Author: Editor TN Talks
கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவை ஒட்டி நடைபெற்ற மிஸ் கூவாகம் போட்டியில் நெல்லையை சேர்ந்த ரேணுகா பட்டத்தை தட்டிச் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் என்ற கிராமத்தில் உள்ளது கூத்தாண்டவர் கோயில். திருநங்கைகளின் குல தெய்வமாக கருத்தப்படும் இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். அத்தோடு சித்திரைத் திருவிழாவை ஒட்டி திருநங்கைகளுக்காக பல்வேறு போட்டிகளும் நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டுக்கான கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று (13.05.2025) நடைபெற்றது. இதில் திருநங்கைகள் தங்களை புதுமணப் பெண் போல் அலங்கரித்துக் கொண்டு கோயிலுக்கு வருகை தந்தனர். பின்னர் அரவாண் சாமியை கணவராக பாவித்து கோயில் பூசாமி கையால் தாலி கட்டிக் கொண்டனர். திருநங்கைகளை…
பாலக்காடு ரயிலில் பயணம் செய்த பெண் மீது ரயிலின் படுக்கை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகலிவாக்கம் குமாரசாமி தெருவை சேர்ந்த 50 வயதான ஜோதி என்பவர், எழும்பூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சூர்யா மற்றும் மகனுடன் சென்டிரலில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் நேற்று முன்தினம் (11.05.2025) அன்று பயணம் செய்துள்ளார். அப்போது சூர்யா படுக்கை வசதி கொண்ட பெட்டியின் கீழ் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த போது, தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே, சூர்யாவின் இருக்கைக்கு மேல் நடுப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் கீழே இறங்கியுள்ளார்.. அப்போது எதிர்பாராத விதமாக சங்கிலி கழன்றதால், படுக்கை கீழே படுத்திருந்த சூர்யா மீது விழுந்ததில், சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ரயிலில் முதலுதவி சிகிச்சை பெட்டி இல்லாததால், ஆத்திரமடைந்த சூர்யாவின் கணவர் ஜோதி,…
இசையமைப்பாளர் இளையராஜா இசையில் யுவன்சங்கர் ராஜா பாடிய தெலுங்கு பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. BGM KING, LOVE DRUGS என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் யுவன் சங்கர் ராஜா. தனது தனித்துவமான இசையால் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் யுவன், பிற இசையமைப்பாளர்கள் இசையில் பாடுவதும் உண்டு. ஆனால் அவரது தந்தையும், இசைமேதையுமான இளையராஜாவின் இசையில் யுவன் ஒரு பாடலைக் கூட பாடியதில்லை. தற்போது தெலுங்கில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள ஒரு படத்திற்காக யுவன் ஒரு பாடலை முதன்முறையாக பாடியுள்ளார். பவன் பிரபா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ”ஷஷ்டிபூர்த்தி” படத்தில் ரூபேஷ் மற்றும் ஆகான்ஷா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 30-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சைதன்யா பிரசாத் எழுதிய இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் நித்யா ஸ்ரீ ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடம் தற்போது இணையத்தில்…
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மீது அறப்போர் கொடுத்த புகாரில் கூடுதல் ஆதாரங்களை அமலாக்கத்துறை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பியுள்ளது. கடந்த 2011-2021-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்ற போது, 2011-2016-ம் ஆண்டு வரை வீட்டு வசதிவாரிய அமைச்சராக வைத்திலிங்கம் பொறுப்பு வகித்து வந்தார். அப்போது 2015-2016 காலகட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டிஸ்-இன் 57.94 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு வைத்திலிங்கம் ரூ.28கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகரில் வைத்திலிங்கம் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. வைத்திலிங்கம் மட்டுமின்றி மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையில் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது 2011-2016 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிமகாக ரூ.33கோடி சொத்து சேர்த்ததாக தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்…
புரோட்டின் கொண்ட முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. அத்தோடு மாநிலம் முழுவதும் முட்டை கொள்முதல் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று (13.05.2025) முட்டை விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் நாமக்கலில் இருந்து தான் பிராதனமாக முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கலில் இருந்து விற்பனை செய்யப்படும் முட்டையின் விலையானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேறுபடுகிறது. நாமக்கலில் நேற்று ரூ.5.25 காசுகளாக விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை சென்னையில் ரூ.5.80 காசுகளாக விற்பனையானது. அந்த வகையில் இன்று நாமக்கலில் முட்டையின் விலை ரூ.5.35காசுகளாக விற்பனையாகிறது. நேற்று (12.05.2025) நாமக்கலில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. அதனால் நாமக்கல் மண்டல கோழிப் பண்ணைகளில் இன்று (13.05.2025) ரூ.5.35காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர் அதேப் போல், நாமக்கலில் கறிக்கோழி கிலோ ரூ.105-க்கும்…
அடர்ந்த காடுகளில் உள்ள விலங்குகள் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துகள் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைத் தூண்டும். இதனால் அரிய உயிரினங்களை கடத்தி கள்ளச்சந்தையில் கோடிக்கணக்கான மதிப்பில் விற்க வழிவகுக்கிறது. இதே போல், பீகாரில் உள்ள வால்மீகி புலிகள் சரணாலயம் மற்றும் பல மாநிலங்களில் காணப்படும் விஷமற்ற ரெட் சாண்டு போவா பாம்பும் உள்ளது. “இரண்டு தலை பாம்பு” என்று அறியப்படும் இந்த பாம்புக்கு நீண்ட காலமாக பரப்பப்பட்டுள்ள கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்கள், இதனை சட்டவிரோதமாக கடத்தும் போக்கை அதிகரித்துள்ளன. ரெட் சாண்டு போவாவுக்கு உண்மையில் இரண்டு தலைகள் இல்லை. அதன் வால் பாம்பின் தலையை ஒத்திருப்பதால் வேட்டையாடுபவர்களை குழப்பி தாக்குதல்களைத் தடுக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு சங்கத்தின் திட்ட மேலாளரும் வனவிலங்கு நிபுணருமான அபிஷேக், “டபுள் எஞ்சின் பாம்புகள்” என்று அறியப்படும் இவை முற்றிலும் பாதிப்பில்லாதவை என்றும், அவை அடக்கமானவையாய் தொந்தரவு…
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன்… தாக்குதலை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது…. இனி எந்தவொரு பயங்கரவாத செயலும் போராகவே கருதப்படும்… அணு ஆயுத மிரட்டலைக் கண்டு இந்தியா ஒருபோதும் அஞ்சாது… இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளநிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதன் விரிவான தகவல்களை பார்ப்போம்.. போரில் ஈடுபட்ட இந்தியாவின் முப்படைகளுக்கும், உளவுத்துறை அமைப்புகளுக்கும் ஒரு சல்யூட் என்று மோடி குறிப்பிட்டார். பாதுகாப்பு படையினரின் பராக்கிரம், துணிச்சல் நமக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது என்றார். ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதல் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றார். பஹல்காமில் மகள்கள்…
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே லைசன்ஸ் பெற்று இருசக்கர வாகனங்களை இயக்க முடியும் என போக்குவரத்து சட்டம் சொல்கிறது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதில் உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் சென்னை பூந்தமல்லி சாலையில், ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று சிறுவர்கள் விபத்தில் சிக்கியதில், 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது 13-வயது மகன் பிரியன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கலைவாணன் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. தந்தை இல்லாத நேரத்தில் அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற பிரியன், தனது நண்பர்களான 10வயது சிறுவர்கள் கார்த்திகேயன் மற்றும் முகிலன் ஆகியோருடன் சுற்றியுள்ளார்.…
சாதியை காரணம் காட்டி, கோவில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் இன்னொரு வடிவம் என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெரியபுராணம் எழுதிய சேக்கிழார், குன்றத்தூரில் கட்டிய திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம், மே 13ஆம் தேதி துவங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கோவில் விழாவுக்கு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் மட்டுமே நன்கொடைகள் வசூலிக்கப்பட்டதாகவும், மற்ற சமுதாயத்தினரிடம் நன்கொடைகள் வசூலிக்கப்படவில்லை என்றும் கூறி, குன்றத்தூரைச் சேர்ந்த அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க தலைவர் இல.பாண்டியராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, தீண்டாமை இந்நாட்டில் பல்வேறு வழிகளில் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் சாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் இன்னொரு வடிவம் என வேதனை தெரிவித்துள்ளார். கடவுள் முன் ஜாதி இருக்கக் கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைத் சுட்டிக் காட்டிய நீதிபதி,…
பச்சைப் பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விசேஷ வாகனங்கள் சுவாமி மற்றும் அம்மாள் எழுந்தருளி மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 6ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 8ம் தேதி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 9ம் தேதி திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது. இந்தநிலையில், புகழ்பெற்ற மதுரை அழகர்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக 10ம் தேதி மாலை சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து தங்கப்பல்லக்கில் மதுரை மாநகர் நோக்கி புறப்பட்டார். வழியெங்கும் அமைக்கப்பட்டுள்ள மண்டகபடிகளில் எழுந்தருளும் கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11ம் தேதி இரவு தல்லாகுளத்தில் விடியவிடிய நடைபெறும் எதிர்சேவையில் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி…