Author: Editor TN Talks

டாஸ்மாக் அமலக்கத்துறை சோதனை விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் இந்த விசாரணையை மேற்கொண்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒரு நிர்வாகத்தின மீது நடவடிக்கை எடுப்பதா ? என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமலக்கத்துறை இந்த வழக்கில் வரம்பு மீறி நடக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி நீங்கள் விசாரிக்க முயற்சிப்பீர்கள்? என்ற கேள்வியையும் நீதிபதிகள் முன்வைத்துள்ளார்கள். அமலக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது, வரம்பு மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது என நீதிபதிகள் கண்டனம்…

Read More

டாஸ்மாக்-கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகள் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த 41 வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல…

Read More

கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து திருக்குறளுக்கு தாம் எழுதியிருக்கும் உரை நூலின் பெயரை வெளியிட்டுள்ளார். வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற தலைப்பில் விரைவில் புத்தகம் வெளியாகவுள்ளதாக காணொலி வெளியிட்டுத் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் மூத்த பாடலாசிரியராகவும் கவிஞராகவும் திகழும் வைரமுத்து, கடந்த சில மாதங்களாக திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதி வருவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று திருக்குறள் உரை முழுவதும் நிறைவடைந்தது என அறிவித்தார். அதுகுறித்த அவரது அறிவிப்பில், ‘உலகத் தமிழ் உள்ளங்களே வணக்கம். திருக்குறள் நிறைந்துவிட்டது; முப்பாலுக்கும் உரையெழுதி முடித்திருக்கிறேன். ஏழு முறை செப்பனிட்டுவிட்டேன்; கணினித் தலைமுறைக்கான கனித்தமிழ் இது. ஈராயிரம் ஆண்டை இருபது வயதிற்கு எடுத்துச் செல்வது; அறமும், பொருளும் ஞானப் பொருளாகவும், இன்பம் கவிதைப் பொருளாகவும் உரை செய்யப்பட்டிருப்பது பிறந்த பெருங்கடமைகளுள் ஒன்று. நிறைவுற்றதாய் நெஞ்சமைதி கொள்கிறேன். நூலின் தலைப்பை மே 22-ம் தேதி இதே தளத்தில் அறிவிக்கிறேன். நீங்கள் என்மீது வீசும் ஒவ்வொரு பூவிலும் குருதி…

Read More

டெல்லியிலிருந்து ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர் நோக்கி நேற்று மாலை புறப்பட்ட இண்டிகோ விமானம், கடுமையான வானிலைச் சிக்கல்களை சந்தித்தது. இருந்தாலும், விமானம் பாதிப்பின்றி ஸ்ரீநகரில் தரையிறங்கியது. டெல்லியில் வானிலையில் திடீர் மாற்றம்: அடிக்கடி 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாடித்தாடிய டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை வானிலை திடீரெனவே மாறியது. பல பகுதிகளில் ஆலங்கட்டி மழையும், பலத்த காற்றும், தூசி புயலும் ஏற்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்ததால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. விமான போக்குவரத்திலும் குழப்பம் ஏற்பட்டது. சில உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தரையிறங்க வேண்டிய டெல்லி விமான நிலையத்திலிருந்து மாற்றப்பட்டன. சேதமடைந்த விமானம்: இண்டிகோ நிறுவனத்தின் 6E 2142 விமானம், நேற்று மாலை 5 மணிக்கு டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி புறப்பட்டது. பயணத்தின்போது கடுமையான வானிலை காரணமாக விமானிகள் ஸ்ரீநகர் விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கைகள்…

Read More

அரபிக்கடலில் இன்று காலை 5:30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கக்கூடிய நிலையில் அடுத்த ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More

நடிகர் விஜய்யும்  சீமானும் பாஜகவினால் இயக்கப்படுகின்ற பாஜகவின் கைக்கூலிகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காமராஜர் சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா, நலத்திட்டம் வழங்கு விழா மற்றும் பொதுக்கூட்டம் விடுதலைச் சிறுத்தை கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நகரச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன் ஆகியோர் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதையும் படிக்க: இளம்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகார்.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு ஜாமீன்! அப்போது வன்னி அரசு பேசுகையில், “எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீர்மானிக்கக்கூடிய இடத்தில் இருக்கக்கூடிய கட்சி என்றால்…

