Author: Editor TN Talks
தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு மட்டுமே அரசு கடன் திட்டங்கள் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது உண்மை என்றாலும், மற்ற பிரிவினருக்கும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. சிறுபான்மையினர் நலனுக்கான தமிழக அரசின் திட்டங்கள்: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதத்தினர் போன்ற சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக குறைந்த வட்டியில் பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுகடன், கைவினைக் கலைஞர்களுக்கான கடன், கல்விக்கடன் போன்ற பல திட்டங்கள் அடங்கும். தனிநபர் கடன் திட்டம்: ஆண்டுக்கு 6% வட்டியில் ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. குடும்ப…
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, ஜூன் 20, 2025 முதல் ஆகஸ்ட் 18, 2025 வரை சில முக்கிய விரைவு ரயில்களின் புறப்படும் மற்றும் வந்தடையும் நிலையங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 5 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன. இது தென் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும். தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 5 விரைவு ரயில்கள்: சென்னை எழும்பூர் – மதுரை தேஜஸ் விரைவு ரயில் (22671): இந்த ரயில் ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 18, 2025 வரை தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும். எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் (16127-16128): இந்த ரயில் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 19, 2025 வரை தாம்பரத்தில் இருந்து காலை…
சன் டிவி பங்குகள் தொடர்பாக அண்ணன் கலாநிதி மாறனுக்கு, தம்பியும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பங்குகள் விவகாரத்தில் 2003-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலையை தொடர வேண்டும் என்று அந்த நோட்டீசில் அவர் வலியுறுத்தி உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இது தயாநிதி மாறன் அனுப்பும் 2-வது நோட்டீஸ் ஆகும். இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி குழுமங்களில் முக்கியமானது சன் குழுமம் ஆகும். இதனை மறைந்த முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன் நடத்தி வருகிறார். இந்தியாவின் பில்லியனர்களில் இவர் ஒருவர் ஆவார். இவருடைய சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் தான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தவறான நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத பணபரிமாற்ற விவகாரம் போன்றவற்றில் சன் குழுமம் ஈடுபட்டுள்ளதாக அந்த நோட்டீசில் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டி உள்ளார். 2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பங்குதாரர்கள்…
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளும் நாளை (19.06.2025) முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. ரோகித், விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி, எப்படி விளையாட போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் பந்துவீச்சு கூட்டணியை முன்னணி வீரரான பும்ரா வழிநடத்தவுள்ளார். இருப்பினும் அவரால் 5 போட்டிகளிலும் விளையாட முடியுமா என்பது கேள்வி தான். இருப்பினும் அவர் விளையாடும் போட்டிகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்சமயம் உலகின் நம்பர் 1 பவுலராக செயல்பட்டு வரும் பும்ரா கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அதே ஃபார்மோடு தொடரும் பட்சத்தில் அது இங்கிலாந்து அணி திணற வாய்ப்புள்ளது. இந்த…
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், நாளை இரு அணிகளுக்கும் இடையே முதல் போட்டி நடைபெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்-க்கு உட்பட்ட தொஅட்ர் என்பதால், இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அத்துடன் 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த நிலையை இந்திய அணி இந்த வருடம் மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கி காணப்படுகிறது. முதல் போட்டிக்கு தயாராகும் இந்திய அணியினர் லீட்சில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் கூடுதல் வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையானது, முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா, சமண சிற்பங்கள் என மதநல்லிணக்கத்துக்கு சான்றான தளமாக விளங்குகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தர்காவுக்கு ஆடு, கோழியை பலியிட சென்ற இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். திருப்பரங்குன்றம் மலை இந்துகளுக்கு சொந்தமானது, அங்கு ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது என பாஜக உட்பட இந்து அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்தன. தொடர்ந்து இந்தாண்டு தொடக்கத்தில் திருப்பரங்குன்றதிற்கு சென்ற எம்.பி நவாஸ்கனி மலைப் படிக்கட்டுகளில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதும் சர்ச்சையானது. மறுபுறம் தொல்லியல் துறை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் நெற்றியில் வைக்கப்பட்ட விபூதியை அழித்து விட்டு விசிக தலைவர் திருமாவளவன் மக்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது பேசுபொருளாக மாறியுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் விசிக தலைவர்…
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை நடந்த பல்வேறு தேர்தல்களில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டி திருப்பூரை சேர்ந்த மணிமாறன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளித்த கல்வி கடன் ரத்து என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் மாணவர்கள் வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் வழங்குவதை தடுக்க விதிகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்,…
1970ம் ஆண்டு ஒரு பைசா மின் கட்டண உயர்வுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த ராமசாமிகவுண்டர், மாரப்பகவுண்டர், ஆயிக்கவுண்டர் என்ற மூன்று விவசாயிகளின் நினைவாக பெருமாநல்லூரில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று (19.06.2025) நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கலந்து கொண்டு, நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசுகையில் விவசாயிகள் ஒன்று பட்டால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்றார். விவசாயிகள் ஒருங்கிணைந்து நின்றால் அரசுக்கு அழுத்தம் கொடுத்து கள் இறக்க அனுமதி பெற முடியும் அப்போதுதான் தென்னை விவசாயிகள் மற்றும் பனைமரம் விவசாயம் செழிக்கும் எனவும் கூட்டணி , தொகுதி பங்கீடு குறித்து வெளியே பேசுவது தவறான விஷயம் எனவும் அது கட்சிகளுக்கு இடையே நடக்கக்கூடிய ஒன்று என தெரிவித்தார் மேலும் ஆன்மீகத்தை வைத்து அரசியல்…
திருநெல்வேலி தொகுதி எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சான்று ஆவணங்களாக பதிவு செய்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜராகியிருந்த நயினார் நாகேந்திரன் சாட்சி கூண்டில் ஏறி, சத்திய பிரமாணம் செய்து, வாக்கு மூலம் அளித்தார். அப்போது, ராபர்ட் புருசுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த சான்றளிக்கப்பட்ட…
திருவண்ணாமலை நித்யானந்த பீடத்தை சேர்ந்த நித்தியானந்தா என்ற ராஜசேகர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய் திருந்தார். அதில், நான் பக்தராக ஆதினம் மடத்திற்குள் நுழைய தடைவிதிக்க கூடாது. தனி நீதிபதி உத்தரவுக்கு இடைகால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மேல்முறையீட்டு மனு கூறியிருந்தார். இந்த மனு இன்று(19.06.2025) நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன் கடந்த பல வருடங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைகால விதித்து உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து இந்து சமய அறநிலைய துறை,பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரர் எங்கு உள்ளார். கைலாசா எங்கு உள்ளது. அங்கு எப்படி செல்வது. நீங்கள்…