Author: Editor TN Talks
வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் டெல்லியில் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு செய்யப்படவுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயகி தலைமையில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஐ, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம் எம் அப்துல்லா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.இக்கூட்டத்தில் டெல்லியில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து…
உறவுகளில் தனித்துவமானது “தாய்மாமன் “உறவு என்பார்கள் தமிழர்கள். தமிழில் தாய்மாமன் சார்ந்த சினிமாக்கள் கொட்டிக்கிடக்கிறது. அதிலிருந்து இந்த மாமன் எப்படி வேறுபடுகிறது. இன்பாவின் (சூரி) அக்கா கிரிஜாவுக்கு (சுவாசிகா) திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு ஒட்டுமொத்த அன்பையும் கொடுத்து, இன்பாவே வளர்க்கிறார். இந்தச் சூழலில் இன்பாவுக்கு ரேகாவுடன் (ஐஸ்வர்யா லட்சுமி) திருமணம் ஆகிறது. ஆனால், எப்போதும் மாமாவுடனே ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையால் இன்பாவுக்கும் ரேகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் இன்பாவின் மனைவிக்கும் கிரிஜாவுக்கும் உறவு முறிகிறது. இறுதியில் விரிசல் சரியாகி உறவுகள் சேர்கிறதா? இல்லையா? என்பதுதான் கதை. இதன் கதையை நடிகர் சூரி எழுதி இருக்கிறார். தாய்மாமனுக்கும் மருமகனுக்குமான ஆத்மார்த்தமான அன்பை மையப்படுத்தியும் அதற்குள் குடும்ப சென்டிமென்டைத் தூக்கலாகவும் கலந்து எழுதிய கதையை இயல்பாகப் படமாக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். ராஜ்கிரண் – விஜி தொடர்பான காட்சிகளில், குட்டிபத்மினியும் பண்ணையாரும் படத்தில் வருவது…
இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை பயன்படுத்திய அமெரிக்க பெண் மருத்துவரான ரேச்சல் அணி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரேச்சல் அணி புதுச்சேரியில் சந்திக்க வந்த அரவிந்தர் கண் மருத்துவமனை மருத்துவர் வெங்கடேசன் வரவழைக்கப்பட்டு அவரிடம் அமெரிக்க பெண் மருத்துவரை பாதுகாப்பாக போலீசார் ஒப்படைத்துள்ளனர். மேலும் அமெரிக்க பெண் மருத்துவர் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்படும் நிலையில் அவர் கொண்டு வந்துள்ள தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன்,இருக்கும் இடத்தை சுற்றியுள்ள கட்டிடங்கள் இருப்பிடங்கள் அனைத்து தகவலும் தெளிவாக தெரிவிக்கும் நவீன தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளதாகவும் இது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் . மேலும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இந்த சேட்டிலைட் போன் புழக்கத்தில் இருந்தாலும் இது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது தற்பொழுது இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதட்டமான சூழல் காரணமாக…
ஆப்ரேஷன் சிந்தூரை வழி நடத்திச் சென்றவர்களில் முக்கியமான ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக அமைச்சரை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கும் நிலையில், போர் நடவடிக்கையிலும் மத அரசியலா? பாஜக எப்போது திருந்தும் என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் நடத்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூரை செயல்படுத்தியது. தாக்கிய பயங்கரவாதிகள் இந்தியர்களின் மதங்களை விசாரித்து விட்டுச் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது என்னதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலாக நடந்திருந்தாலும், சிலர் மத வெறுப்பின் கண்ணோட்டத்தோடும் இத்தாக்குதலைப் பார்க்கின்றனர். இந்நிலையில், ஆப்ரேஷன் சிந்தூரை வழி நடத்தியது மட்டுமன்றி, நாட்டுக்கு விளக்கம் அளித்த முக்கிய ராணுவ அதிகாரியான ராணுவ கர்னல் சோபியா குரேஷி மீதும் அந்த மத வெறுப்பு பாய்ந்திருக்கிறது. பாஜக…
300 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மைசூர் மகாராஜா திருப்பதி ஏழுமலையானுக்கு இரண்டு பெரிய வெள்ளி தீபங்களை காணிக்கையாக சமர்ப்பித்து இருந்தார். அகண்ட தீபம் என்று கூறப்படும் அத்தகைய தீபங்களை ஏழுமலையான் கருவறையில் நிலை நிறுத்தி ஏற்றி வைப்பது வழக்கம். இந்த நிலையில் தற்போதைய மைசூர் ராஜமாதா ஸ்ரீ பிரமோதா தேவி திருப்பதி ஏழுமலையானுக்கு இன்று தலா 50 கிலோ எடையுள்ள வெள்ளியால் தயார் செய்யப்பட்ட இரண்டு அகண்ட தீபங்களை இன்று காணிக்கையாக சமர்ப்பித்தார். ♦ தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்காய சௌத்ரி ஆகியோர் ராஜமாதாவிடம் இருந்து ஏழுமலையான் கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் வெள்ளி அகண்ட தீபங்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்ட ராஜ மாதா பிரமோதா தேவிக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
தமிழகத்தில் 34 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 32 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆசியாவில் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கி… சீனா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் 58 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 42 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 32 பேர் குணமடைந்துள்ளனர். இது தவிர புதுச்சேரியில் 13 பேரும், கேரளாவில் 15 பேருக்கு, கர்நாடகாவில் 4 பேரும், மகாராஷ்டிராவில் 7 பேரும், டெல்லியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் தொடர்ந்து பரிசோதனை செய்து வருவதாகவும், கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என…
நடிகர் சூர்யா ’கங்குவா’ பட தோல்விக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’ரெட்ரோ’ படத்தில் சூர்யா நடித்திருந்தார். 90ஸ் காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வினை அடிப்படையாக கொண்டு ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவானது. கடந்த மே மாதம் 1-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சூர்யாவின் ’2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ப்ரொடக்ஷன்ஸ்’ இணைந்து தயாரித்து வெளியான ’ரெட்ரோ’ உலகம் முழுவதும் ரு.235 கோடி வசூலை பெற்றது. ஜூன் 5 ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ’ரெட்ரோ’ வெளியாகும் என கூறப்படுகிறது. இருப்பினும் உறுதியான தகவல் இல்லை. அடுத்தடுத்து பெரிய ஹிட் படங்களை சூர்யா கொடுக்க முடியாததால் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தில் உள்ளனர். அவரது 46-வது படத்தை ஆ.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவரது 46-வது படத்தை ‘லக்கி பாஸ்கர்’பட இயக்குநர் ’வெங்கி அட்லூரி’ இயக்கவுள்ளதாக…
கோடை வறட்சியின் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறிய தாய் யானை ஒன்று, திடீரென மயங்கி விழுந்து உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தாய் யானைக்கு வனத் துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் நேற்று ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தெரிவித்தனர். கோவை வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகளை கண்காணித்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தாய் யானை உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்தது. மயங்கி விழுந்த தாய் யானையின் உடலில் சிறிது நேரத்திற்குப் பின் அசைவு தெரியவே, அருகில் இருந்த குட்டி யானை பதற்றம் அடைந்தது. தனது தாயை எப்படியாவது ? எழுப்பி விட வேண்டும் என்ற தவிப்புடன், தனது…
தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டமும் ஒன்று. பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்த திட்டம். ஒவ்வொரு ஆண்டும் இதற்காக சுமார் ரூ.1000கோடி வரை அரசு செலவிட்டு வருகிறது. முதன்முதலில் 2019-ம் ஆண்டு டெல்லியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து 2021-ம் ஆண்டில் பஞ்சாப்பும், தமிழக அரசும் மகளிருக்கு பேருந்துக்கு இலவச பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதையடுத்து கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 8-வது ஆந்திராவும் இணைந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒவ்வொரு வாக்குறுதிகளையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், ஆந்திரப் பிரதேசத்தில் பெண்கள் ஆகஸ்ட்…
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் வகை புற்றுநோய் இருப்பதாகவும், இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 82 வயதான ஜோ பைடன் கடந்த 2021-2025-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் 46-வது அதிபராக இருந்தவர். கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக இருந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் ஜோ பைடனுக்கு புரோஸ்டெட் வகை கேன்சர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவந்திருப்பதாக பைடனின் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த கேன்சர் மிகவும் தீவிரமாக இருக்கும் அதே வேளையில், இது ஹார்மோன் சென்சிடிவ்வாக இருப்பது தெரிகிறது. இதனால் கேன்சரை சற்று எளிதாகச்…