Author: Editor TN Talks

முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7,735 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடிக்கு மேல் உயர்ந்து 121.60 அடியை எட்டியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 6 அடிக்கும் மேல் உயர்ந்திருப்பது தென் மாவட்ட விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு மற்றும் மழை அளவு தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளான இடுக்கி மேற்குத் தொடர்ச்சி மலைகள், குமுளி, தேக்கடி ஆகிய இடங்களில் கடந்த ஐந்து நாட்களாகத் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. நேற்று முல்லைப் பெரியாறு அணையில் 102 மில்லிமீட்டர் மழையும், தேக்கடியில் 106 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, அணையில் 73 மில்லிமீட்டர் மழையும், தேக்கடியில் 32 மில்லிமீட்டர் மழையும்…

Read More

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், எத்தகைய அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், சென்னை அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) இடுக்கி மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். பருவமழை காலம் முடியும் வரை இந்த வீரர்கள் இடுக்கியிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 33 பேர் கொண்ட சிறப்புப் படை: டீம் கமாண்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் ஜி.சீனத், சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சு சின்ஹா ஆகியோர் தலைமையிலான 33 பேர் கொண்ட இந்தக் குழுவில், வெள்ளம், நிலச்சரிவுகள், பூகம்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அவசர நெருக்கடிகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதற்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தயார் நிலையில் உபகரணங்கள்: வெள்ள மீட்புப் பணிகளுக்கான படகுகள், நிலச்சரிவு மற்றும் பாறை சரிவு பேரழிவுகளில் பயன்படுத்தப்படும் கட்டர் இயந்திரங்கள், ஸ்கூபா டைவிங் செட், மலை ஏறும் உபகரணங்கள் உள்ளிட்ட பேரிடர்களைச் சமாளிப்பதற்கான அனைத்து அத்தியாவசிய உபகரணங்களும் இந்தக் குழுவிடம் தயார் நிலையில் உள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்கு,…

Read More

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநில அளவிலான கபடிப் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. தேனி மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இப்போட்டியை, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்து, கபடி வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மூன்று நாள் போட்டி – பல மாவட்ட அணிகள் பங்கேற்பு: மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், தூத்துக்குடி, அரக்கோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கபடி அணிகள் பங்கேற்றுள்ளன. ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆரம்ப சுற்றில் பரபரப்பான ஆட்டங்கள்: மகளிர் பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில், சேலம் அணி 33-19 என்ற புள்ளி கணக்கில்…

Read More

சென்னை தண்டையார்பேட்டையில் ஜெயவாணி ஐஸ் யூனிட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஐஸ்கிரீம், குல்பி, குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜெயவாணி நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேகர். இவருக்கு தாரகைஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் இருந்தனர். மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரகலாத்(34) நரசிம்மன், தொழிலில் தந்தையைப் போல் சாதிக்க முடியவில்லை என்பதால் நிறைய அவமானங்கள் மற்றும் ஏமாற்றத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகலாஷ் நரசிம்மன், தாய் பாதுகாப்பிற்காக வைத்திருந்த உரிமம் பெற்ற ஸ்போர்ட் வகை துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெற்றோர் வீட்டில் இருக்கும் போதே இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்து வந்த காசிமேடு போலீசார், தடயவியல் நிபுணர்களை வைத்து விசாரணை மேர்கொண்டனர். தொடர்ந்து பிரகலாத் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி…

Read More

2021-ல் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் உள்ளபடியே ஏராளமான நல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் சமீபகாலமாக சட்டம் ஒழுங்கு விவகாரம், திமுக நிர்வாகிகள் மீதான புகார்கள் போன்றவை பூதாகரம் எடுத்துள்ளன. திடமான முடிவுகளை எடுக்க வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னைச் சுற்றி உள்ள எடுபிடிகள், ஆமாம்சாமிகள் போன்றவர்களால் சரியான திசையில் பயணிக்க முடியாமல் திணறுகிறாரோ என்று தோன்றுகிறது. கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. ஒருவரை வெல்லம் கொடுத்தும் கொல்லலாம், விஷம் கொடுத்தும் கொல்லலாம் என்று… அனுகூலசத்ருக்கள் என்று வடமொழியிலும் இதனைக் கூறுவார்கள். கிட்டத்தட்ட அப்படிப்பட்ட நபர்கள் பலர், முதலமைச்சரைச் சுற்றி அமர்ந்து கொண்டு உள்ளனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பார்க்கும் திசையெல்லாம் பாலாறும், தேனாறும் ஓடுகிறது என்று தவறான அறிக்கைகளை அவருக்கு கொடுக்கிறார்களோ, மாதம் மும்மாரி பொழிகிறது என்று வாய்க்கு வந்ததை சொல்லி அவரை நம்ப வைக்கிறார்களோ அல்லது அவரும் அவ்வாறு தான் நம்ப விழைகிறாரோ என்று எண்ணும்படியான செயல்களே…

Read More

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் தென்கரைப் பகுதியில் சிறிய அளவில் துணிக்கடை நடத்தி வருகிறார். கடைக்காக வாங்கிய துணிகளை பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டு மாடியில் உள்ள அறையில் மொத்தமாக சேமித்து வைத்துள்ளார். இன்று(26.05.2025) பிற்பகல் சுமார் 3 மணியளவில் துணிகள் வைத்திருந்த அறையில் திடீரென தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீ அறை முழுவதும் பரவியது. தகவலறிந்து வந்த பெரியகுளம் தீயணைப்புத் துறையினர், நீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதம் அடைந்ததாக உரிமையாளர் முத்து லட்சுமி தெரிவித்துள்ளார். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால்…

Read More

தமிழ்நாட்டில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும் கூட, வித்தியாச, வித்தியாசமான பாணியில் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். அந்த வகையில், கோவை, கணபதி அருகே உள்ள அத்திபாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் பம்ப் கம்பெனியில் யாசகம் கேட்பது போல் வந்த 7 வடமாநில பெண்கள் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பு உள்ள கம்பெனியில் இருந்த காப்பர் ஒயர் மற்றும் பித்தளை உலோகங்களை திருடி சென்று உள்ளனர். பொருட்கள் குறைவதை பார்த்த நிறுவனத்தினர், அங்கிருந்த சிசிடிவியை ஆராய்ந்த போது, வடமாநில பெண்களின் கைவரிசை சிக்கியது. அதில் ஒரு பெண்மணி நிறுவனத்தில் உள்ள பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த பெனாயில் பாட்டிலையும் திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், திருட்டில் ஈடுபட்ட வடமாநில பெண்களை தேடி வருகின்றனர். அத்தோடு சந்தேகத்திற்கு இடமான வகையில்…

Read More

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கோவையில் வசித்து வந்துள்ளார். இவர் ஒவ்வொரு வார இறுதியிலும், தனது குடும்பத்தை பார்க்க, கோவை செல்வது வழக்கம். இவரது செல்போனுக்கு ”போட்டிம்” என்ற ’இன்டர்நேஷனல் ஆப்’ மூலம் கடந்த மாதம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், ”உங்கள் குடும்பத்தை பார்க்க கோவைக்கு வரக்கூடாது என்றும், அப்படி வந்தால் கொலை செய்து விடுவேன்” எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ’சென்னைக்கு வந்து கொலை செய்து விடவும் தயங்கமாட்டேன்’ என்று அந்த நபர் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் அழைப்பு வந்த எண் குறித்து விசாரணை நடத்தினார். பிறகு கோவையில் உள்ள தனது மனைவி மற்றும் பிள்ளைகள் குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, மிரட்டல் விடுத்தது கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஸ்வீட்சன் என்ற இளைஞர் என்பது தெரிய வந்தது. இது…

Read More

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமையில் 2025-ம் ஆண்டுக்கான (வருவாய் தீர்வாயம்) சமபந்தி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று(26.05.2025) ஒருத்தட்டு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு நடைபெற்ற சமபந்தியில் அம்மையநாயக்கனூரில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே நக்கம்பட்டி சாலையோரத்தில் குடியிருந்து வரும் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் குடியிருந்து வரும் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டாச்சியர் விஜயலெட்சுமி அவர்களை அழைத்து பேசியதையடுத்து, கோட்டாட்சியர் சக்திவேலிடம் மனுவாக வழங்கினர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ”எங்களது தாத்தா காலத்திலிருந்து சுமார் 60-ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வீடுகட்டி குடியிருந்து வருகிறோம், கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். வருடம்தோறும் ஒவ்வொரு ஜமாபந்தயிலையும் மனு அளித்து வருகிறோம், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் சமபந்தி நடைபெறுவதை ஒட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக…

Read More

திருச்சி மாநகராட்சியுடன், குண்டூர் ஊராட்சியை இணைப்பதற்கு இறுதி முடிவு எடுக்கும் முன், கிராம மக்களின் எதிர்ப்பு மனுக்களை , முறையாக பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக ஆளுநரின் செயலாளர், நகராட்சி நிர்வாக துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. திருச்சி குண்டூரை சேர்ந்த மரிய மைக்கேல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டூர் கிராம ஊராட்சியை , திருச்சி மாநகராட்சியுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசின் இந்த முடிவை , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டு உள்ளது. மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் தற்போது சுமார் 1800 பயனாளிகள் பயன்பெற்று வருகிறோம். இது முற்றிலும் தடைபடும். எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.மேலும் கடந்த 15.08.2024 அன்று கிராம…

Read More