Author: Editor TN Talks
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ”அவையில் சுதந்திரமாக பேச வாய்ப்பளிக்க வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள இரண்டு அம்சங்கள் குறித்து பேச வேண்டும். எரிசக்தியையும், பொருளாதாரத்தையும் ஆயுதமாக பயன்படுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் வலிமை என்ன என்பதை நாம் உணர வேண்டும். 140கோடி மக்களே இந்தியாவின் வலிமை. முன்பு இருந்தது போன்ற உணவு பொருட்கள் தட்டுப்பாடு எதுவும் தற்போது இல்லை. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. உலகத்தில் பதற்றமான நிலை மற்றும் போர்களுக்கான காலமாக காணப்படுகிறது. அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான காலம் வந்துவிட்டது. பாகிஸ்தானின் ராணுவத் தளபதியை காலை உணவுக்கு அழைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உபசரித்தார். ஆனால், இந்த அரசு அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தது. அமெரிக்காவுக்கு இந்தியாவின் தரவுகள் மிகவும் முக்கியம்.…
மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை 12-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டாக கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரியான சம்மேளனங்கள், ஐக்கிய விவசாய முன்னணி அமைப்புகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான ராஜா மீது சாதிய பாகுபாடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 3ம் தேதி அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் தமிழ் சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு தமிழ் உணவு தயாரித்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அவர்களுக்கு விதவிதமான தமிழ் உணவுகள் பரிமாறப்பட்டன. அப்போது, உணவு வழங்க வந்த தமிழர்களிடம் சாதி குறித்து ராஜா கேட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்திகேயன் ஃபஸ்துரு என்பவர், தனது சகோதரி மற்றும் அவரின் தோழிகளுக்கு தமிழ் சங்கத்தின் சார்பில் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோருக்கு உணவு தயாரித்து வழங்கும் பொறுப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். உணவு பரிமாறும் போது, தனது தங்கை மற்றும் அவரின் தோழிகளிடம் அவர்களின் ஊர் பெயர் மற்றும் சாதி குறித்து ராஜா விரிவாக கேட்டதாக…
சென்னை ஸ்கைபேக்ஸ் (Skybags), வரவிருக்கும் 2026 கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக (Official Luggage Partner) இணைந்துள்ளது. இதன் அறிமுக விழா சென்னை நந்தனம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இயக்குனர் மற்றும் சிஇஓ காசி விஸ்வநாதன், VIP Industries மேலாண் இயக்குனர் மற்றும் சிஇஓ அதுல் ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிஎஸ்கே அணி வீரர்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லக்கேஜ் பைகள் மற்றும் பேக்பேக்குகளை (Backpacks) அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலாண் இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன் பேசுகையில், “ஸ்கைபேக்ஸ் நிறுவனத்தை சிஎஸ்கே குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்கள் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருவதோடு, அணியுடனான அவர்களது பிணைப்பை மேலும் வலுப்படுத்தும்” என்று தெரிவித்தார். சிஎஸ்கே அணிக்கு கடந்த இரண்டு…
டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனா நடித்து கடந்த 6-ம் தேதி வெளியானது வித் லவ் திரைப்படம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்துல் அபிஷன் ஜீவிந்திடம் இயக்குநராக இருந்த மதன் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். MRP எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 3 நாட்களில் 11கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், வித் லவ் படக்குழுவினரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். படக்குழுவினரை வீட்டிற்கு வரவழைத்து பாராட்டினார். இந்த வீடியோவை சவுந்தர்யா தனது எக்ஸ் தளத்தில்…
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விடுவித்து நயினார் நாகேந்திரனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதில் இருந்து அண்ணாமலையும், அவரது ஆதரவாளர்களும் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலையை சமாதானப்படுத்த கட்சி சார்பில் கொடுக்கப்படும் பொறுப்புகளையும் அவர் தட்டிக் கழித்து வருகிறார். தேர்தல் பொறுப்பாளர் பதவியை, தந்தையை கவனித்துக் கொள்ள வேண்டி இருப்பதால் செய்ய முடியாது என தவிர்த்துள்ளார். தான் பாஜகவில் இல்லை என்றால், தமிழ்நாட்டில் ஒன்றுமே செய்ய முடியாது என்ற எண்ணத்தை தலைமையிடம் விதைக்க அவர் பார்ப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு தமிழக பாஜகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, பாஜக சக்தி கேந்திராவின் தலைவர் அல்லது தலைமை பொறுப்பாளர் பதவியை அவருக்கு பாஜக…
நாக்கூசாமல் பச்சைப் பொய் பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… 7.5% உள் இடஒதுக்கீடு எப்படி வந்தது?
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று மேடையேறிய பொம்மை முதல்வர் வழக்கம் போல யாரோ எழுதிக் கொடுத்தத்தை வாசித்துக் கொண்டிருந்த போது, சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று மேடையேறிய பொம்மை முதல்வர், வழக்கம் போல யாரோ எழுதிக் கொடுத்ததை வாசித்துக் கொண்டிருந்த போது, 7.5% மருத்துவ உள் இடஒதுக்கீடு திமுக-வின் அழுத்தத்தால் தான் வந்தது போல ஒரு பச்சைப் பொய்யை நாக்கூசாமல் பேசியுள்ளார். 7.5% உள் இட ஒதுக்கீடு என்பது, அன்றைய தினம் ஆளுநரின் ஒப்புதல் வராத சூழலிலும், அரசியல் திறத்தோடு அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவு அளிக்கும் மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அரசாணை வெளியிட்டு கொண்டு வந்தது. அதற்கும், நீங்கள் அப்போது ராஜ் பவன் வாசலில் நின்று அவியல் கிண்டியதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? இப்படி, அடுத்தவர் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்கும் புத்தி எப்போது தான் மாறும்? திமுக ஆட்சியில் “இதைச் செய்தேன்”…
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடவும், மானாமதுரை அரசு மருத்துவமனையில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக சரிசெய்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் வருகிற 16-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணியளவில், மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமையிலும்; சிவகங்கை மாவட்டக் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், முன்னிலையிலும் நடை பெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
டெட் தேர்வில் தகுத்தேர்வு மதிப்பெண் குறைப்பு, உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் சங்கம் சார்பில் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, மதுரை, திண்டுக்கல் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வலுத்துள்ளது. அண்டை மாநிலமான ஆந்திராவை போல் தமிழ்நாட்டிலும் உதவித் தொகை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனர். ரூ.1,500 முதல் ரூ.2,000 வரையிலான மாத உதவித்தொகையை ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த உதவித் தொகைக்காக பல ஆண்டுகளாக ஏராளமான மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பதாக வேதனையும் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் தொடர்பாக சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக முட்டையை ஹாப் பாயிலாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது. பறவைகளோ, காகங்களோ திடீரென இறந்து கிடந்தால், அதனை கண்டவர்கள் பறவையை ஆழமாக தோண்டி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழி திடீரென இறந்தால், அதனை சமைத்து சாப்பிட வேண்டாம். தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மக்களுக்கு பரவவில்லை. எனினும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.