Author: Editor TN Talks
தேனி அருகே உள்ள தனியார் பருப்பு ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்த சுரேஷ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுரேஷின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், அன்னஞ்சி விலக்கு பகுதியில் உள்ள தனியார் பருப்பு ஆலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். நேற்று மாலை, மில் வளாகத்தின் மேல் தளத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உடல் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உறவினர்கள் சந்தேகம் மற்றும் போராட்டம் சுரேஷின் மனைவி நதியா மற்றும் உறவினர்கள், சுரேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டினர்.…
நமது தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் தனித்துவமான உணவு வகைகள் உள்ளன. செட்டிநாடு உணவுகளுக்கென்று ஒரு சிறப்பான இடமுண்டு. அவற்றில் செட்டிநாடு கார சட்னி மிகவும் பிரபலம். அதை எப்படி சுலபமாக செய்யலாம் என்பதைப் பார்ப்போம். தேவையான பொருட்கள்: தக்காளி – 2 வரமிளகாய் – 10 பெரிய வெங்காயம் – 1 (சிறியது) புளி – சிறிதளவு (நெல்லிக்காய் அளவு) பூண்டு – 12 பல் உப்பு – தேவையான அளவு தாளிக்க: எண்ணெய், கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை செய்முறை: வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி/சுத்தம் செய்யவும். மிக்ஸியில் வரமிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி, புளி, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்க்கலாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அரைத்த சட்னியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் செட்டிநாடு கார சட்னி…
18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று(25.05.2025) நடைபெற்ற போட்டியில் குஜராத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 230 ரன்களை குவித்தது. 231 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, 4-ல் மட்டுமே வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இடம்பெற்று தொடரை நிறைவு செய்தது. இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே தோனி இந்த தொடரோடு ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து இன்றைய ஆட்டத்திற்கு பிறகு பேசிய அவர், ”இந்த சீசன் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இன்று தான் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். ஓய்வு குறித்து முடிவு எடுக்க எந்த அவசரமும் இல்லை”.…
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு ட்ரோன் மூலம் வரும் ஆபத்துகளை தடுத்து அழிப்பதற்கான பாதுகாப்பு கவசம் நிறுவப்படவுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதில் தாக்குதல் கொடுத்தனர். அதனை எதிர்த்து, ட்ரோன் உதவியுடன் இந்திய நிலைகள் மீது பொதுமக்கள் மீதும் வழிபாட்டு இடங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. சீக்கியர்களின் தலைமை கோயிலாக கருதப்படும் அமிர்தசரஸ் பொற்கோயில் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை, இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. தொடர்ந்து 4 நாட்கள் இரு நாடுகளும் எதிரெதிர் தாக்குதல்களை நடத்திய நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்தது. அமிர்தரஸ் தாக்குதல் முயற்சியை போல், தாக்குதல் முயற்சிகளை…
அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 18-வது ஐபிஎல் தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயூஷ் மாத்ரே மற்றும் தேவோன் கான்வே அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த உர்வில் பட்டேல் 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் பிராவிஸ் 23 பந்துகளில் அதிரடியாக 57 ரன்கள் குவித்தார். ஜடேஜா 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 5…
திண்டுக்கல்லில் சினிமா பாணியில் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் தொடர்ந்து ஹீரோ ஸ்பிளெண்டர் வகை இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக வடக்கு காவல்நிலையத்தில் புகார்கள் வந்துள்ளது. தொடர் புகார்களை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் இருசக்கர வாகனங்கள் திருடு போன இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது வத்தலகுண்டு, தெற்கு தெரு பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (வயது 35) என்பது தெரியவந்தது. பின் திண்டுக்கல் சைபர் கிரைம் காவலர்கள் உதவியுடன் தனிப்படையினர் சூரிய பிரகாஷை கைது செய்தனர். மேலும் அவர் திருடிய 4 ஹீரோ ஸ்பிளெண்டர் வகை இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. பின் சூரிய பிரகாஷை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதன் பின் பிரதமர் மோடியை தனியே சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதியை உடனே விடுவிக்கமாறு வலியுறுத்தியதாகவும், அதனை மத்திய அரசு தரும் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள த.வெ.க தலைவர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், மாநிலத்தை ஆளுகின்ற ஊழல் கபடதாரி தி.மு.க. அரசியல் எதிரி என்றும், மத்தியத்தை ஆளுகின்ற பிளவுவாத பா.ஜ.க. கொள்கை எதிரி ன்றும் தீர்க்கமாக அறிவித்திருந்தோம். ஆட்சியில் இருக்கும் இவ்விரு கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் வருகிறோம். அ.தி.மு.க. பா.ஜ.க. இடையே பழைய கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போதே தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உள்ள மறைமுகக் கூட்டணி பற்றியும் நாம் தெரிவித்திருந்தோம். அதே போல், ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது. உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குடும்ப விழாவில் கலந்து கொள்வதற்காக இணை அமைச்சர் எல்.முருகன் கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இன்றைக்கு தமிழ்நாட்டில், ஒரு பினாமிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக குற்றம்சாட்டினார்”. ”தமிழ்நாட்டினுடைய ஆட்சியை நடத்துவது முதலமைச்சரா அல்லது இந்த தம்பிகளா ? என்பது பொதுமக்கள் இடத்தில் ஒரு பெரிய கேள்விக்குறி? இருந்து கொண்டு இருக்கிறது. முதலில் இந்த தம்பிகள் யார்? இவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தது யார்? அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் அளவுக்கு ஒரு அதிகாரம் மிக்கவர்களாக அவர்கள் எந்த தைரியத்தில் வலம் வருகிறார்கள்? அதிகாரிகளுக்கு கட்டளை இடும் அளவிற்கு ஒரு பவர் சென்டராக இருந்து ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்”. ”தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கிறதா ? என்பதை மறந்து விட, இன்றைக்கு இந்த தம்பிகள் தமிழகத்தை சுரண்டி கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உடைய…
தென்மேற்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கும் மேலாக இரு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். இதற்கிடையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், கோவை வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் ஏற தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மறுஅறிவிப்பு வரும் வரை பக்தர்கள் மலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியிருந்தது. மேலும், பரளிக்காடு, பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தலங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 வது மலையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த கௌசல்யா என்பவரும், 5-வது மலையில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலையேறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. இருவரின் உடல்களையும் டொலி தூக்கும்…
நான்கு நாடுகளுக்கான மகளிர் ஹாக்கி தொடரில் இந்திய அணி, சிலி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் விதமாக இந்திய மகளிர் அணி இந்த நான்கு நாடுகள் ஹாக்கி தொடரில் விளையாடி வருகிறது. அர்ஜெண்டினா, உருகுவே, சிலி மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடர் இன்று (மே 25) தொடங்கி ஜூன் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. அர்ஜெண்டினாவின் ரொசாரியோ நகரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் சிலி அணிகள் மோதின. போட்டியின் 20-வது நிமிடத்தில் சிலியின் ஜாவேரியா சாயின்ஸ் கோல் அடித்து அந்த அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். இருப்பினும், இந்திய வீராங்கனை சுக்வீர் கவுர் 39-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி…