Author: Editor TN Talks

நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் போதை ஆசாமிகளால் மக்களுக்கு இடையூறு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை குரோம்பேட்டையில் சாலையின் நடுவே சைக்கிளை தள்ளிச் சென்ற போதை ஆசாமியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருக்கக் கூடிய அனைத்து சாலைகளும் எப்போதும் கூட்டம் நிறைந்தே காணப்படும். குறிப்பாக காலை, மாலை அலுவலக நேரத்தில் மிக அதிக கூட்ட நெரிசல் இருக்கும். ஆங்காங்கே நடைபெறும் மெட்ரோ பணிகளால் சாலைகள் மாற்றிவிடப் பட்டதும் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் எனலாம். அப்படியிருக்க, சில சமயங்கள் இந்த போதை ஆசாமிகள் சாலையில் செய்யும் சில காரியங்கள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். சென்னையின் குறிப்பிட்ட பிசியான சாலைகளில் ஒன்று குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலை. இந்த சாலையில் நடுவே மர்ம நபர் ஒருவர் சைக்கிளை நட்ட நடு சாலையில் தள்ளிச் செல்வதும், திரும்பி வருவதுமாக சென்றுள்ளார். வாகன ஓட்டிகள் ஒதுங்கிச் செல்ல சொன்னாலும் அதனை கண்டு கொள்ளாமல் சாலையின், நடுவே…

Read More

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி சில வருடங்களிலேயே 50 படங்களுக்கு மேல் நடித்து வருபவர். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனது எதார்த்த நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். தமிழ் சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி. ஃபார்சி என்ற வெப் சீரிஸ், ஜவான், மெரி கிறிஸ்துமஸ் பட வெற்றியை தொடர்ந்து மேலும் பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மகாராஜா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஏஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தை இயக்கி இருந்தவர் ஆறுமுக குமார். அந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருப்பினும் மீண்டும் இந்த…

Read More

தமிழகத்தில் மாநிலங்களவைக்கான 6 இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த 6 இடங்களில், தற்போதுள்ள நிலவரப்படி, திமுகவிடம் 4 இடங்களும், அதிமுகவிடம் 2 இடங்களும் உள்ளன. திமுக தனது 4 இடங்களுக்கான வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன் விவரம்: வில்சன் எஸ்.ஆர். சிவலிங்கம் சல்மா கமல் ஹாசன் (மக்கள் நீதி மய்யம் சார்பில்) இந்த வேட்பாளர்கள், ஜூன் 2 ஆம் தேதி தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்புமனு தாக்கல் தலைமைச் செயலகத்தில் நடைபெறும். தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூடுதல் சட்டப்பேரவைச் செயலாளர் சுப்பிரமணியன், இந்த மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாகச் செயல்படுவார். அவரது முன்னிலையில் வேட்புமனுக்கள் பெறப்படும். அதிமுக இதுவரை தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. வேட்புமனு தாக்கல் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 9 ஆம் தேதி வரை நடைபெறும்.

Read More

திரும்பிய பக்கமெல்லாம் ‘முத்தமழை’ பாடல்தான் டிரண்டிங். அதிலும் சின்மயி பாடியது சிறந்ததா? தீ பாடியது சிறந்ததா? என ரசிகர்கள் மத்தியில் பெரும் பஞ்சாயத்து நடக்கிறது. இதில் தக் லைஃப் படத்திற்கு லாபமோ இல்லையோ சின்மயிக்கு அடித்திருக்கிறது பரிதாப அலை. அவரும் அதை கூடியவரையில் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்.  சின்மயியும் மீட்டூவும்  கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் மூலம் அறிமுகமான பின்னணிப் பாடகி சின்மயி, அதன்பின் பாடிய பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். பின்னணிப் பாடகராக மட்டுமின்றி பல நடிகைகளுக்குப் பின்னணிக் குரலும் பேசி வந்தார் சின்மயி. திரை வாழ்க்கை நன்றாகவே சென்றுகொண்டிருந்தபோதுதான் 2018-ம் ஆண்டு  MeToo குற்றச்சாட்டை முன் வைத்தார் சின்மயி. பாடலாசிரியர் வைரமுத்துவும், நடிகர் ராதா ரவியும் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் அளித்தார். முதலில் அதற்கான சாட்சிகள் தன்னிடம் இருந்ததாகச் சொன்னவர், பின்னர் அதைக் காணவில்லை என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read More

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில், சென்னையில் மின்சாரப் பேருந்துகள் சேவை அடுத்த மாதம் ஜூன் 3 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தச் சேவையைத் தொடங்கி வைக்கவுள்ளார். முதற்கட்டமாக 120 பேருந்துகள் இயக்கம்: பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு, முதற்கட்டமாக 120 மின்சாரப் பேருந்துகள் சென்னை சாலைகளில் இயங்கத் தயாராக உள்ளன. இந்த பேருந்துகள் 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும். 625 மின்சாரப் பேருந்துகள் இலக்கு: 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் சென்னை முழுவதும் மொத்தமாக 625 மின்சாரப் பேருந்துகள் இயங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த 120 பேருந்துகள் அதன் ஒரு பகுதியாகும். இந்த நவீன மின்சாரப் பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதக் கேடும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் பின்னணி: 2023 ஆம் ஆண்டில், ஜெர்மன் வங்கியின் நிதி உதவியுடன் 500…

Read More

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்தித்துப் பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உற்சாக உரை: மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக விஜய் தெரிவித்தார். “நீட் மட்டும்தான் உலகமா? அதைத்தாண்டி பல்வேறு விஷயங்கள் உள்ளன” என்று கூறி, மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தங்கள் கல்விப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஊழலற்ற ஜனநாயகம் குறித்து வலியுறுத்தல்: முறையான ஜனநாயகம் இருந்தால்தான் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் என்று குறிப்பிட்ட விஜய், “இதுவரைக்கும் ஊழலே செய்யாதவர்களைத் தேர்வு செய்யுங்கள்” என்று மக்களை கேட்டுக்கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. “காசுக்காக ஓட்டுப்போடும் கலாசாரம் முடிவுக்கு வர…

Read More

கேரளாவில் இன்று (மே 30, 2025) இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதேபோல், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, பத்தனம்திட்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான “ஆரஞ்சு அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நிலவரம் – அடுத்தடுத்த நாட்கள்: இன்று (மே 30, 2025): ரெட் அலர்ட் (அதிதீவிர கனமழை): இடுக்கி, கண்ணூர், காசர்கோடு. ஆரஞ்சு அலர்ட் (அதி கனமழை): திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, பத்தனம்திட்டா. நாளை (மே 31, 2025): கேரளாவின் 14 மாவட்டங்களிலும் மழை படிப்படியாக குறைந்து கன மழைக்கான “மஞ்சள் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 1, 2025: மழை மேலும்…

Read More

கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில், 2025-26 ஆம் கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவித்துள்ளார். உயர்கல்வித் துறை சார்பில் இக்கல்வியாண்டிலேயே (2025-2026) இந்தக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. அவை அமையவுள்ள இடங்கள்: வேலூர் மாவட்டம் – கே.வி.குப்பம் திருச்சி மாவட்டம் – துறையூர் கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் இந்த அறிவிப்பு, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்குவதோடு, அவர்கள் தங்கள் சொந்தப் பகுதியிலேயே தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வரும் கல்வி விருது வழங்கும் விழா, இந்த ஆண்டும் கோலாகலமாக இன்று (மே 30, 2025) காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் நடைபெறுகிறது. விஜய்யின் இந்தத் திட்டம் மாணவ, மாணவிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, கல்வி ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. இவரின் கையால் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று வருகின்றனர். விழாவின் சிறப்பு அம்சங்கள்: பங்கேற்பாளர்கள்: சென்னை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில் இருந்து 600 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்கின்றனர். பரிசு பெறுபவர்கள்: 10…

Read More

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பொம்மனம்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு காளியம்மன் மற்றும் பகவதி அம்மன் வைகாசி உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், கிராம இளைஞர்கள் செய்த ஒரு புதுமையான ஏற்பாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விழாவின் முதல் நாளான நேற்று (மே 29, 2025) அம்மன் பூங்கரகம் ஜோடித்து, தாரை தப்பட்டை, வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி எடுத்து, பொங்கல் வைத்து, கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு வாக்காளர் அட்டை: இந்த ஆண்டு விழாவின் சிறப்பம்சமாக, ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் விநாயகர் முதல் முத்தாலம்மன், காளியம்மன், கன்னிமார், நாகம்மாள் என அனைத்து தெய்வங்களுக்கும் பிறந்த தேதி, வருடம், தொகுதி ஆகிய விவரங்களுடன் வாக்காளர்…

Read More