Author: Editor TN Talks
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தீபக் பாண்டியன். இவர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர், பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதை அடுத்து தீபக் பாண்டியன் மீது கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருந்தது. இந்நிலையில் இவரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் தனது காதலி மற்றும் அவரது தோழிகளுடன் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த அவரை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. அதன் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தீபக் பாண்டியன் கொலை செய்தவர்களை பழி தீர்ப்போம் என கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் பதிவுகள் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் காவல் துறையினர் சர்ச்சைக்குரிய பதிவுகளை பகிரும் நபர்கள், பதிவு செய்யும் நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை…
தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிரதான மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தது. இன்று, இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் சட்டங்களுக்கு தடை கோரிய மனுவுக்கு…
இளம்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வ செயல் மற்றும் அவரது மனைவிக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்துகொண்டு வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் தன்னை போலவே 20 இளம் பெண்கள் வரை அவர் ஏமாற்றிவிட்டதாகவும் பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், தெய்வச்செயல் மீது நான்கு பிரிவுகளின் கீழ் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, முன் ஜாமீன்க்கோரி தெய்வச்செயல் மற்றும் அவரது மனைவி கனிமொழி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கெதிராக புகார் அளித்து பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில் அந்த பெண்ணிடம் இருந்து விவகாரத்துக்கோரி அவரது கணவர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார். விவாகரத்து பெறாத நிலையில் அந்த பெண்னுக்கும், தமக்கும்…
தம்பதிகளுக்கு இடையே வரும் சந்தேகத்தால், பல குடும்பங்கள் விபரீத செயல்களில் ஈடுபட்டு நிலைகுலைந்து போகும் செய்திகளை நாம் தினமும் படித்தும், கேட்டும் வருகிறோம். சமீபகாலமாக, தனது துணையை கண்காணிக்க சமூக வலைதளங்களை தம்பதியினர் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு நவீன டெக்னிக். அப்படி கணவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பெண்ணின் பெயரின் ஃபேக் ஐடி உருவாக்கி கணவரை வேவு பார்த்துள்ளார் மனைவி ஒருவர். டெல்லியை சேர்ந்த 30வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது பெயர் மற்றும் விவரங்களை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் மர்ம நபர் ஐடி ஒன்றை தொடங்கி, அதன் மூலம் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொந்தரவு செய்வதாக அப்பெண் தனது புகாரில் கூறியிருக்கிறார். இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், சந்தேகப்பட்ட ஃபேக் ஐடியின் மொபைல் எண்ணை கண்டறிந்தன. அந்த சிம் கார்டு உத்தரபிரதேச மாநிலம் காசிபூர் பகுதியில் வாங்கப்பட்டது என்பது…
சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் வசித்து வந்த 593 குடும்பங்களுக்கு, தமிழக அரசு இலவசமாக புதிய வீடுகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் இந்த வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனகாபுத்தூரில் காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்.ஜி.ஆர் நகர், ஸ்டாலின் நகர் போன்ற பகுதிகளில் ஆற்றை ஆக்கிரமித்த கட்டிடங்கள் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அரசு நடவடிக்கைகள் தொடர்கின்றன. அடையாறு ஆற்றை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மறு குடியமர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலுர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில், ஒரு வீடு ரூ.17 லட்சம் மதிப்பில், அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கட்டப்பட்டு வழங்கப்படும். மேலும், புதிய…
18-வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் கிட்டத்தட்ட நிறைவடையவுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஏற்கனவே முன்னேறியுள்ள நிலையில், 4-வது இடத்திற்கு எந்த அணி முன்னேறும் என்பதில் டெல்லி மற்றும் மும்பை இடையே போட்டி நிலவுகிறது. இன்று(21.05.2025) இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி ஃபிளே ஆஃப்க்கு முன்னேறும். சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட மற்ற 5 அணிகளும் தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் நிலையில் நேற்று(20.05.2025) ராஜஸ்தாஸ் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே 65-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் சென்னை பேட்டிங் செய்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் அடித்தது. 188…
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று டாராஸ் லாரியை கடத்திச் சென்ற பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் (எ) சுடலை முத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். டாராஸ் லாரியை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு விபத்து ஏதும் ஏற்படுத்தாமல் கடத்திச் சென்ற நிலையில், போக்குவரத்து காவலர் முருகன் ஆபத்தான நிலையில் லாரியில் தொங்கி சென்ற காட்சிகள் வெளியாகி இருந்தது உடன்குடியில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் இயக்கப்படும் பேருந்தின் ஓட்டுனராக சுபாஷ் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி சக ஓட்டுநருடன் ஏற்பட்ட தகராறில் தலையில் தாக்கப்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டது போல பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று டாரஸ் லாரியை கடத்திச் சென்று விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற போது சுபாஷை பொதுமக்கள் தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் தெரிந்துகொள்ள: லாரியை கடத்திய நபர்… சினிமா பாணியில் பிடித்த காவலர்… செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர…
‘டான் பிக்சர்ஸ்’ நிறுவன உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அஞ்சி காணாமல் போயுள்ள நிலையில், முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் சிம்புவையும் இந்தத் துறை விசாரணைக்கு அழைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, அதன் தலைமை அலுவலகம் மற்றும் பல மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர். இந்தச் சுற்றுப்பட்டியில் ‘பராசக்தி’ படத்தை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரனின் வீடு, தொழிலதிபர் தேவகுமார் உள்ளிட்ட பலர் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்றன. ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத்தில் தேடுதல் வேட்டையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு மே 21ம் தேதியன்று நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாததோடு, தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உள்ள திரைப்படங்கள் : சிவகார்த்திகேயனின்…
உலகில் 2.5% ஆக இருக்கும் விலங்குகளின் எண்ணிக்கையில் வெறும் 0.01% மட்டுமே இருக்கும் மனிதன், இந்த இயற்கைக்குச் செய்யும் தீங்கு எண்ண முடியாமல் நீள்கிறது. மனிதன் தன் தேவைக்காக மரங்களை வெட்டுகிறான், காடுகளை அழிக்கிறான், மலைகளைச் சரிக்கிறான், நதிகளை தூர்க்கிறான், கடல் மட்டத்தை அதிகமாக்கிக் கொண்டிருக்கிறான். இதெல்லாம் ஏதோ பெருமளவில் நடந்து கொண்டிருக்க, நாம் இதற்கு சற்றும் சளைக்காமல் குப்பை போட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி நாம் போட்ட குப்பைகளால்தான் கோவையில் ஒரு யானை உயிரிழந்திருக்கிறது. வனங்கள் குப்பை மேடுகளா? திடக்கழிவு மேலாண்மையில் அரசு முக்கியத்துவம் காட்டி வந்தாலும், பெரும்பாலான குப்பைகள் நீர் நிலைகளிலும் காட்டுப் பகுதிகளிலுமே கொட்டப்படுகின்றன. குறிப்பாக கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைகளிளின் அடிவார ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் வனப்பகுதிகளின் ஓரத்தில்தான் கொட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இரவில் உணவு தேடி வரும் விலங்குகள், குப்பை மேடுகளிலிருந்து பொறுக்கி உண்ணும் அவலம் நிகழ்கிறது. நாம் போடும்…
கோவை கோபாலபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இதன் அருகே மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம், ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய முக்கிய அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. கோவை மாநகரின் மத்திய பகுதியில் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது சுமார் 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இமெயில் முகவரிக்கு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்து உள்ளது. இது குறித்து மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட இ-மெயில் மிரட்டலைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு…