Author: Editor web3

அகமதாபாத் விமான விபத்து விசாரணையில், பிரிட்டனுக்கு அனுப்பப்பட்ட 53 பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் ஃபார்மலின், கார்பன் மோனாக்சைடு மற்றும் சயனைடு உள்ளிட்ட ஆபத்தான அளவிலான நச்சு இரசாயனங்கள் இருப்பது தெரியவந்தது, கடந்த ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தில் போயிங் 787 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. லண்டனுக்குச் சென்ற விமானம் புறப்பட்ட 32 வினாடிகளில் சுமார் 600 அடி உயரத்தில் இருந்து விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். விமானம் விடுதி மீது விழுந்ததில் 19 பேர் பலியாகினர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனான விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டுமே உயிர் பிழைத்தார். இந்தநிலையில், விபத்தில் 53 பிரிட்டிஷ் குடிமக்களின் மரணம் குறித்த விசாரணைக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் பியோனா வில்காக்ஸ், டிசம்பர் 2 செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டார், எதிர்காலத்தில் இதுபோன்ற மரணங்களை எவ்வாறு தடுக்கலாம் என்பதை கோடிட்டுக் காட்டினார்.…

Read More

புகையிலை மற்றும் சிகரெட்டுகள் மீதான கலால் வரியை அதிகரிக்கும் மத்திய கலால் (திருத்த) மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு வெறும் வரி அதிகரிப்பு போல் தோன்றினாலும், இது ஒரு பரந்த நோக்கத்திற்கு உதவுகிறது என்று அரசாங்கம் கூறுகிறது. மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது, ​​மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிகரெட்டுகளுக்கான அதிகரித்த வரி ஒரு செஸ் அல்ல, மாறாக ஒரு கலால் வரி என்று தெளிவுபடுத்தினார். இதன் பொருள் மாநிலங்கள் இந்த வரியில் ஒரு பங்கைப் பெறும், மேலும் நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இது விநியோகிக்கப்படும். இந்த அறிக்கை மாநிலங்களின் கவலைகளைப் பெருமளவில் நீக்கியது, மேலும் மசோதா எளிதில் அங்கீகரிக்கப்பட்டது. புதிய வரி புகையிலை விவசாயிகளுக்கும் பீடி தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு, இந்த மசோதா விவசாயிகளுக்கும் பீடித் தொழிலாளர்களுக்கும் எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது என்று நிதியமைச்சர் தெளிவாகக் கூறினார். புகையிலை அல்லாத பிற…

Read More

2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 1.77 லட்சமாக உயர்ந்துள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 2024 நாட்டின் போக்குவரத்து வரலாற்றில் மிகவும் ஆபத்தான ஆண்டாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விழிப்புணர்வு பிரச்சாரங்கள், போக்குவரத்து அபராதங்களில் மாற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் இருந்தபோதிலும், இந்தியாவில் தற்போதைய சாலை பாதுகாப்பு நெருக்கடி தீவிரமாகவே உள்ளது என்பதை இவை காட்டுகின்றன. 2023 ஆம் ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.73 லட்சமாக இருந்தது. 2024 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 177,177 பேர் இறந்ததாக சாலைப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். இந்தத் தரவுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விபத்துத் தகவல்களும், மேற்கு வங்காளத்திலிருந்து EDAR போர்டல் வழியாக வந்த தகவல்களும் அடங்கும். தேசிய நெடுஞ்சாலைகள் மட்டும் 54,433 இறப்புகளுக்குக் காரணமாக அமைந்தன, இது நாட்டின்…

Read More

என் கழுத்தை அறுத்தாலும் சரி, இங்கிருந்து யாரும் விரட்டப்பட மாட்டார்கள். மேற்கு வங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும் என்று SIR குறித்து மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார். பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகளினால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தத்தால் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதேபோல், மேற்கு வங்காளத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட பலரும் இறக்க நேரிட்டதாக…

