Author: Editor TN Talks
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என, அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன், உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “2006ல், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றாலும், இதுவரை எங்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணைக்கு எதிராக, ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம், உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளது. அந்த இடைக்கால தடை உத்தரவால், அர்ச்சகர் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் பணி அமர்த்தப்படவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலைய துறை சட்டப்படி, அர்ச்சகர்களை நியமனம் செய்வதற்கு தனிப்பட்ட பட்டப்படிப்பு வயது வரம்பு வரையறுக்கப்படவில்லை. அர்ச்சகர் பயிற்சியை முடித்தவர்களை பணி நியமனம் செய்யலாம் என்று விதி உள்ளது. இதையும் படிக்க: “குற்றவாளிகள்…
தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 9 பேருக்கு கோவை மகளிர் நீதிமன்றம் இன்று சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்பை பல்வேறு கட்சிகள், அதன் உட்பட திமுக, அதிமுக, தவெக, பாமக ஆகியவை வரவேற்ற நிலையில், பாஜகவும் வரவேற்றுள்ளது. இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோவை மகளிர் நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25), ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 9 பேரையும் சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில்…
எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் இந்தியாவின் வலுவான பாதுகாப்பு அமைப்பின் அடையாளமாக மாறி உள்ளதென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி, விமானப் படை வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானுடனான தாக்குதலில் வெற்றிகரமாக செயல்பட்ட நாட்டின் முப்படைகளுக்கு வணக்கம் தெரிவிப்பதாக குறிப்பிட்டார். இந்திய விமானப் படையின் வீரத்தை ஒட்டு மொத்த உலகமே பார்த்ததாக பாராட்டு தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய பெண்களுக்காக நீதியை ராணுவம் நிலைநாட்டி உள்ளதாக புகழாரம் சூட்டினார். நமது முப்படைகளின் வீரச் செயல் இந்தியர்களுக்கும், இந்திய தாய்மார்களுக்கும் உலக அரங்கில் பெருமையை தேடிச் தந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். எதிரிகள் அணுகுண்டு மிரட்டல் விடுத்த போது, அவர்களுக்கு பதிலடியாக முதலில் பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கம் விண்ணதிர கேட்டதாக பிரதமர் தெரிவித்தார். நமது விமானப் படை தளங்களை தாக்க எதிரிகள்…
தெற்கு அந்தமான மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 20ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவது வழக்கம். இதன்தொடர்ச்சியாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவ மழை வழக்கத்தைவிட முன்கூட்டியே தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ மழை இன்று (மே 13) தொடங்கி உள்ளதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதனால், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் தீர்ப்பினை பாராட்டி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கும் இடையே பெரும் வார்த்தை போர் தொடங்கியுள்ளது. முதலமைச்சரின் விமர்சனத்திற்கு அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள். யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?.” எனப்…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன், அருண்பால், பாபு, அளுளானந்தம், அருண்குமார் ஆகியோருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்னென்ன? என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்துள்ளார். அவை பின்வருமாறு.. A1 குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை – ரூ.40,000 அபராதம் A2 குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை – ரூ.35,000 அபராதம் A3 குற்றவாளி சதீஷ்க்கு 3 ஆயுள் தண்டனை – ரூ.18,500 அபராதம் A4 குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை – ரூ.13,500 அபராதம் A5 குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை – ரூ.18,000 அபராதம் A6 குற்றவாளி பாபு-க்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.10,500 அபராதம் A7 குற்றவாளி ஹெரன்பால்-க்கு 3 ஆயுள்…
“பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! https://t.co/lG3uWR7yYp — M.K.Stalin (@mkstalin) May 13, 2025 முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு…
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, பொள்ளாச்சி பாலியல் வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி கிடைத்துள்ளது என்று அதிமுக தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி கிடைத்துள்ளது. திமுகவைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்க எங்களுக்கு மனம் இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினோம். பொள்ளாச்சி வழக்கில் சுயவிவரங்கள் வெளியானதாக சொன்ன திமுக, 6 ஆண்டுகளுக்கு பிறகு,…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதி கிடைத்திருந்தாலும், இது தாமதமாகக் கிடைத்த நீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்த கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கையாக இருக்கும். இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்திய சிபிஐ மற்றும் நீதிமன்றத்தில் வழக்கை நடத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞர்களின் பணிகள் பாராட்டத்தக்கவை. 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறாமல் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். அழிக்கப்பட்ட மின்னணு ஆவணங்களை மீட்டெடுத்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் தடுக்க உதவிய அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள். இதையும் படிக்க: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை..…
2019ம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு கடந்து வந்த பாதை மற்றும் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் விவரங்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்… பொள்ளாச்சி வழக்கு – கடந்து வந்த பாதை கடந்த 2019ம் ஆண்டு இளம் பெண்கள் மற்றும் மாணவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக 2019ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பெண் ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தன் பேரில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2019 மார்ச் 5ம் தேதி தலைமறைவாக இருந்து வீடியோ பதிவு வெளியிட்ட திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். அவரது செல்போனில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச…