Author: Editor TN Talks
கர்நாடகாவில் 14 வயது சிறுவனை 12 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த நண்பர்களான 14 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் இருவரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் 8 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இருவரும் ரூ.5 மதிப்புள்ள தின்பண்டத்தை கடையில் வாங்கி சாப்பிட்டுள்ளனர். தின்பண்டத்தை பகிர்ந்து கொள்வதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பாகி இருவரும் உருண்டு பிரண்டு சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த 12வயது சிறுவன், கத்தியை எடுத்து வந்து 14 வயது சிறுவனை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடியுள்ளான். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து…
உலகப் பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மலர் கண்காட்சிக்காக 1.75 லட்சம் ரோஜா, கார்ப்பரேஷன், கிரைசாந்தி உள்ளிட்ட மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான ராஜா சோழன் அரண்மனை, அரண்மனை நுழைவாயில், ராஜா சிம்மாசனம், அன்னப் பறவை, யானை, புலி உள்ளிட்ட 24 மலர் சிற்ப வடிவமைப்புகளை பார்வையிட்டு வருகிறார். இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சரும், நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மு.பெ சாமிநாதன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, தமிழக அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
டிக்டாக் மற்றும் யூடியூப் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி என்ற கிராமத்தில் சராசரியான குடும்பத்தை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. தனது யதார்த்த வட்டார வழக்கின் பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் மூலம் சினிமாவிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அத்தோடு கடந்தாண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை விரிவாக்கிக் கொண்டார் ஜி.பி.முத்து. இப்படிப்பட சூழலில் ஜி.பி.முத்துவை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமான காட்சி ஒன்று இணையத்தில் வைரலானது. ஜி.பி.முத்து தனது மனைவியுடன் கடந்த 13-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், பெருமாள்புரத்தில் கீழ தெரு ஒன்று இருந்ததாகவும், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தி வந்ததால், கடந்த 20 வருடங்களில் அந்த தெரு காணாமல் போய்விட்டதாக அவர் கூறியிருக்கிறார். அந்த தெரு இருந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து விட்டதால்,…
கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற குக்கே சுப்ரமண்யர் கோயிலின் நிர்வாக வாரிய தலைவராக முன்னாள் ரவுடி நியமிக்கப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டத்தில் உள்ளது குக்கே சுப்ரமணியர் கோயில். வரலாற்று சிறப்புமிக்க புண்ணிய தலமான இங்கு, உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு பயணிகளும் கோயிலுக்கு வருகை தருவர். குறிப்பாக தோஷ நிவர்த்திக்கு இக்கோயில் சிறப்பு பெற்றது. கர்நாடகாவில் அதிக வருவாய் கிடைக்கும் கோயில்களின் பட்டியலில், குக்கே சுப்ரமணியர் கோயில் முதலிடத்தில் உள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த கோயிலின் நிர்வாக வாரிய தலைவர் பதவிக்கு முன்னாள் ரவுடி ஹரிஷ் இஞ்சாடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை இந்த பதவிக்கு சிபாரிசு செய்தது சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் என தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஷ் இஞ்சாடி என்பவர் அடிக்கடி சிறைக்கு சென்று வந்துள்ள முன்னாள் ரவுடி. போலி காசோலை கொடுத்து பழங்கள், தேங்காய் விற்பனை டெண்டர் எடுத்து கோயில் நிர்வாகத்தை ஏமாற்றியதாக இவர் மீது…
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 6,000-க்கும் அதிகமான பணியாளர்களை உடனடி பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. உலக டெக் நிறுவனங்கள் பல தங்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் 6,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. உலகெங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு 2.28 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 3 சதவீதம் பேரை நிறுவனம் தற்போது பணி நீக்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் மட்டும் 1.26 லட்சம் பணியாளர்களும், இந்தியாவில் கிட்டத்தட்ட 20,000 பணியாளர்களும் உள்ளனர். கடந்தாண்டு 10,000 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்த நிலையில், இந்தாண்டு மீண்டும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2024-2024-ம் கடைசி காலாண்டில், அதாவது இந்தாண்டு ஜனவரி தொடங்கி மார்ச் வரை இந்நிறுவனத்தின் லாபம் எதிர்பார்ப்புகளை விட அதிகம் இருந்துள்ளது. 70.1 பில்லியன் டாலர் வருவாயையும், 25.8 பில்லியன் டாலர் நிகர வருமானத்தையும் பெற்றிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. லாபம் எதிர்பார்த்தை விட அதிகம்…
இந்தியா–பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாக கூறியதற்கும், அதைப்பற்றி பிரதமர் மோடி இதுவரை எந்த விளக்கமும் தராததற்கும் எதிராக காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா இணைந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “பாகிஸ்தானுடன் நடந்த இரகசிய சமாதான பேச்சுவார்த்தையைப் பற்றி டிரம்ப் வெளியிட்ட தகவலுக்கு பிரதமர் மோடி இதுவரை பதிலளிக்கவில்லை. இது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்கான விளக்கம் தேவைப்படுகிறது” என அவர்கள் வலியுறுத்தினர். இதையும் படிக்க: பெயர் மாற்றம் பயனற்றது.. அருணாசல பிரதேசத்தின் உரிமை இந்தியாவுடையதே.. மத்திய அரசு கடும் கண்டனம்! அத்துடன், “மோடியின் மவுனத்தை எதிர்த்து மற்றும்…
அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நிலைமையை மாற்ற முடியாது என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் தொடர்ந்து வரும் இத்தகைய முயற்சிகள் மீது இந்தியா உறுதியான பதிலை வழங்கியுள்ளது. சீனா கடந்த சில ஆண்டுகளாக அருணாசல பிரதேசத்தை “ஜாங்னான்” என அழைத்து, அங்கு உள்ள இடங்களுக்கு சீன மொழியில் பெயர் சூட்டுகிறது. கடந்த ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்த சீனா, தற்போது மீண்டும் அதே போக்கை தொடரும் சூழலில் உள்ளது. இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: “அருணாசலப் பிரதேசம் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியாக இருந்தும் தொடரும். பெயரை மாற்றும் வெறுக்கத்தக்க முயற்சிகள் யதார்த்தத்தை மாற்ற முடியாது. இவை சாத்தியமற்ற மற்றும் அர்த்தமற்ற நடவடிக்கைகள் என்பதையும், இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது” என கூறினார். இதையும் படிக்க: பராமரிப்பு பணி காரணமாக மின்சார…
சென்னை சென்டிரல் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், பல்வேறு மின்சார ரெயில்கள் இன்று மற்றும் மே 17-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பகுதிகள்: பொன்னேரி – கவரப்பேட்டை இடைப்பட்ட ரெயில் பாளங்கள் பராமரிக்கப்படுவதால், சென்னை சென்டிரல், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை, ஆவடி, என பல வழித்தடங்களில் பயணிகள் பாதிக்கப்பட உள்ளனர். ரத்து செய்யப்படும் முக்கிய ரெயில்கள்: சென்னை சென்டிரலிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் (காலை 10:30, 11:35 மற்றும் மதியம் 1:40) கும்மிடிப்பூண்டி–சென்னை சென்டிரல் ரெயில்கள் (மதியம் 1:00, 3:45) சூலூர்பேட்டை வழித்தட ரெயில்கள் (சென்னையிலிருந்து காலை 5:40, 10:15, 12:10) சூலூர்பேட்டியில் இருந்து சென்னைக்கு புறப்படும் ரெயில்கள் (மதியம் 12:35, 1:15, 3:10) கடற்கரை–கும்மிடிப்பூண்டி (மதியம் 12:40, 2:40) நெல்லூர்–சூலூர்பேட்டை இடையே ஓடும் ரெயில்கள் ஆவடி–சென்டிரல் அதிகாலை ரெயில் (4:25am) சிறப்பு ரெயில்கள்…
பொள்ளாச்சியில் இருந்து விருதுநகருக்குச் செல்கின்ற அரசு பேருந்தில் நேற்று நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் பயணிகளை பெரும் பதட்டத்தில் ஆழ்த்தியது. பொள்ளாச்சி அரசு பேருந்து, மதியம் 1.30 மணியளவில் விருதுநகரை நோக்கி புறப்பட்டது. பேருந்தை 50 வயதுடைய அருள்மூர்த்தி என்பவர் ஓட்டினார். பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். ஆனால், கோமங்கலம் அருகே சென்றபோது பஸ் தடுமாறிக் கொண்டிருந்தது. அதனால் பயணிகள் கவலையடைந்து, டிரைவரிடம் பஸ்சை நிறுத்துமாறு கேட்டுள்ளனர். அதிர்ச்சி: பயணிகளின் கடுமையான கண்டனத்துக்குப் பிறகே பஸ் நிறுத்தப்பட்டது. அதற்குப் பின்னர், டிரைவர் அருள்மூர்த்தி தனது இருக்கையிலேயே சாய்ந்துள்ளார். அவரிடம் குடிநீர் பாட்டிலில் மதுபானம் இருந்ததாகவும், மதுவேனல் காரணமாக பஸ் தடுமாறியதாகவும் கூறப்படுகிறது. போலீசார் தலையீடு: பயணிகள் உடனடியாக கோமங்கலம் போலீசுக்கு தகவல் வழங்கினர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்த போலீசார், அருள்மூர்த்தியை பரிசோதனைக்காக கோலார்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்…
தென்னிந்தியாவின் பிரம்மாண்டமான மலர் திருவிழாவான, 127வது ஊட்டி மலர் கண்காட்சி இன்று (மே 16, வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. 11 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். இயற்கை வளமும் சுகாதாரமான சூழலுமிக்க நீலகிரியில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய நிகழ்வாக ஆண்டுதோறும் இந்த மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கோத்தகிரி காய்கறி கண்காட்சி, கூடலூர் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி ரோஜா கண்காட்சிக்குப் பின்னர், மலர் கண்காட்சி முக்கிய பங்காற்றுகிறது. மலர்களின் மாயாஜாலம்: இந்த ஆண்டு கண்காட்சியின் சிறப்பு அம்சமாக, ஜெர்மனியம், சைக்ளோபின், ஓரியண்டல் லில்லி, பேன்சி, ஆர்னமெண்டல் கேல், ஜினியா, டெல்முனியம் போன்ற 275 வகையான மலர் நாற்றுகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன. பூங்காவின் பல பகுதிகளில் 7.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மலர் மாடங்கள் மற்றும் அலங்காரத் தொட்டிகளில் மட்டும் 45,000…