Author: Editor TN Talks
குட்டியுடன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண் யானை, 2 கும்கிகள் உதவியுடன் 5 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு 3 நாட்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு யானை உயிரிழந்தது என தகவல் வெளியாகியுள்ளது. கோடையின் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு குட்டியுடன் வெளியேறிய தாய் யானை ஒன்று திடீரென மயங்கி விழுந்து உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து தாய் யானைக்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானை துரியன் சுயம்பு என்ற 2 யானை கொண்டு வரப்பட்டு இரண்டு யானைகள் உதவியுடன் வனத் துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கும்கி யானைகள் அங்கு இருப்பதை தொடர்ந்து பிரிந்து சென்ற குட்டி யானையை மீண்டும் அப்பகுதிக்கு மீண்டும் வரவில்லை என்றும், அதனை வனத்துறை குழுவினர் தேடி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் வனத் துறையினர் தகவல் தெரிவித்து…
வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ; தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவருடைய எக்ஸ் வலைதளத்தில், “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க.ஸ்டாலின் , தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் @mkstalin, தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை… pic.twitter.com/rD1qjOGch9 — Edappadi…
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரமாக நிறுத்தப்பட்ட டாராஸ் லாரியை மர்மநபர் ஒருவர் கடத்தி சென்றார். அப்போது தடுக்க முயன்ற போக்குவரத்து காவலர் முருகன் கடத்தப்பட்ட லாரியில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு லாரியில் தொங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஒரு வழியாக மறைமலைநகர் சிக்னலில் சாலையோர பேரிகாட்டில் மோதி லாரி நிறுத்தப்பட்டது. லாரியின் உள்ளே இருந்த ஓட்டுநரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நிழலை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் என்பதும், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனால் சுபாஷை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டு இருந்த நிலையில், பொதுமக்கள் தாக்கியதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த சுபாஷிற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச் செல்லாமல்…
நெட் பிளிக்ஸ்-ல் EL Chappo என்கிற வெப் சீரிஸ் இருக்கிறது இரண்டு சீசன் கொண்ட இந்தத் தொடரில் நார்கோஸ்-ல் வருவது போல ட்ரக் மாஃபியா தான்.. ஒரு சிறு புள்ளியில் தொடங்கும் ஒருவனின் குற்றச்செயல், ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஆகி அது வீழ்வது தான் இந்த மொத்தத் தொடர்களுமே, அது போக Pablo escobar என்ற தொடரும் இருக்கிறது. அதுவும் இந்த தொடரின் இன்னொரு முகம் என்று எண்ணுண்ணுகிறேன்.. இந்தப் போதை மாஃபியாக்கள் சினிமா அல்லது போதை மாபியாக்கள் எங்கிருந்து தொடங்குகின்றன என்று யோசித்தால் காட்பாதரில். டான் கார்லினியோவின் வீழ்ச்சி முன் அவரிடம் ஒரு ஆஃப்பர் வரும், இனி நாம் ஆள் கடத்தல் ஆயுத பேரம், போன்ற விஷயங்களை விட்டுவிட்டு போதை மருந்து கடத்துவோம். காரணம் அதில் வருமானமும், வளர்ச்சியும் அதீதம் என்பதாக இருக்கும். அதை கார்லினியோ திட்டவட்டமாக மறுத்துவிடுவார், அது நம் வீட்டுக் குழந்தைகளையும் எதிர்காலத் தலைமுறையும் பாதிக்கும் என்பதால்…
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோடநாடு எஸ்டேட்டில் மணி மண்டபம் கட்ட திமுக அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். 2026-க்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அப்போது மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரருமான சசிகலா வருகை புரிந்துள்ளார். அங்கு அவர் மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். கோடநாட்டுக்கு வருகை தந்த அவருக்கு எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு தந்தனர். ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா கோடநாட்டிற்கு வருவது இது இரண்டாவது முறையாகும். கோடநாட்டிற்கு வந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோடநாட்டில் ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம் கட்ட திமுக அரசாங்கம் அனுமதி மறுத்து விட்டதாக குற்றஞ்சாட்டினார். எங்கள் சொந்த நிலத்தில் மணிமண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்றும்…
பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கில், அமிர்தசரஸில் உள்ள புனித பொற்கோயிலின் வளாகத்தில் வான்பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கு, கோயிலின் தலைமை கிராந்தி விசேஷ அனுமதி வழங்கியதாக இந்திய ராணுவத்தின் ஒரு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலாக, பாகிஸ்தான் பலமுறை பொற்கோயிலையும் அதன் சுற்றியுள்ள பகுதிகளையும் குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாகவும் அவர் கூறினார். வான்பாதுகாப்பு அமைப்புக்கான அனுமதி – ராணுவ அதிகாரிகள் பாராட்டு இந்திய ராணுவத்தின் வான்பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் சுமர் இவான் டி குன்ஹா தெரிவித்ததாவது: “அந்த புனித இடத்தில் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவ, கோயிலின் தலைமை கிராந்தி அனுமதி அளித்தது மிக முக்கியமான நடவடிக்கையாகும். கடந்த பல ஆண்டுகளில் முதல் முறையாக, கோயிலின் வெளிச்சங்களை அணைத்து, ட்ரோன்களை தெளிவாக கண்காணிக்க முடிந்தது. அதற்கு முன், கோயில் நிர்வாகத்திடம் எங்கள்…
நாட்டின் அணு சக்தி விஞ்ஞானிகளில் முன்னோடியான எம்.ஆர் ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக தமது 95-வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாட்டின் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அணு மின் நிலையங்களை உருவாக்கியதில் சிறப்பான பணிகளை மேற்கொண்டவர் எம்.ஆர் ஸ்ரீனிவாசன் ஆவார். இந்தியாவும் அணுசக்தியும் நம் நாட்டில் நிலக்கரி, எரிவாயு, காற்றாலை, நீர் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மின்சார உற்பத்தியில் அணுசக்தி பெரும் ஆதாரமாக உள்ளது. இந்தியாவில் சுமார் 6,780 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்ட 22 அணு உலைகள், 8 அணு மின் நிலையங்களில் உள்ளன. அணு சக்தி விஞ்ஞானத்தில் முன்னோடியான ஹோமி ஜே பாபாவின் தலைமையில் தொடங்கப்பட்ட அணு சக்தி ஆணையம், இதன் அதிகாரப்பூர்வ பொறுப்பாக செயல்படுகிறது. ஹிரோஷிமா அணு குண்டு வெடிப்புக்குப் பிறகு உலகின் மொத்தப் பார்வையும் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இருக்கிறது. நாட்டின் மொத்த மின்…
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவருடைய சமூக வலைத்தள பதிவில், சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு! ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது திரு. @mkstalin உணர்வாரா? அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே- திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என இந்த டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய்! பொய்! பொய்! ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், ED ரெய்டுக்கு பயந்து “தம்பி”யை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக…
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும் போது, அதிலிருந்து வீட்டு இணைப்புகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வீடுகளைத் தவிர கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற மின் இணைப்புகள் அனைத்துக்கும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதை அனுமதிக்க முடியாது. தமிழகத்தின் வரலாற்றில் 3 ஆண்டுகளில் 4 முறை மொத்தம் சுமார் ரூ.45 ஆயிரம் கோடிக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய மனிதநேயமற்ற அரசு திராவிட மாடல் அரசு தான். வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது என்று அரசு அறிவித்திருப்பது மக்களின் மீதுள்ள கருணையால் அல்ல, மாறாக, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறதே என்ற அச்சத்தால் தான். 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, 2023ஆம் ஆண்டில் வீடுகளுக்கான மின்கட்டண உயர்வை அரசே ஏற்கும் என்று அறிவித்த ஆட்சியாளர்கள், கடந்த ஆண்டு மக்களவைத்…
தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சார வாரியத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியானது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறும் மின் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 2024 ஜூலை மாதம் 4.8 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடன் உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு நிகழாண்டு 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு வருவதாக செய்திகள் உலா வந்தன. மின் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும் என்ற சூழல் இருப்பதால், ஜூலை முதல் தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வரும் என சமூக வலைதளத்தில் செய்திகள் பரவின. இதற்கு விளக்கமளிக்கும் விதமாக மின்வாரியத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை…