Author: Editor TN Talks
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி மேட்டுப்பாளையம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் காணொளி காட்சி மூலம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”கோவையில் மாவட்ட அளவிலும் மாநகராட்சி அலுவலர்களும் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து வைத்திருக்கிறார்கள் என்றார். கடுமையான மழை இல்லை என்றாலும் சில இடங்களில் கூடுதலான மழை இருக்கிறது என தெரிவித்த அவர், ஐந்து இடத்தில் சிறு சிறு வீடுகள் பாதிப்படைந்துள்ளது, ஆனால் மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை, அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளார்கள் என்றார். மேலும் அச்சம்பவத்தில் இரண்டு பேர் மட்டும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார். 16 ஜேசிபி இயந்திரம் உட்பட அவசர காலத்திற்கு தேவைப்படும் அனைத்து உபகரணங்களும் உள்ளது என்றும், மேட்டுப்பாளையம், வால்பாறை போன்ற 3 தேவையான இடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர்…
நாடு மட்டுமில்லாது உலகையே ஒரு மிரட்டு மிரட்டிய வைரஸ் என்றால் அது கொரோனா. கடந்த 2020 முதல் தொடங்கிய கொரோனா 3 வருடங்களாக உலகம் முழுவதும் லட்சக் கணக்கான உயிர்களை பலிவாங்கியது. அதற்கான தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்பட்டு, மீண்டும் இயல்புநிலை திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. ஆசியாவில் புதிய கொரோனா அலை உருவாக தொடங்கி இருப்பதாகவும், இந்தியாவில் மட்டும் இதுவரை 257 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒமைக்ரான் பிஏ.2.86திரிபான ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்கள்தொகை நெருக்கம் அதிகமுள்ள ஹாங்காங், சிங்கப்பூர், சீனா தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முக்கிய பகுதிகளில் சுகாதாரத்துறை செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கர்நாடகாவில் மட்டும் இதுவரை மொத்தம் 35 பேருக்கு…
தமிழ்நாடு காவல்துறையின் தற்போதைய இயக்குனர் சங்கர் ஜிவாலின் பணிக்காலம் ஆகஸ்ட் மாதவாக்கில் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த டிஜிபி யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், ராஜிவ் குமார், அபய் குமார் ஆகிய 4 பேரும் வரிசையில் உள்ளனர். இவர்கள் 4 பேரும் டிஜிபி தரத்தில் உள்ளனர். இதற்கிடையில், ஏடிஜிபி தரத்தில் உள்ள ஒரு அதிகாரியை பொறுப்பு டிஜிபியாக நியமிக்க சில நகர்வுகள் நடத்தப்படுவதாக செய்திகள் கசிந்தன. இத்தகைய தவறான முன்னுதாரணம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே எதிர்ப்பு மற்றும் தேவையற்ற பிரச்சனைகளைக் கிளப்பும் என்பதால் அந்த ஏடிஜிபி – டிஜிபியாக தரம் உயரும் காலம் வரை தற்போதுள்ள திரு.சங்கர் ஜிவாலுக்கே பணி நீட்டிப்பு அளித்து அமரவைக்கவும் ஒரு காய் நகர்த்தல் நடைபெறுவதாகத் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றன. இது, தகுதி படைத்த டிஜிபி தரத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு…
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் என்பவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விடுமுறை என்பதால், வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தபட்டார். வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்த நிலையில் இன்று(25.05.2025) இரு தரப்பு…
நீலகிரி மாவட்டம் ஊட்டி எமரால்டு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(48). இவர் இன்று(25.05.2025) காலை அவிநாசி செல்வதற்காக காரில் ஒரு பெண் உட்பட மூவருடன் மேட்டுப்பாளையம் வழியாக சென்று கொண்டிருந்தார். கார் சரியாக அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஈஸ்வரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறிய கார் அதிவேகமாக சென்று சாலையோரத்தில் இருந்த சிறு பாலத்தின் தடுப்பு சுவற்றில் மோதி சுமார் 10 அடிக்கும் மேல் பறந்தது. மேலும்,சாலையோரம் இருந்த சக்தி தியேட்டரின் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சாலையில் நடந்து சென்ற முதியவரும் அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் உயிர் தப்பினார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக காரில் இருந்த மூவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த…
பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்ல விழாவில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டு காலமாக பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பல்வேறு கருத்துக்களை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லி கடந்த 3 ஆண்டு காலமாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்” என குற்றம்சாட்டினார். ”3 ஆண்டு காலம் புறக்கணித்த பிறகு, நேற்று(24.05.2025) இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கருத்தை பதிவு…
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84) மே 24, சனிக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை காஜி திரு.சலாவுதீன் முகமது அயூப் சாகிப் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகக் கூறினார். அவர் தனது இரங்கல் செய்தியில், “கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூக சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலந்தொட்டு என் மீது பேரன்பு செலுத்தியவர் அவர். மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இஃப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம். அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய…
சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(45). இவர் கடந்த 13 ஆண்டுகளாக மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் மனைவி வாசுகி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று(25.05.025) காலை மதுரை மாநகர் கோமதிபுரம் மல்லிகை மேற்குதெருவில் மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் ஏற்பட்ட பழுது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் அதனை பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருநதுள்ளார். அப்போது திடிரென டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதில் தலைப்பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மதுரையில் கடந்த 3 நாட்களில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியின் போது உயிரிழந்து வரும் நிலையில், தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் மின்வாரிய ஊழியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்…
திண்டுக்கலில் கச்சேரி தெரு மேற்கு தாலுகா அலுவலகம் அருகே திண்டுக்கல் மாவட்ட சிறை உள்ளது. இங்கு மதுரை, சுப்ரமணியபுரம் காவல் நிலைய போலீசார் குற்ற வழக்கில் ஈடுபட்ட நபரை கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தபோது, நேற்று(25.05.2025) சனிக்கிழமை இரவு மாவட்ட சிறை சாலை வாசலில், போலீசார் கவனக்குறைவாக இருப்பதை அறிந்து கொண்ட குற்றவாளி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடியுள்ளார். அங்கிருந்து சென்று மாவட்ட சிறை பின்பு உள்ள சின்ன ஐயங்குளம் பகுதியில் இருட்டில் ஒளிந்து கொண்டான். உடனடியாக மதுரை சேர்ந்த போலீசார் அய்யன்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் கைதியை விரட்டி சென்று பிடித்து கொடுத்தனர். பின்னர் அவரை திண்டுக்கல் மாவட்ட சிறையில் கைதியை அடைத்தனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊர் திருப்பதி அருகே உள்ள நாராவாரி பள்ளி கிராமம். நாராவாரி பள்ளி சந்திரகிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமமாகும். ஆனால் சந்திரபாபு நாயுடு கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் தொகுதியில் இருந்து ஆந்திர சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று முதலமைச்சராகவும் மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் குப்பம் தொகுதியில் ஒரு சொந்த வீடு கூட இல்லாத சந்திரபாபு நாயுடு இந்த தொகுதிக்கு சொந்தக்காரர் கிடையாது என்று எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது. எனவே அங்கு சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்று முடிவு செய்த சந்திரபாபு நாயுடு கடந்த 5 ஆண்டுகளாக அதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் அவரால் அங்கு வீடு கட்ட…