Author: Editor TN Talks
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் முதல் மின்கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை முதல் மின்கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு பெரிய அளவில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், 2023-ல் ஜூலை மாதம் 2.18 சதவீதம் அளவு உயர்த்தப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 4.8சதவீதம் அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையில், ”கடன் உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தாண்டு 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்தவும், இதை செய்தால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவுகள் குறித்து ”முதலமைச்சர் ஆலோசனைக்கு பிறகே எடுக்கப்படும் எனவும், இது குறித்தான அறிவிப்பு ஜூலை 1-க்குள் அறிவிக்கப்படும்”…
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இம்மாதம் 4ம் தேதி தொடங்கியது. அதுமுதல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது. குறிப்பாக சேலம், ஈரோடு, நாமக்கல் உட்பட பல மாவட்டங்களில் 103 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் அடித்து நகர்த்தியது. சென்னையிலும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று (19.05.2025) விடிய விடிய மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், வேளச்சேரி, கோயம்பேடு,…
ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு அமைத்துள்ள தூதுக் குழுவில், எதிர்ப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் இணைக்கப்பட்டுள்ளார். காங்கிரசின் பரிந்துரைகளை மீறி இவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மறுப்பு: இந்த குழுவுக்காக காங்கிரஸ் பரிந்துரைத்த மற்றொரு பெயர் – எம்.பி. கௌரவ் கோகோய் – மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா, கோகோய்க்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் இடையே நெருக்கமான உறவுகள் உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பயணம் – அதிர்ச்சி குற்றச்சாட்டு: “கௌரவ் கோகோய் பாகிஸ்தான் சென்று, அந்நாட்டு உளவு அமைப்பின் அழைப்பின் பேரில் பயிற்சி பெற்றுள்ளார். இது நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் ஆபத்தாகும். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன,” என ஹிமந்தா தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திலிருந்து அவருக்கு நேரடியாக வந்த அழைப்பை அடிப்படையாகக் கொண்டே…
தமிழ்நாடு அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. திமுகவின் கூட்டணி உறுதியாக இருக்கிறது. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதிலிருந்து விலகிய பாமக, திமுகவுடன் சேரப் போகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளது. இந்த அரசியல் வழமைகளில் புதிய கிளையாக முளைத்திருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தற்போது அனைவரது கண்களும் குறிவைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்துக்குள் பேச்சு எடுபட்டிருக்கிறது. தனித்து நிற்குமா தவெக தமிழ்நாடு அரசியல் களத்தில் கூட்டணி நிலைப்பாடு என்பது மிக முக்கியமானதாக ஆகிவிட்டது. நெடுங்காலமாக ஆட்சிக் கட்டில்களில் அமர்ந்திருக்கும் பெருங்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவே இப்போதெல்லாம் கூட்டணி சேர்க்காமல் தேர்தலைச் சந்திப்பதில்லை. நாம் தமிழர் கட்சி மட்டும் இதற்கு முதலிலிருந்தே விதி விலக்காக இருக்கிறது. அதனால்தான் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தைப் பெறவே அதற்கு இத்தனை தேர்தல்கள் தேவைப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கி, இந்தத் தேர்தலை…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனிக்கு இருப்பது போன்ற ரசிகர் பட்டாளம் மற்ற வீரர்களுக்கு இருக்குமா என்றால் அது கேள்விக் குறி தான். இப்போது உள்ள சமூக வலைதளங்கள் மட்டுமின்றி, தோனி இந்திய அணிக்காக வெற்றி பெற்றுக் கொடுத்த கோப்பைகளே இதற்கு காரணம் எனக் கூறலாம். எத்தனையோ பேட்டர்கள், பவுலர்கள் வரலாம் ஆனால் ஒரு கேப்டனாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு கிரேஸை வைத்திருகிறார் தோனி. இந்திய அணிக்காக 3 ஐ.சி.சி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி தான். அதேப் போல ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்றுக் கொடுத்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டாலும் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். அதனாலேயே இவரது ரசிகர்கள் ஐபிஎல்லில் குவிவார்கள். குறிப்பாக இவர் களத்தில் இறங்கும் போது, ரசிகர்கள் எழுப்பும் ஆராவாரமும், விசில் சத்தமும் அப்பகுதியையே திருவிழா கோலம்…
புராணங்கள் மற்றும் வரலாற்று புதினங்களை தழுவி வரிசையாக படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகியுள்ளப் படம் கண்ணப்பா. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இப்படத்தையும் இயக்கியுள்ளார். கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். அவரோடு மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பீரித்தி முகுந்தன், மோகன் பாபு என பிற மொழி நடிகர்களும் நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படத்தில் அக்சய் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. ஜூன் 7-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் அக்சய் குமார் ’சிவன்’ கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
கோவை, மருதமலை முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேக்கர்பாபு தெரிவித்துள்ளார். கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, தற்போது உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை நிரந்தரமாக்குதல், மழைக்காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், அங்கு இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் நிழல் தரும் கூரையுடன் கூடிய கண்ணாடி நடைபாதை அமைத்தல் ஆகிய திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. மேலும், இப்பகுதியில் நடைபெற்று வரும் மின் தூக்கி அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, ஜூலை மாதத்திற்குள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதனைத் தொடர்ந்து, ஆசியாவிலேயே மிக உயரமான, 184 அடி உயரம் மற்றும் 80 – க்கு 60 சுற்றளவு கொண்ட முருகர் சிலை நிறுவப்பட உள்ள இடத்தையும் அமைச்சர் மற்றும் இந்து…
இந்தியாவைப் பின்பற்றி பாகிஸ்தானும் உலக நாடுகளுக்கு தனது நிலைப்பாட்டை விளக்குவதற்காக ஒரு குழவை அமைத்துள்ளது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளிடம் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ய சகிப்புத் தன்மை கொள்கையை விளக்கவும் 7 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை இந்திய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கையை பின்பற்றி பாகிஸ்தானும் அமைதிக்கான தனது நிலைப்பாட்டை விளக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலவல் பூட்டோ சர்தாரி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தைப் போல் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பிரதமர் நரேந்திர மோடி ஆதம்பூர் விமானப்…
சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. தனுஷின் இட்லி கடை, சிம்புவின் 49வது திரைப்படம், சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களை Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் துணை முதலமைச்சரும் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளருமான உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் பெரும்பாலான படங்களை, dawn பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் அமலாக்கத் துறையினர் கடந்த இரண்டு நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை ஆகாஷ் பாஸ்கரன் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிப்பதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்ற கோணத்தில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவு நிறைவடைந்தது. இதனிடையே…
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடு புகார் தொடர்பாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்கள் சோதனையில் ஈடுபட்டனர். விசாகன் வீட்டிற்கு வெளியே கிழிந்த நிலையில் இருந்த WHATSAPP SCREENSHOTகளின் பிரிண்ட் அவுட்களையும் அமலாக்கத் துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தனர். விசாகன் பயன்படுத்தும் மடிக்கணினியையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனிடையே டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு 2 நாட்கள் அழைத்துச் சென்று அமலாக்கத்துறையினர் விசாரித்தனர். நேற்று (மே 17) காலை 10:40 மணி முதல் இரவு 9:45 வரை 11 மணி நேரம் விசாகனிடம் விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில், விசாகன்…