Author: Editor TN Talks
கல்விச் செல்வம் மட்டும்தான் வெள்ளத்தால் போகாது, வெந்தழலால் வேகாது, யாராலும் கொள்ளையிட முடியாது என்பார்கள். அந்தக் கல்வியைப் பல தலைமுறைகளுக்குக் கொடுத்து வந்த அறிவுத் திருக்கோயிலான யாழ் பொது நூலகம், 44 ஆண்டுகளுக்கு முன், இதே ஜூன் 1-ம் தேதிதான் எரியூட்டப்பட்டது. வரலாற்றுக் கறுப்பு நாளின் வடு உலகத் தமிழினத்தின் மனங்களில் இன்னும் ஆறாமல் இருக்கிறது. இனவாத பிரச்னையும் இலங்கையும் இலங்கையில் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் சிங்களர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இனவாத பிரச்னை இருந்திருக்கிறது. தமிழர்களைச் சிங்களர்கள் வெறுத்திருக்கிறார்கள். அவர்களது வளர்ச்சியும் முன்னேற்றமும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதில் கூட வெறுப்பும் அரசியலும் விதைக்கப்பட்டிருந்த காலம் அது. அதுதான் உலகத் தமிழர்களின் அறிவியல் செல்வமாகப் போற்றப்பட்ட யாழ் நூலகத்தை எரித்தது. இதைப் பற்றிப் பேசும்போது “தமிழர்களின் அறிவை என்று அவர்கள் எரித்ததனால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்” என்கிறார், யாழ்…
“நீயும் நானும் சமோனும் ஒரே பறவையின் இறகுகள்” என்று ஹேவனிடம் மைக்கோல கெல் சொல்லும் இந்த ஒரு வரி வசனம் தான், இந்த Sirens-வெப் சீரிஸின் மொத்த உருவாக்கமே. ஞாபக மறதியான தன் தந்தையை பார்த்துக்கொள்ள ஹேவன்( மேகன் பாஹி) தனது சகோதிரி சைமன் ( மில்லி அல்காக்) உதவியை நாடி அவள் பணிபுரிந்துக்கொண்டு இருக்கும் மிக ஆடம்பர தீவுக்கு பயணமாகிறாள். அந்த தனி தீவின் முதலாளியான மைக்கோல கெல்லுக்கும் ( ஜுலியான் மூர்) ஹேவனுக்கும் சைமனுக்கு நடக்கும் குச்சுபுடி ஆட்டம் தான், டார்க் காமெடி தான் இந்த சீரிஸ் . மூன்று பெண்கள் வெவ்வேறு தேவைகள், ஆனால் பணம் தான் பிரதானம். இதில் யாருக்கு என்ன கிடைக்கிறது என்று போகிறது இந்த தொடர். வாழ்க்கை அதன் திசையில் போவதாக நாம் நினைக்கு அந்த ஒரு நொடி தான், நம்மை தேடி சிக்கல் வரும். அப்படியாக தான் ஹேவன் தன் தங்கையை…
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்ட 81 பேர் அஸ்ஸாம் போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்தவகையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட 6 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உதவியதாக இவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சமூக வலைத்தள கணக்குகள் கடும் தணிக்கைக்கு உள்ளாகின. டெல்லி, மகாராஷ்ட்ரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் தேசவிரோத பதிவுகளை சமூக வலைதளங்களில்…
அந்தக் காலத்தில் எந்த ஊருக்குச் சென்றாலும் நம்முடைய கொடி பறக்கிறதா என்று என் கண்கள் தேடும். தமிழ்நாட்டில் அத்தனை ஊரிலும், அத்தனை நகரத்திலும் அதிகக் கொடி ஏற்றிய கை, இந்த ஸ்டாலினின் கை. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் – அறிவுலக ஆசான் பேரறிஞர் அண்ணா – தமிழினத் தலைவர் கலைஞர் – திராவிட முன்னேற்றக் கழகம் – கருப்பு சிவப்புக் கொடி – உதயசூரியன் சின்னம் – அண்ணா அறிவாலயம், இவைதான் நம் உயிர்! தடம் மாறாத கொள்கைக் கூட்டம் நாம்! அதனால்தான் எந்த கோமாளிக் கூட்டத்தாரும் நம்மை வெல்ல முடியவில்லை; இனியும் வெல்ல முடியாது! ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு! அடுத்த ஆண்டு இந்த நேரத்தில்என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், “ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!”. “இரண்டாவது முறையாக திராவிட…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தில் தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மன்னிப்புக் கோரியுள்ளார். சமீபத்தில் மாமல்லபுரத்தில் தவெக சார்பில் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. மாநிலம் முழுவதும், 10 மற்றும் 12-ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளை அழைத்து அவர்களுக்கு பரிசும், பாராட்டும் தெரிவித்தார் நடிகரும், தவெக தலைவருமான விஜய். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசிக்கொண்டே நடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகின. அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் குறித்து ஆதவ் அர்ஜுனா தரம்தாழ்ந்து அவர்களை விமர்சிப்பது போல் கேட்டது.…
டெல்லியில் யமுனை ஆற்றின் கரையில் உள்ள அடித்தட்டு மக்கள் வாழும் குடியிருப்புகள் மதராஸி கேம்ப் என்று அழைக்கப்படுகின்றன. சமீபத்தில் டெல்லி பாஜக அரசு அவர்களை அப்புறப்படுத்தியது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.. மதராசி கேம்ப்” என்பது தெற்கு டெல்லி, நிஜாமுதீன் ரயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள ஓரங்கட்டப்பட்ட குடிசை பகுதியாகும். இக்குடிசைப் பகுதியிலுள்ள 370 குடிசை வீடுகளில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். தில்லி உயர்நீதிமன்றம், “மதராசி கேம்ப்” என்பது பராப்புல்லா வடிகாலின் கரையில் கட்டப்பட்ட அனுமதியில்லாத கட்டடம்/ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால், வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மழைக்காலத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்படுகிறது. எனவே, Delhi Urban Shelter Improvement Board (DUSIB) சட்டம் மற்றும் தில்லி சேரி மற்றும் ஜேஜே குடியிருப்பு இடமாற்றக் கொள்கை, 2015ன் கீழ் தகுதியான குடியிருப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்…
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணை தேனி, மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இன்றி வைகைஅணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து அணைக்கான நீர்வரத்தும் மிகவும் குறைவாக இருந்து காணப்பட்டது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாகவும் , முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பாலும், வைகைஅணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 949 கன அடியாக இருந்த வைகை அணைக்கான நீர்வரத்து தற்போது வினாடிக்கு 1887 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 54.36 அடியில் இருந்து தற்போது 55.36 அடியை எட்டி…
ஏன் இந்த தண்ணீர் திறப்பு நாடகம்? தேனி,மதுரை,திண்டுக்கல், சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தேவையான நீரை வழங்குவது முல்லைப் பெரியாறு அணை. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கடந்த மூன்று மாதங்களாக அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டியது. இந்த நிலையில் இன்று முதல் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்திற்காக அடுத்த 120 நாட்களுக்கு வினாடிக்கு 200 கன அடி வீதமும்,தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி வீதமும் என 300 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று காலை தேக்கடி தலை மதகு பகுதியில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி நீரை தேனி…
மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு நடைபெற்றது. இதில் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 3,400 பொதுக்குழு உறுப்பினர்கள், 4,000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். திமுகவில் 23 அணிகள் உள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான அணி, கல்வியாளர்கள் அணி உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் முழுவிவரம் வருமாறு… 1. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்! 2. மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுகள்! 3. இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு! 4. உழவர்கள் – நெசவாளர்கள் – மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்! 5. தமிழினத்திற்குப் பெருமை…
யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி மாதம் 9-ந் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று தேமுதிக எதிர்பார்த்து வந்த நிலையில், அவர்களுக்கு 2026 ராஜ்யசபா தேர்தலில் இடம் தரப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 5 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி என்று எழுதி கொடுத்தது அதிமுக தான் என்று கூறினார். இப்போது 2 இடங்களிலும் அதிமுகவினரே போட்டியிட உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்பாக அக்கட்சியின் கே.பி.முனுசாமி கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இதனை…