Read More

காய்கறிகளில் பெரும்பாலான நபர்களால் விரும்பப்படாத காய்கறியாக பாகற்காய் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில், அதிகளவு ஊட்டச்சத்துக்களும், பல ஆரோக்கிய நன்மைகளும் நிரம்பிய காய்கறியே பாகற்காய். இதனை மக்கள் தவிர்க்கும் முக்கியக் காரணம் அதன் கடுமையான கசப்பு சுவைதான். இருப்பினும், ஆரோக்கியமாக வாழ விரும்பும் அனைவரும் தங்கள் உணவில் பாகற்காயை அடிக்கடி சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். பாகற்காயை சாப்பிட முடியவில்லை, கசப்பால் எடுக்கவே முடியவில்லை என்று சிலர் சொல்வதுண்டு. அவர்களுக்கான மிகச்சிறந்த வழி, பாகற்காயை கசப்பே தெரியாமல் சமைப்பது. பொதுவாக, பாகற்காயை பொரியல் செய்து சாப்பிடுவார்கள்; சில சமயங்களில் சாம்பாரிலும் பயன்படுத்துவார்கள். ஆனால் உண்மையில், பாகற்காயை சுவையாகவும், கசப்பே இல்லாமல் சமைக்கும் சிறந்த முறை புளிக்குழம்பாக வைப்பதுதான். செட்டிநாடு பகுதிகளில் இந்த பாகற்காய் புளிக்குழம்பு மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரிய உணவாகும். இப்போது, இந்தச் சுவையான புளிக்குழம்பை எவ்வாறு எளிமையாகச் சமைக்கலாம் என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள்: பாகற்காய் – 2 (நடுத்தர அளவு)…

Read More

கோடை விடுமுறை வந்துவிட்டால், குழந்தைகள் முழுநாளும் வீட்டிலேயே இருப்பார்கள். அப்போது “என்ன சாப்பிடலாம்?” என்ற கேள்வி ஒவ்வொரு மணிதோறும் கேட்டுக்கொண்டே இருப்பர்கள். அப்படிப்பட்ட நேரத்தில், வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் ஸ்நாக்ஸ் தயாரித்து கொடுத்தால், குழந்தைகளும் சந்தோஷமாக சாப்பிடுவார்கள். அது மட்டுமல்ல – உங்கள் பிள்ளைகள் இனிப்பு பிரியர்களாக இருந்தால், ஸ்வீட் கேட்கும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்! அதிலும், ரசகுலா பிடிக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால், ரவை மற்றும் பாலை மட்டும் கொண்டு அதே ரசகுலா சுவையை எளிதாக வீட்டிலேயே செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஒருமுறை செய்து கொடுத்தாலே, “அம்மா, இன்னும் ரசகுலா பண்ணு!” என்றே கேட்கவைத்துவிடும் இந்த ரவா ரசகுலா ரெசிபியை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம். தேவையான பொருட்கள்: ரவை கலவைக்காக: நெய் – 1 டீஸ்பூன் ரவை – 1/4 கப் (சுமார் 50 கிராம்) காய்ச்சி ஆறிய கெட்டிப் பால் –…

Read More

உதகை அருகே உள்ள லவ்டேல் பகுதியில் ஒற்றை காட்டு யானை சமீப தினங்களாக முகாமிட்டுள்ளது. தொட்டபெட்டா வனப்பகுதிகளில் உலாவி வந்த யானை பின்னர் வேல்வியூ பகுதிக்கு வந்து அதன் பின்னர் கேத்தி பகுதிகளுக்கு சென்று தற்பொழுது லவ்டேல் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளது. யானை ரயில்வே குடியிருப்பு பகுதி அருகில் உலாவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வனத்துறையினர் யானையை வனபகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். அதன் பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது. மீண்டும் இரவு நேரங்களில் குப்பை தொட்டிகளில் உள்ள உணவுகளை தேடி உண்ணும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உருவத்தில் பெரியதாகவும் பழக்கத்தில் குழந்தை போலவும் உள்ள யானை வனப்பகுதிகளில் கம்பீரமாக வாழக்கூடிய ஒரு விலங்கு. தற்பொழுது குப்பை தொட்டிகளில் உணவை தேடும் காட்சிகள் அனைவரிடத்திலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒற்றை யானையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பினும்…

Read More

ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், “இந்தியா போல வளர்ந்து வருகிற எந்த ஒரு நாடும், இதுபோல பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்தது இல்லை. இந்தியா வல்லரசாகி கொண்டு இருக்கிறது, ஒருபுறம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. இன்னொரு புறம் அருகில் இருக்கக் கூடிய நாடுகள் தங்கள் நாட்டினுடைய, நிலத்தை தங்கள் நாட்டின் ஆதரவை இந்தியாவை நோக்கி குறி வைத்து இருக்கக் கூடிய இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு கொடுக்கக் கூடிய அடைக்கலம் மற்றும் ஆதரவால், இந்தியா தொடர்ச்சியாக தாக்குதல்களை சந்தித்துக் கொண்டு வருகிறது.” எனக் கூறினார். மேலும், “இதற்கு முன்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அதே பாராளுமன்ற தாக்குதல்களாக இருக்கலாம் , மும்பை வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம், இதுபோல ஆயிரக்…

Read More