Author: Editor TN Talks
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கள ஆய்வு பணியில் ஈடுபட்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபடுகிறார். இதற்காக 15 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமானநிலையம் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்து சாலை வழியாக தஞ்சாவூர் மாவட்டம் செல்கிறார். அங்கு கல்லணையில் விவசாய பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார். 15 ஆம் தேதி மாலை தஞ்சாவூரில் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைக்கிறார். அப்போது அங்கு மக்கள் மத்தியில் நடந்து சென்று ரோடு ஷோ நிகழ்சியில் கலந்துகொள்கிறார்.. அன்று இரவு தஞ்சாவூரில் சுற்றுலா மாளிகையில் தங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 16 ஆம் தேதி காலை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் இல்ல திருமண நிகழ்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். அதை…
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம்.. மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.. கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அதற்கு கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கை காரணமாக இருந்தால், அது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 108-வது பிரிவின்கீழ் குற்றமாக கருதப்படும். கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் காலதாமதம் செய்யாமல் ஒப்புதல் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்கள் என்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து, நாடு கடத்தி வருகிறது அந்நாட்டின் டிரம்ப் அரசு. இதை எதிர்த்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும் போராட்டம் வெடித்தது. உடனே அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மட்டுமின்றி, அதிகளவிலான ராணுவத்தைக் குவித்திருக்கிறது அரசு. அமெரிக்காவின் இந்தக் குடியுரிமைப் பிரச்னையின் பின்னணி என்ன? அமெரிக்காவில் வெளிநாட்டினர் அமெரிக்காவில் லத்தின் அமெரிக்கர்கள், ஆப்ரிக்க அமெரிக்கர்கள், பிரஞ்சுக்காரர்கள், பிரட்டனைச் சேர்ந்தவர்கள், ரஷ்யர்கள், இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அரேபியர்கள், கரீபியன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பல நாட்டினர் வசித்து வருகின்றனர். கடந்த 2024-ல் வெளியான அறிக்கையின்படி அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 15% வெளிநாட்டினர் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 2021-க்குப் பிறகு அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 45 லட்சம் என்றும். அதில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக 26 லட்சம் பேர் வாழ்கிறார்கள் என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியானது.…
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விவசாய சங்கம் உண்ணாவிரப் போராட்டத்தை அறிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணை தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.தென் தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு நீராதரமாக விளங்குவதும் முல்லைப் பெரியாறு அணை. முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தொடர்ந்து கேரளா பல்வேறு இடைஞ்சல்களை செய்து வருகிறது. உடனடியாக இதனை கைவிட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகின்ற 22 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தினை அறிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், முல்லைப் பெரியாறு விஷயத்தில் 50 ஆண்டுகளாக தமிழகம் மிகப் பெரிய பின்னடையை சந்தித்துள்ளது. தமிழக அரசு பல்வேறு சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறது. விவசாய…
எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம், உசிலம்பட்டி தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்காமல் திமுகவே போட்டியிட வேண்டும் என்று அந்த தொகுதியைச் சேர்ந்தவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளனர். 234 தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக நிர்வாகிகளின் கருத்துகளை அவர் கேட்டறிந்து வருகிறார். அந்தவகையில் இன்றைய தினம் நடைபெற்ற ஆலோசனையில் சிதம்பரம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் இந்தமுறை தங்கள் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கக் கூடாது என்றும் திமுகவே களமிறங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். கடந்த 2021 தேர்தலில் உசிலம்பட்டி தொகுதி திமுக கூட்டணியைச் சேர்ந்த பார்வர்டு பிளாக் கட்சிக்கும், சிதம்பரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இரைண்டு இடங்களிலும்…
கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பா.ஜ.க அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவர் அணி சார்பில் வரும் 18ஆம் தேதி மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி; கீழடி என்கிற பெயரே பா.ஜ.க அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். கடந்தகால அடிமை எடப்பாடி அரசும் பா.ஜ.க-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாட்டில் கழகத் தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார். அறிவியல்பூர்வமாக…
என் மூச்சுக்காற்று அடங்கும்வரை அன்புமணிக்கு தலைவர் பதவி கிடையாது என்று பாமக தலைவர் ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். நாள்தோறும் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து வரும் பாமக தலைவர் ராமதாஸ் இன்றும் அந்த சந்திப்பினை நடத்தினார். அவர் பேசும்போது, 2026 தேர்தலுக்கு பிறகு பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவரின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை அந்த பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன். குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறியதை காப்பாற்ற முடியவில்லை. பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அவர்களை கொண்டாட வேண்டும். தந்தை, தாயை மதிக்கணும் எனச் சொன்னாலே அன்புமணிக்கு கோவம் வருகிறது. தந்தை, தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அன்புமணி மைக்கை தூக்கி அடிக்கிறார். பாட்டிலை எடுத்து தாயை அடிக்கிறார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனக் கூறினால் அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார். மாநாட்டிற்குப் பிறகு அன்புமணியின்…
தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் ஜூன் 16ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தஞ்சையை சேர்ந்த சங்கர் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் ஜூன் 16ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா இங்கு நடைபெற்ற போது, அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு விழாக்களின் போது விளையாட்டு மைதானத்திற்கும், மரங்களுக்கும் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 16ஆம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக மைதானப் பகுதியில் சாலை அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவர்களை பாதிக்கப்படுவர். ஆகவே ஜூன் 16ஆம் தேதி நடைபெற உள்ள விழாவிற்கு தடை…
தேச துரோக குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27 ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி, ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வைகோவுக்கு எதிராக ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வைகோ தரப்பில் அவகாசம் கேட்டதை…
முதல்வர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை., இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். – மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே அச்சம்பத்து பகுதியில் மதுரை தேனி செல்லும் சாலையில் உள்ள மந்தை திடலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள மேற்கூரை அமைக்கும் விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள சந்தன மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்த பின்பு மேற்குறை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு. இந்தியாவில் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து நடந்ததற்கு அனைவரும் வேதனையில் உள்ளோம்., விமான விபத்து நடந்ததற்கு அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தை, இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பாஜக, அதிமுக கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொது செயலாளரிடம் கேளுங்கள்.…