே இதுவரை ஐபிஎல்…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரன், குற்றம் நடைபெற்ற மறுநாள் அதாவது டிசம்பர் 24-ந் தேதி திமுக நிர்வாகியிடம் பலமுறை பேசியிருப்பதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி இருந்தார். அந்த திமுக நிர்வாகி அமைச்சர் மா.சுப்ரமணியனிடமும் பேசியிருப்பதாகவும், எனவே இந்த வழக்கில் அவரையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், ஒரு வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளரிடம் பேசுவது ஒரு குற்றமா என்று வினவியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த சாலையோர உணவகத்தை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அன்றைய தினம், சம்பந்தப்பட்ட குற்றவாளி, தனது செல்போனில் பலமுறை குறிப்பிட்ட சில நபர்களிடம் பேசியதாக புகார் எழுந்தது.…
இந்த காலத்திலும் ஆண் குழந்தை தான் வேண்டும் என்ற மனநிலையை என்னவென்று சொல்வது, அதுவும் மனைவியை கொலை செய்யக்கூடிய அளவுக்கு செல்லும் பழமைவாத மனநிலை கொண்ட நபர் பொதுவெளியில் உலவுவது சரியல்ல.. முழுமையான பின்னணி என்னவென்றால்… திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பார்வதிக்கும், சிறுமலையிலுள்ள தென்மலை, கருப்பசாமி கோயில் அருகே வசிக்கும் செல்வகுமார் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. செல்வகுமார் ஆண் குழந்தை வேண்டும் என்று அடிக்கடி பார்வதியை துன்புறுத்தி உள்ளார். இதே காரணத்தைக் கூறி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பார்வதியை கம்பியால் தாக்கியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர் கடந்த 29ஆம் தேதி சிறுமலை சென்று பார்வதியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை அறிந்த திண்டுக்கல் மாவட்டம் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் நேற்று இரவு…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா ஆத்தங்கரைபட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி நிருவி தலையில் ரத்தக்குழாய் வெடிப்பால் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைச் சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். இதனையடுத்து நிருவியின் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. அந்த உடல் உறுப்புகள் மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. முதல் கட்டமாக கல்லீரல் மதுரை நகரில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கல்லீரல் உரிய பாதுகாப்புடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதுரை மாநகருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. உடல் உறுப்பு மதுரை மாநகருக்கு செல்வது குறித்து காவல்துறையினருக்கு…
திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு அகஸ்தியர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு, வாகனங்கள் நிறுத்துவதற்கு வனத்துறை சார்பாக பணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்க கோரி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், “திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு அகஸ்தியர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்’ என்ற பெயரில் புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமிக்க கோயில் உள்ளது இந்த பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கே அகஸ்தியர் கோவிலின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பொதுமக்கள் பக்தர்கள் என பலரும் வந்து குளித்து செல்கின்றனர். மேலும் இந்த பகுதியில் நுழைவதற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நுழைவு கட்டணம் உள்ளூர் மக்களிடமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த அருவியில் குளிப்பதற்கு மற்றும்…
நடிகர் கமல்ஹாசன் ‘தக் லைப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம், நாளை மறுநாள் (5-ந்தேதி) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி’ என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கர்நாடக அரசியல்வாதிகள், கன்னட அமைப்புகள், கன்னட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. கன்னட சினிமா வர்த்தக சபையும் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது எனக் கூறியுள்ளது. இதனால் கர்நாடகத்தில் அவரது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்…
தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்று நடிகர் கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் தக் லைப். இப்படம் நாளை மறுநாள் அதாவது 5-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதன் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் கடந்தவாரம் நடைபெற்றது. அதில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் கலந்து கொண்டார். அவரை வரவேற்கும் விதமாக பேசிய நடிகர் கமல், தன்னுடைய சகோதரன் என்ற தொனியில் தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட மொழி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முதலமைச்சர் சித்தாமையா கூட, கமல் மன்னிப்புக் கேட்க வேண்டும், எப்படி அவ்வாறு பேசலாம் என தனது எதிர்ப்பை பதிவு செய்தார். உச்சக்கட்டமாக கமல் மன்னிப்பு கேட்காவிட்டால், கர்நாடகாவில் தக் லைப்…