Author: Editor TN Talks

புதிய மணல் குவாரிகளை திறக்கக்கூடாது, ஏற்கனவே செயல்பட்டு வரும் குவாரிகளை மூட வேண்டும், மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் (SEIAA) தலைவர் சையத் முசாமில் அப்பாஸ் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் முக்கிய அம்சங்கள்: * புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வேண்டாம்: தமிழ்நாட்டில் புதிய ஆற்று மணல் குவாரிகளை திறப்பதற்கு SEIAA அனுமதி அளிக்கக்கூடாது என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். * பழைய குவாரிகளை மூட வேண்டும்: ஏற்கனவே செயல்பட்டு வரும் மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்து, அவற்றை மூட உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். * சுற்றுச்சூழல் ஆய்வு: மணல் குவாரிகள் செயல்பட்டு வந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்…

Read More

காளையார்கோவில் அருகேயுள்ள மாரந்தை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த திருவாசகம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்ட வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருவாசகம் தாக்கல் செய்த மனுவில், 2021 உள்ளாட்சித் தேர்தலில் மாரந்தை ஊராட்சி மன்றத் தலைவராக தான் வெற்றி பெற்றதாகவும், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வரதராஜன் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தோல்வி காரணமாக, வரதராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை மற்றும் தனது குடும்பத்தினரை பலமுறை தாக்கியதாகவும், இது குறித்து காளையார்கோவில் காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். கடந்த மே மாதம் மீண்டும் தாக்குதல் நடந்ததாகவும், அப்போதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் திருவாசகம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் கூறி, வழக்கை சிபிசிபிசிஐடிக்கு மாற்றுமாறு கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த…

Read More

அட்லீ – அல்லு அர்ஜுன் இணையும் 700 கோடி பட்ஜெட் டைம் டிராவல் படத்திற்கு ‘ஐகான்’ தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அட்லீ, ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களைக் கொடுத்தார். இதன் பின்னர் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து, ஷாருக்கானுடன் ‘ஜவான்’ படத்தை இயக்கினார். அந்தப் படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. அட்லியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு ‘ஜவான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அட்லீயின் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் நிலையில், தனது அடுத்த திரைப்படத்தை தெலுங்குத் திரையுலகின் ‘புஷ்பா’ அல்லு அர்ஜுனுடன் இணைந்து உருவாக்கவுள்ளதாக அறிவித்தார். இந்த பிரம்மாண்ட படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. அட்லீ – அல்லு அர்ஜுன்…

Read More

தரமற்ற உணவு விநியோகம் செய்ததால் வாடிக்கையாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட வழக்கில், சொமாட்டோ (Swiggy) உணவு விநியோக செயலிக்கும், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கும் ரூ. 30,000 இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகபிரபு நாராயணசாமி என்பவர், வேளச்சேரியில் உள்ள அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ்ஸில் இருந்து சொமாட்டோ மூலம் அசைவ உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை உட்கொண்ட பிறகு ஜெகபிரபுவுக்கு மூச்சுத்திணறல், தலைசுற்றல், நெஞ்சடைப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய அவர், உடனடியாக உணவுத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தார். ஜெகபிரபுவின் புகாரைத் தொடர்ந்து, அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில், உணவகம் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு, ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக ரூ. 2.50 லட்சம் வழங்கும்படி சொமாட்டோ மற்றும் அர்ஜூன்…

Read More

இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் காலியாகவுள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு: * அன்புமணி ராமதாஸ், எம். சண்முகம், என்.சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வைகோ, பி. வில்சன் ஆகிய ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அசாம்: * மிஷன் ரஞ்சன் தாஸ், பிரேந்திர பிரசாத் பைஷ்யா ஆகிய இரு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலியாகவுள்ள மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதே தேதியில் (ஜூன் 19) குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் நேற்று (மே 26)…

Read More

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே நல்லூர் பதி பழங்குடி கிராமத்தில் வசிக்கும் குஞ்சம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டில் ஒரு ஒற்றைக் கொம்பு யானை புகுந்து, வீட்டின் கூரையை இடித்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவத்தின் பின்னணி நேற்று முன்தினம், நல்லூர் பதி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த குஞ்சம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் ஒரு யானை நுழைந்துள்ளது. அப்போது, வீட்டின் கூரையை யானை பந்தாடியுள்ளது. இதனை கண்ட அப்பகுதிவாசி ஒருவர் தனது அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். யானையின் ஆக்ரோஷமான செயலைக் கண்டு மிரண்டு போன அப்பகுதி மக்கள், “ஐயோ… உள்ள போ… உள்ள போ…” எனக் கூச்சலிட்டுள்ளனர். பெரும் சேதம் தவிர்ப்பு யானை வீட்டின் கூரையை இடித்தபோது, அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், வீட்டின் கூரை கடுமையாக சேதமடைந்தது. யானையின் இந்த…

Read More

“நான் முதலமைச்சர் ஆவதற்கு அரசியலுக்கு வரவில்லை” என்று தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கும் கமல்ஹாசன், பின்புலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். திமுகவுடனான இந்த ஒப்பந்தம் நிறைவேற அரசியலில் ஆக்டிவ் ஆகிறார் என்று பேச்சு எடுபடும் நிலையில், அவருக்கு புதிய அசைன்மென்ட் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. களத்தில் கமல்ஹாசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற தமது கட்சியைத் தொடங்கி, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார். தனித்துப் போட்டியிட்டுக் கனிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றதால் மக்கள் நீதி மய்யம் 2021 சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை எதிர்த்துப் போட்டியிட்ட கமல்ஹாசனும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால் பல விமர்சனங்களுக்கு உள்ளானார் கமல்ஹாசன். கமல் பகுதிநேர…

Read More

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்க கோரிய விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அதுவரை கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மாநகராட்சியும் அனைத்து மாவட்ட அதிகாரிகளும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அந்த உத்தரவில் மே 30ஆம் தேதிக்குள் கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்றும் தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம் என்றும் தவறினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த…

Read More

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பல மாதங்களுக்குப் பிறகு அணையின் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. அணை நிலவரம்: முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாகத் தொடரும் மழையின் காரணமாக, இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையில் அதிகபட்சமாக 56 மில்லி மீட்டர் மழையும், தேக்கடியில் 36 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதன் விளைவாக, அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 585 கன அடியிலிருந்து 1,648 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடிக்கும் மேல் உயர்ந்து, 114.90 அடியிலிருந்து 115.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து தமிழக குடிநீருக்காக விநாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு தற்போது 1,844 மில்லியன்…

Read More

கனமழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணை நிலவரம்: நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் பெய்து வரும் தொடர் தென்மேற்கு பருவமழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. நூறு அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 78 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து, இன்று (மே 25) காலை 86 அடியை எட்டியது. தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து, இன்று நள்ளிரவு அணை அதன் முழு கொள்ளளவான 100 அடியை நெருங்கியது. உபரி நீர் வெளியேற்றம் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை:…

Read More