Author: Editor TN Talks

ஆப்ரேஷன் சிந்தூரை வழி நடத்திச் சென்றவர்களில் முக்கியமான ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக அமைச்சரை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கும் நிலையில், போர் நடவடிக்கையிலும் மத அரசியலா? பாஜக எப்போது திருந்தும் என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.  காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் நடத்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூரை செயல்படுத்தியது. தாக்கிய பயங்கரவாதிகள் இந்தியர்களின் மதங்களை விசாரித்து விட்டுச் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது என்னதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலாக நடந்திருந்தாலும், சிலர் மத வெறுப்பின் கண்ணோட்டத்தோடும் இத்தாக்குதலைப் பார்க்கின்றனர். இந்நிலையில், ஆப்ரேஷன் சிந்தூரை வழி நடத்தியது மட்டுமன்றி, நாட்டுக்கு விளக்கம் அளித்த முக்கிய ராணுவ அதிகாரியான ராணுவ கர்னல் சோபியா குரேஷி மீதும் அந்த மத வெறுப்பு பாய்ந்திருக்கிறது.  பாஜக…

Read More

300 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மைசூர் மகாராஜா திருப்பதி ஏழுமலையானுக்கு இரண்டு பெரிய வெள்ளி தீபங்களை காணிக்கையாக சமர்ப்பித்து இருந்தார். அகண்ட தீபம் என்று கூறப்படும் அத்தகைய தீபங்களை ஏழுமலையான் கருவறையில் நிலை நிறுத்தி ஏற்றி வைப்பது வழக்கம். இந்த நிலையில் தற்போதைய மைசூர் ராஜமாதா ஸ்ரீ பிரமோதா தேவி திருப்பதி ஏழுமலையானுக்கு இன்று தலா 50 கிலோ எடையுள்ள வெள்ளியால் தயார் செய்யப்பட்ட இரண்டு அகண்ட தீபங்களை இன்று காணிக்கையாக சமர்ப்பித்தார். ♦ தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்காய சௌத்ரி ஆகியோர் ராஜமாதாவிடம் இருந்து ஏழுமலையான் கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் வெள்ளி அகண்ட தீபங்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்ட ராஜ மாதா பிரமோதா தேவிக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

Read More

தமிழகத்தில் 34 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 32 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆசியாவில் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கி… சீனா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் 58 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 42 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 32 பேர் குணமடைந்துள்ளனர். இது தவிர புதுச்சேரியில் 13 பேரும், கேரளாவில் 15 பேருக்கு, கர்நாடகாவில் 4 பேரும், மகாராஷ்டிராவில் 7 பேரும், டெல்லியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் தொடர்ந்து பரிசோதனை செய்து வருவதாகவும், கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என…

Read More

நடிகர் சூர்யா ’கங்குவா’ பட தோல்விக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’ரெட்ரோ’ படத்தில் சூர்யா நடித்திருந்தார். 90ஸ் காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வினை அடிப்படையாக கொண்டு ஆக்‌ஷன் திரைப்படமாக இப்படம் உருவானது. கடந்த மே மாதம் 1-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சூர்யாவின் ’2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ப்ரொடக்‌ஷன்ஸ்’ இணைந்து தயாரித்து வெளியான ’ரெட்ரோ’ உலகம் முழுவதும் ரு.235 கோடி வசூலை பெற்றது. ஜூன் 5 ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ’ரெட்ரோ’ வெளியாகும் என கூறப்படுகிறது. இருப்பினும் உறுதியான தகவல் இல்லை. அடுத்தடுத்து பெரிய ஹிட் படங்களை சூர்யா கொடுக்க முடியாததால் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தில் உள்ளனர். அவரது 46-வது படத்தை ஆ.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவரது 46-வது படத்தை ‘லக்கி பாஸ்கர்’பட இயக்குநர் ’வெங்கி அட்லூரி’ இயக்கவுள்ளதாக…

Read More

கோடை வறட்சியின் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறிய தாய் யானை ஒன்று, திடீரென மயங்கி விழுந்து உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தாய் யானைக்கு வனத் துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் நேற்று ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தெரிவித்தனர். கோவை வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகளை கண்காணித்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தாய் யானை உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்தது. மயங்கி விழுந்த தாய் யானையின் உடலில் சிறிது நேரத்திற்குப் பின் அசைவு தெரியவே, அருகில் இருந்த குட்டி யானை பதற்றம் அடைந்தது. தனது தாயை எப்படியாவது ? எழுப்பி விட வேண்டும் என்ற தவிப்புடன், தனது…

Read More

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டமும் ஒன்று. பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்த திட்டம். ஒவ்வொரு ஆண்டும் இதற்காக சுமார் ரூ.1000கோடி வரை அரசு செலவிட்டு வருகிறது. முதன்முதலில் 2019-ம் ஆண்டு டெல்லியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து 2021-ம் ஆண்டில் பஞ்சாப்பும், தமிழக அரசும் மகளிருக்கு பேருந்துக்கு இலவச பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதையடுத்து கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 8-வது ஆந்திராவும் இணைந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒவ்வொரு வாக்குறுதிகளையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், ஆந்திரப் பிரதேசத்தில் பெண்கள் ஆகஸ்ட்…

Read More

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் வகை புற்றுநோய் இருப்பதாகவும், இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 82 வயதான ஜோ பைடன் கடந்த 2021-2025-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் 46-வது அதிபராக இருந்தவர். கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக இருந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் ஜோ பைடனுக்கு புரோஸ்டெட் வகை கேன்சர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவந்திருப்பதாக பைடனின் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த கேன்சர் மிகவும் தீவிரமாக இருக்கும் அதே வேளையில், இது ஹார்மோன் சென்சிடிவ்வாக இருப்பது தெரிகிறது. இதனால் கேன்சரை சற்று எளிதாகச்…

Read More

தமிழ்நாட்டில் ஜூலை மாதம் முதல் மின்கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை முதல் மின்கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு பெரிய அளவில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், 2023-ல் ஜூலை மாதம் 2.18 சதவீதம் அளவு உயர்த்தப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 4.8சதவீதம் அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையில், ”கடன் உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தாண்டு 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்தவும், இதை செய்தால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவுகள் குறித்து ”முதலமைச்சர் ஆலோசனைக்கு பிறகே எடுக்கப்படும் எனவும், இது குறித்தான அறிவிப்பு ஜூலை 1-க்குள் அறிவிக்கப்படும்”…

Read More

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இம்மாதம் 4ம் தேதி தொடங்கியது. அதுமுதல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது. குறிப்பாக சேலம், ஈரோடு, நாமக்கல் உட்பட பல மாவட்டங்களில் 103 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் அடித்து நகர்த்தியது. சென்னையிலும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று (19.05.2025) விடிய விடிய மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், வேளச்சேரி, கோயம்பேடு,…

Read More

ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு அமைத்துள்ள தூதுக் குழுவில், எதிர்ப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் இணைக்கப்பட்டுள்ளார். காங்கிரசின் பரிந்துரைகளை மீறி இவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மறுப்பு: இந்த குழுவுக்காக காங்கிரஸ் பரிந்துரைத்த மற்றொரு பெயர் – எம்.பி. கௌரவ் கோகோய் – மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா, கோகோய்க்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் இடையே நெருக்கமான உறவுகள் உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பயணம் – அதிர்ச்சி குற்றச்சாட்டு: “கௌரவ் கோகோய் பாகிஸ்தான் சென்று, அந்நாட்டு உளவு அமைப்பின் அழைப்பின் பேரில் பயிற்சி பெற்றுள்ளார். இது நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் ஆபத்தாகும். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன,” என ஹிமந்தா தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திலிருந்து அவருக்கு நேரடியாக வந்த அழைப்பை அடிப்படையாகக் கொண்டே…

Read More