Author: Editor TN Talks
இந்திய – பாகிஸ்தான் இடையே நடைபெறும் பதற்றமான சூழலில் ஏவுகணைகள், டிரோன்களை விட அதிகமான வதந்திகளையே பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி வீசிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று இந்திய ராணுவம் எச்சரிக்கிறது. ஆபரேஷன் சிந்தூரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதே நாடு முழுவதும் பேச்சாய் இருக்கிறது. இதுவரை அடியும் பதிலடியுமாய் மாற்றி மாற்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தரை மார்க்கமாகத் தாக்குதல்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்து வருகிறது. எல்லையோர மாநில மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையும் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? இந்தியாவின் அடுத்த நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது…
இந்தியா – பாகிஸ்தான் இடையே துப்பாக்கி சண்டையும், ராணுவ நடவடிக்கையும் உடனடியாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் இன்று பிற்பகல் மூன்று முப்பத்தைந்து மணிக்கு இந்திய ராணுவ அதிகாரிகளை தொடர்புக் கொண்டு பேசியதாகவும், இதனை அடுத்து இருதரப்பிலும் மாலை ஐந்து மணி முதல் சண்டையை நிறுத்திக்கொள்வது என ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறினார். வான், தரை மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் மாலை ஐந்து மணி முதல் சண்டை நிறுத்தம் செய்ய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாளை மறுநாள் நண்பகல் 12 மணிக்கு இருதரப்பு ராணுவ அதிகாரிகளும் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்திற்கு அமெரிக்கா விடியவிடிய முயற்சி மேற்கொண்டதகாவும், சண்டை நிறுத்தத்திற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அமெரிக்க…
சென்னை அண்ணாசாலை காங்கிரஸ் மைதான நிலம் தொடர்பாக தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் அறக்கட்டளை நிலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல், நிலத்தை எடுத்து கொண்டதாக தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் அறக்கட்டளை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக 180 கிரவுண்ட் நிலம் உள்ளது. காமராஜர் அரங்கத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக ப்ளூ பேர்ல் என்ற தனியார் நிறுவனத்துடன் காங்கிரஸ் அறக்கட்டளை 1996 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த நிலத்தில், திறந்தவெளி நிலத்தை பராமரிப்பது தொடர்பாக காங்கிரஸ் அறக்கட்டளை ஆட்சேபமில்லா சான்று வழங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. இந்நிலையில் ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என கூறி…
பாகிஸ்தானோட பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதில் தாக்குதல் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவில் எல்லைக் கோடு அருகே கண்மூடித் தனமான தாக்குதலை பாகிஸ்தான் இந்திய பொதுமக்கள் மீது நடத்தி வருகிறது. டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்களை, இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்து வருகின்றனர். இந்த நிலையில் ராணுவத்திற்கு துணையாக நாங்கள் இருக்கிறோம் என சண்டிகரில் ஏராளமான இளைஞர்கள் குவிந்து வருகின்றனர். பகுதி நேர தன்னார்வலர்களை உறுப்பினர்களாக கொண்ட ராணுவ ரிசர்வ் படையாக, “டெரிடோரியல் ஆர்மி” என்ற பெயரில் பிராந்திய ராணுவம் அங்கு செயல்படுகிறது. இந்த பிராந்திய ராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முழு அதிகாரம் ராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், சண்டிகரில் இளைஞர்கள் குவிந்து வருகின்றனர். ’ராணுவத்திற்கு உதவ தயார்’…
பாகிஸ்தானின் அத்துமீறலான தாக்குதலை தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பாகிஸ்தான் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நாடே இப்படி பதட்டத்தில் சென்று கொண்டிருக்க, பாலிவுட் திரையுலகம் மட்டும் இந்த போரை தழுவி படம் எடுக்கவும், அபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கும் போட்டி…
பதின்மவயதில் இயல்பாக தோன்றும் காதல். அதை எதிர்க்கும் ஆதிக்கசாதி மனநிலை கொண்ட பெண்ணின் மாமா. இது தான் தெலுங்கு நடிகர் நானி தயாரிப்பில் வெளி வந்திருக்கும் “கோர்ட்” படத்தின் ‘ஒன் லைன்” இயல்பாகவே பதின்ம காதலில் முதலில் பெண் தான் காதலுக்கு அச்சாரமாக இருக்கிறாள். குறிப்பாக வசதி வாய்ப்புகளோடு வளரும் இளம்பெண், எதிர்பாலினத்தின் மீதான கவர்ச்சியை நாடுவது இயல்பு. இத்தகைய சூழலில் ஆணைக் காட்டிலும் அந்த காதலுக்கு பெண்ணே தூண்டுக்கோலாகிறாள். ஆனால் எதிர்பாராத ஒரு சிக்கலில் ஆண் அதற்கு பலியாகிறான். தமிழில் ” காதல்” படம் சிறந்த உதாரணம். ஒர் நெருக்கடியில் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி சென்னை தெருக்களில் தஞ்சமடைய, அதற்கு பின் நடப்பவைகள் எல்லாம் தமிழ் சினிமா பார்த்திராத அதிர்ச்சியூட்டும் பக்கம். ஆனால் காதல் திரைப்படம் சாதியை அதன் ஆதிக்கத்தை வெளிப்படையாக முன் வைக்கமால், அதன் அடிநாதத்தை மட்டும் தொட்டு இருக்கும். அப்போதைய சூழல் இயக்குநருக்கு அது மட்டுமே…
கல்லூரி விழாவில் தன் ஆண் நண்பனுடன் தனியாக இருக்கும் பெண்ணை ( மோனிகா பன்வர்) கூட்டு பலாத்காரம் செய்கிறது அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் கும்பல் ஒன்று. இதனால் மனச்சிதைவுக்கு ஆட்பட்டு ஊரில் இருக்க முடியமால், ஆண் நண்பன்( அபிஷேக் சுக்லா) உதவியுடன் டெல்லிக்கு வருகிறாள். டெல்லியில் ஒதுக்குப்புறமான ஒரு அரசு நடத்தும் ஹாஸ்டலில் தங்குகிறாள். அந்த அறையில் அதற்கு முன்னர் வசித்து வந்த ஒரு பெண் இறந்து போக, நெடுநாள் அந்த அறை பூட்டியே கிடக்கிறது. அமானுஷ்யமான விஷயங்கள் அந்த அறையில் அவ்வப்போது நடக்கிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் தோழிகளையும் வெளியே செல்லவிடமால் ஏதோ ஒன்று தடுக்கிறது. இந்த விஷயங்களை சொல்லி அந்த அறையில் தங்க வேண்டாம் என்று தன் காதலி மோனிகாவை தடுக்கிறார் காதலன் அபிஷேக். ஹாஸ்டலில் வசிக்கும் நான்கு பெண்களும் வேண்டாம் என்று சொல்லி எச்சரிக்கிறார்கள். மனமுடைந்த நிலையில் இருக்கும் மோனிகா இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளி, அந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. 2011-ம் ஆண்டு “நுவ்வில்லா” என்ற நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். ”அர்ஜூன் ரெட்டி” திரைப்படம் மூலம் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர். இவரது நடிப்பில் கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய் செலவில் உருவான லைகர் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திருமிரான பேச்சு தான் காரணம் என அப்போது குற்றம்சாட்டப்பட்டது. இந்த தோல்வியில் இருந்து மீள, அடுத்தடுத்து தனது கதைகளை நிதானமாக தேர்ந்தெடுத்தார் விஜய் தேவரகொண்டா. 2023-ம் ஆண்டு சமந்தாவுடன் ஜோடி சேர்ந்த இவர் நடித்திருந்த ”குஷி” திரைப்படம் ஓரளவு இருவருக்கு கைக் கொடுத்தது. விமர்சன ரீதியாக வரவேற்பை இப்படம் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பின்னடைவே சந்தித்தது. அதனை தொடர்ந்து கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ”தி ஃபேமிலி ஸ்டார்” திரைப்படமும் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை. தொடர் தோல்விகளில் இருந்து விஜய் தேவரகொண்டா…
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தராமல், திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு. இதற்கெல்லாம் விடிவுகாலம் வெகு விரைவில் வர உள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதி வாழ் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். * அதிமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் போதிய மருத்துவர்கள் இல்லை எனவும், இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சொல்லொண்ணா…
சினிமா உலகில் நீண்ட நாள் திருமண உறவில் இருந்த பிரபலங்கள் விவாகரத்து பெறுவது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. தனுஷ்-ஐஸ்வர்யா தொடங்கி, ஜி.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரகுமான் வழியே ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி பிரிவு வரை அடுத்தடுத்து பிரபலங்கள் விவாகரத்து செய்வது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது. ஜெயம் படம் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்த ரவி மோகன், 40-க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தனி ஒருவன், கோமாளி போன்ற வெற்றிப் படங்களை எப்போது இவர் தருவார் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, வெளியானது என்னவோ மனைவியை பிரிவதாக அவர் வெளியிட்ட விவாகரத்து அறிக்கை தான். 2009-ம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயக்குமாரின் மகளான ஆர்த்தி என்பவரை ரவி மோகன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், குடும்பமாக இவர்கள் வெளியிடும் புகைப்படங்களும்,…