Author: Editor TN Talks
2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுகவுடன் கைகோத்து சந்திக்கக் களமிறங்கி இருக்கும் பாஜக, அண்ணாமலை பாணி அரசியல் செய்யவே கூடாது என்று முடிவெடுத்திருக்கிறது. பாஜகவின் ஊடகப் பிரிவினருடன் நடந்த ஆலோசனையின் அக்கட்சியின் தற்போதைய மாநில தலைவர் கராராகத் தெரிவித்திருக்கிறார். அதென்ன அண்ணாமலை பாணி அரசியல்? நாடு முழுவதிலும் பல மாநிலங்களில் முக்கிய கட்சியாகத் திகழும் பாஜக, தமிழ்நாட்டிற்குள் அசைக்க முடியாத அஸ்திவாரத்தை ஏற்படுத்த கடந்த 20 ஆண்டுகளாக மும்முரமாக உழைத்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் அதில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. வரிசையாக வந்த பாஜக மாநில தலைவர்கள் அனைவருக்கும் அந்த அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர் அண்ணாமலை. 2021-ம் ஆண்டு அப்போதைய பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சராகப் பதவி வழங்கப்பட்டதும், அப்பதவிக்கு அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்ததுபோல் பிம்பம் உருவானது. அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும்…
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு, நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனையை விதித்துள்ளது. கோயம்பேட்டில் உள்ள 17 சென்ட் நிலம் கடந்த 1983ஆம் ஆண்டு லலிதாம்பாள் மற்றும் அவரது சகோதரர் விஸ்வநாதனிடம் இருந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. 2003 ஆம் ஆண்டு, நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இருவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் 10.5 சென்ட் நிலத்தை திருப்பிக்கொடுக்க உத்தரவிட்டது. மீதமுள்ள 6.5 சென்ட் நிலம் சாலை விரிவாக்கத்திற்காக தேவைப்படுவதாக தெரிவித்து வீட்டு வசதி வாரியம் அதை தக்க வைத்துக் கொண்டது. இதையும் படிக்க: மா.சுப்பிரமணியன் மீதான நில மோசடி வழக்கு இருப்பினும், அந்த நிலமும் பாவனைக்காக பயன்படுத்தப்படவில்லை என்பதால் அதை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன்…
பொதுவெளியில் அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி தம்பதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் பாடகி கெனிஷா உடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது சம்பந்தமாக ஆர்த்தி காட்டமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து நடிகர் ரவி மோகனும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தப் பின்னணியில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மனைவி ஆர்த்திக்கு தடை…
நீலகிரி மாவட்டம் உதகைக்கு கடந்த 20-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தியும், பல் மருத்துவருமான திவ்யப் பிரியா தனது கணவர் கார்த்திக் ராஜா மற்றும் உறவினர்கள், குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலாவை முடித்துவிட்டு உதகையில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் வருவதற்காக காரில் குடும்பத்துடன் வந்துள்ளனர். அப்போது காரில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனதால் கார் ஓட்டுநர் சாலையோரத்தில் இருந்த பக்கவாட்டில் இருந்த பாறை மீது மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் பல் மருத்துவர் திவ்ய பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த இருவரையும் போலீசார் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த மருத்துவர் திவ்யப்பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தியும், பல் மருத்துவருமான திவ்யப்பிரியாவுக்கு திருமணம் ஆகி மூன்று…
தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இம்மாதம் தொடக்கத்தில் தொடங்கிய அக்னி வெயிலானது, வரும் 28-ம் தேதி வரை தொடர்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் சூட்டை தணிக்கும் விதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைந்து தற்போது பருவமழையின் தாக்கம் தொடங்கியுள்ளது. வழக்கமாக அடுத்த மாதம் தொடங்கும் பருவமழையானது இம்மாத இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் உருவாகும் என வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மே 25,26 ஆகிய 2 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்…
தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம் 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஊரகப் பகுதிகளில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 30,992 அரசு பள்ளிகளிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 17.53 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். நடப்பு கல்வியாண்டு முதல், நகர்ப்புறங்களில் இயங்கி வரும் 1,545 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது. பட்ஜெட்டில் அறிவித்த படி நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகனாகவும் ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் Thug Life படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதால், படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் முழு தீவிரத்துடன் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கமல்ஹாசன் அளித்த ஒரு சமீபத்திய பேட்டியில், சினிமா பற்றிய அவரது கருத்துகள் ரசிகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன. அவர் கூறியதாவது: “சினிமா வெறும் பொழுதுபோக்கு மாத்திரம் அல்ல, அது ஒரு சக்திவாய்ந்த ஊடகம். கதைகளின் மூலம் சமூகக் குறைகளைச் சுட்டிக்காட்டவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நான் எப்போதும் பாடுபடுகிறேன். இந்த பொறுப்பிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். என்னுள் இருக்கும் அந்த தீ இன்னும் எரிகிறது; அது அணையும் வரை நான் நடித்துக்கொண்டே இருப்பேன்.” இவரின் இந்த உணர்ச்சிகரமான வார்த்தைகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி, அவரின் சமூகப் பொறுப்பு மீதான அக்கறையை மீண்டும்…
சென்னை அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்த சகாய பிர்வீன் என்ற ஐ.டி நிறுவன அதிகாரி, மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவி மேரி மெர்சியை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளார். மனைவியின் உறவினரான செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் ஆண்டனி ஸ்டாலின் தூண்டுதலின்படி, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுமதி, 2020ம் ஆண்டு தன்னையும் தனது குடும்பத்தினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து, தனது தாய் பெயரில் உள்ள வீட்டின் சாவியை வலுக்கட்டாயமாக பறித்து மனைவியிடம் கொடுத்து கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். சாவியை ஒப்படைக்க மறுத்த போது, தன்னை மனைவி குடும்பத்தினர் முன் அடித்து, தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தியதால், பெண் ஆய்வாளர் சுமதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய…
போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை அபகரித்தாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால், இன்று நடைப்பெறுதாக அறிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு பதிவு நடைமுறை நடத்தப்படாமல் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா இருவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டது. இந்த…
பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் தான் சின்னத்தை ஒதுக்குகிறது. மேலும், 234 தொகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் போது தேர்தல் ஆணையம் பொது சின்னம் வழங்குகிறது. அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தான் இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் 11-ம் தேதி முதல் பொது சின்னம் கேட்டு விண்ணப்பிக்க, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுவான சின்னம் கேட்டு, விண்ணப்பிக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தீவிர ஆலோசனையில் அக்கட்சி ஈடுபட்டுள்ளதாகவும், தவெகவுக்கு தனித்துவமாகவும், மக்கள் எளிதாக நினைவில் கொள்ளும் வகையிலும் சின்னத்தை பெறுவதில் கட்சியின் தலைவர் விஜய் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.