Author: Editor TN Talks
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை “பொம்மை முதலமைச்சர்” என்று அஇஅதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணைக்கு உத்தரவிட்டது குறித்து அஇஅதிமுக தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. அஇஅதிமுகவின் முக்கிய குற்றச்சாட்டுகள்: * “ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கம் நீதிமன்ற நடவடிக்கைக்கும் நீடிக்கிறதா?”: அஇஅதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாக விமர்சித்த அஇஅதிமுக, தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும், அதிலும் குறிப்பாக எஸ்.ஐ.டி விசாரணைக்கும் முதலமைச்சர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாகவும், இது வெட்கக்கேடானது என்றும் சாடியுள்ளது. * “காவல்துறை நீதி பெற்றுத் தந்ததா?”: உயர்நீதிமன்றம் எஸ்.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு, தமிழக காவல்துறை நீதியை பெற்றுத் தரத் தவறியதே காரணம் என அஇஅதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. அவ்வாறெனில், அரசின் தலையீடு இல்லாமல் நடக்க வேண்டிய எஸ்.ஐ.டி விசாரணையை அரசு “செல்வாக்கு செலுத்தியதாக” ஒப்புக்கொள்கிறதா என்றும் அஇஅதிமுக வினவியுள்ளது. * “நிர்வாகத்…
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவானது. பிறகு இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்தது. இருப்பினும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது. இந்தியா பாகிஸ்தானை தாக்குவதற்கு முன்பாகவே காஷ்மீர் சுற்றிவட்டார மாநிலங்களில் போர் ஒத்திகை நடைபெற்றது. அதேபோன்று, தற்போதும் போர் ஒத்திகையானது நடைபெறுகிறது. போர் ஒத்திகையின் போது எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை எப்படி செய்வது, சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்வது போன்ற செயல்முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களில் நாளை (29.05.2025) போர்க்கால ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்த ஒத்திகையின் போது கடுப்பாட்டு அறை, வான் பாதுகாப்பு அமைப்பு, செயல்பாடுகள் குறித்து சோதனை நடத்தப்படவுள்ளது. மேலும் மக்களை எச்சரிக்கும் வகையிலான சைரன் ஒலி,…
தேனி மாவட்டம், வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வறண்டு காணப்பட்ட மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பாகவே தென்மேற்குப் பருவமழை தேனி மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால், கடந்த சில மாதங்களாக வறண்டு மணல்மேடாகக் காட்சியளித்த வைகை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி: கோடை காலத்தில் தொடங்கியுள்ள இந்த நீர்வரத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைகை ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது: வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள நீர்வரத்து காரணமாக, வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வருசநாடு சுற்றுவட்டார கிராமங்களில் நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு அடியோடு நீங்கியுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என…
தமிழக முதலமைச்சர் நாளை (மே 29, 2025) சென்னை தலைமைச் செயலகத்தில் “எளிமை ஆளுமை” திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரசு செயல்பாடுகளைத் திறம்பட மேம்படுத்துவதோடு, குடிமக்களுக்குத் தேவையான சேவைகளை ஆன்லைன் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு முக்கிய சான்றிதழ்கள் மற்றும் உரிமங்களை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பெற முடியும். அவற்றில் சில: * சுகாதார சான்றிதழ் * பொது கட்டிட உரிமம் * பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி உரிமம் * மகளிர் இல்லங்களுக்கான உரிமம் * சொத்து மதிப்பு சான்றிதழ் * முதியோர் இல்லங்கள் உரிமம் * நன்னடத்தை சான்றிதழ் * அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ் ஆகியவை அடங்கும். பொதுமக்கள் அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை எளிதில் ஆன்லைன் மூலம் பெறும் வகையில் இத்திட்டம் சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது அரசு சேவைகளை எளிமையாக்கி, வெளிப்படைத்தன்மையை…
சென்னை மாநகராட்சி மக்களின் தாகம் தணிக்க ஒரு புரட்சிகரமான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள குடிநீர் ஏடிஎம்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார். முதற்கட்டமாக, கடற்கரை, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைப் பகுதிகள் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் இந்த குடிநீர் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஏடிஎம் இயந்திரங்கள், பாதுகாப்பு, ஆரோக்கியம், நீண்ட கால பயன்பாடு மற்றும் எளிதான நிறுவுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏடிஎம்மிலும் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என இரண்டு அளவுகளில் குடிநீர் பெற்றுக் கொள்ள முடியும். பொதுமக்கள் தங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்களில் சுத்தமான நீரைப் பிடித்துப் பருகும் வகையில்…
கோடை காலத்தில் உடலைக் குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பழங்கள் இன்றியமையாதவை. குறிப்பாக, இந்த சீசனில் கிடைக்கும் தர்பூசணி (வாட்டர்மெலான்), முலாம்பழம் (மஸ்க்மெலான்), நன்னாரி சர்பத், மற்றும் நுங்கு ஆகியவை கோடையின் வெப்பத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகின்றன. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலைக் காத்து, உணவுத் தேடலை நிறைவு செய்ய இந்த இயற்கையான இனிப்புப் பழங்கள் பக்கபலமாக அமையும். முலாம்பழம்: கோடைகாலத்தின் பொக்கிஷம் முலாம்பழங்களில் நீர்ச்சத்து அதிகம். வெளிப்புறத்தில் தடிமனான ஓடு இருந்தாலும், உள்ளே ஆரஞ்சு நிறக் கூழ் போன்ற சதைப்பற்று நிறைந்த பழம் கிடைக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. சாலையோரக் கடைகளிலும் கூட நியாயமான விலையில் கிடைப்பதால், சாமானியர்களும் வாங்கிச் சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. தரமான முலாம்பழம் வாங்குவதற்கான எளிய வழிகள் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை அவற்றின் வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்தே அவை கனிந்துள்ளனவா அல்லது அழுகத் தொடங்கியுள்ளனவா என்று கணித்துவிடலாம். ஆனால்,…
தமிழ்நாட்டில் சில கல்லூரிகள் அவசர அவசரமாக நிகர்நிலை அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளன. பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரத்தின் மூலம் பல்கலைக்கழகம் ஆகி முழுமையான தன்னாட்சி பெற விரும்புகின்றன. இதைக் கவனிக்கும் கல்வியாளர்கள், தமிழ்நாடு அரசு தனது தனியார் பல்கலைக்கழக சட்ட விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு என்பதை விரிவாகப் பார்ப்போம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்றால் என்ன? சிறந்த கல்வித் தரத்தை வெளிப்படுத்தும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவால் வரையறுக்கப்பட்ட அளவுகோல்களை நிறைவேற்றி, விண்ணப்பிக்கும்போது மத்திய உயர்க்கல்வி அமைச்சகம் அங்கீகாரம் வழங்குவதன் மூலம் பல்கலைக்கழகமாக தரம் உயர்கின்றன. இவற்றையே நம் நாட்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்று குறிப்பிடுகிறோம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் Vs அரசுப் பல்கலைக்கழகம் அரசுப் பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில அரசுகள் சட்டமன்றத்தில் உருவாக்கும் மசோதாக்களின் வாயிலாக உருவாக்கப்படுபவை. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய உயர்க்கல்வி அமைச்சகம் சட்டப்பிரிவு 3-ன் மூலம் அங்கீகாரம் வழங்குவதால் உருவாக்கப்படுபவை. …
விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி 55 கோடி ரூபாய் கொடுத்து பெற்றுள்ளது. அரசியல்ரீதியாக திமுகவும், தவெகவும் நேரெதிர் நிலையில் நிற்கின்றன. தனது அரசியல் எதிரி திமுக தான் என்று நடிகரும், தவெக தலைவருமான விஜய் வெளிப்படையாகவே அறிவித்து வருகிறார். அதேசமயம் திமுகவின் நிதியாதாரத்தில் ஆரம்பிக்கப்பட்ட சன் டிவி, பல நேரங்களில் திமுக எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு நேரெதிராகவே செயல்படுவது வழக்கம். தேர்தல் நேரங்களில் திமுக தலைவர்களின் செய்திகள் அதிகப்படியான அளவு சன் டிவியில் ஒளிபரப்பாவதை மறுக்க முடியாது. ஆனால் வணிகரீதியாக, திமுக எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக அவ்வப்போது தனித்து செயல்படுவது சன் டிவியின் பழக்கம். அந்த பழக்கம், இதோ நடிகர் விஜயின் ஜனநாயகன் வரை தொடர்கிறது. 2026 தேர்தலுக்கான ஆயுதமாக தனது ஜனநாயகன் படத்தை நினைக்கிறார் விஜய். ஆனால் அதே படத்தை 55 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது சன்…
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. அவசர செயற்குழு கூட்டம் என்பதால் சில நிர்வாகிகள் மட்டுமே நேரில் கலந்து கொண்ட நிலையில், சில நிர்வாகிகள் காணொலி காட்சி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக உடன் கூட்டணியின் போது மநீம கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் கொடுப்பதாக திமுக உறுதி அளித்திருந்தது. தற்போது நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுகவுக்கு நான்கு இடங்கள் உள்ளது. திமுக சார்பில் இந்த தேர்தலில் மநீம கட்சிக்கு சீட் கொடுத்தால் கட்சி சார்பாக நிற்கும் வேட்பாளர் தொடர்பாக நிர்வாக குழு கூடி முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வேட்பாளர் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான…
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழையால் நொய்யலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்னமநல்லூரில் நொய்யலாற்றில் பொங்கி வரும் தண்ணீரை மலர் தூவி வரவேற்றார். மேலும், பேரூர் படித்துறை, சித்திரை சாவடி தடுப்பணை, காளவாய் தடுப்பணை ஆகிய இடங்களிலும் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வின்போது அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.