Read More

H-1B விசா விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக அளவில் ஆட்களை நியமிக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த விசாக்கள் மிக முக்கியமானவை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக இந்த நிறுவனங்களின் தலைவர்கள் பலர் தங்கள் ஆதரவை வழங்கினர். அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக, கடந்த செப்டம்பரில் , அமெரிக்க முதலாளிகள் சிறப்புத் துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கும் H-1B விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை டிரம்ப் நிர்வாகம் 100,000 டாலர்களாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், எச்1பி’ விசா விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்க வெளியுறவுத்துறையின் உள் குறிப்பாணை , H-1B விசா விண்ணப்பதாரர்களை சரிபார்ப்பதற்கான புதிய விதிகளை வகுத்துள்ளது, அதில் பேச்சு சுதந்திரத்தை “தணிக்கை” செய்வதில் ஈடுபடும் எவரும்…

Read More

தற்போதைய சுங்கச்சாவடி வசூல் முறை ஒரு வருடத்திற்குள் முற்றிலுமாக அகற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்த முறை மின்னணு அமைப்பால் மாற்றப்படும். இது நெடுஞ்சாலை பயனர்களுக்கு தடையற்ற பயண அனுபவத்தை வழங்கும் என்று கூறினார். மேலும் இந்த புதிய முறை தற்போது 10 இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், ஒரு வருடத்திற்குள் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். “இந்த சுங்கச்சாவடி முறை முடிவுக்கு வரும். சுங்கச்சாவடி என்ற பெயரில் யாரும் உங்களைத் தடுக்க மாட்டார்கள். ஒரு வருடத்திற்குள் நாடு முழுவதும் மின்னணு சுங்கச்சாவடி வசூல் செயல்படுத்தப்படும்” என்று அவர் தெளிவுபடுத்தினார். நாட்டில் தற்போது ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள 4,500 நெடுஞ்சாலைத் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் கட்கரி அவையில் தெரிவித்தார். நாட்டின் நெடுஞ்சாலைகளில் சுங்க…

Read More

வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கவிடாமல், எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு தவிர்ப்பதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து வரவேற்கிறார். நாளை (டிச.5) பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் அணு உலைகள் குறித்து பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தநிலையில், வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கவிடாமல், எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு தவிர்ப்பதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் அரசுமுறை பயணமாக ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல், வெளிநாட்டுத் தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவரைச் சந்திப்பது என்பது வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் காலத்திலிருந்தே ஒரு பாரம்பரியமாக இருந்தது. ஆனால், தற்போது நான்…

Read More

மத்திய அரசு பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் வாரியத் தலைவர் நவ்னீத் குமார் சேகல் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. பிரசார் பாரதி என்பது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இதுவே தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை நிர்வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த நவ்நீத் குமார் செகல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 4 ஆண்டுகளாக காலியாக இருந்த தலைவர் பதவியில், அவர் மார்ச் 2024ல் பொறுப்பேற்றார். ஆனால் 2 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் அவர் பதவி விலகியுள்ளார். பதவியேற்ற ஒன்பது மாதங்களில் அவர் விலகியிருப்பது, மத்திய அரசின் உயர்மட்ட நிர்வாகத்தில் உள்ள சர்ச்சைகளையும் கேள்விகளையும் சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1988 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உத்தரப் பிரதேச கேடரான இந்திய நிர்வாகப் பணி…

Read More

தன்னிகரற்ற தைரியம், உறுதிப்பாட்டுடன் நமது கடற்படை செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். உலகின் முதல் 10 பெரிய கடற்படை சக்திகளில் ஒன்றாக விளங்கும் இந்திய கடற்படை தினம் இன்று (டிசம்பர் 4ஆம் தேதி) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி டிசம்பர் 1 முதல் 7ஆம் தேதிவரை கடற்படையின் பணிகளை சிறப்பிக்கும் பல வகை கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில், கடற்படை தினத்தையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடற்படை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய கடற்படை வீரர்கள் அனைவருக்கும் இந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம் கடற்படை வீரர்கள் அசாதாரண தைரியம், உறுதி ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கின்றனர். நாட்டின் கடலோரங்களையும், கடல் வர்த்தக நலன்களையும் திறம்பட பாதுகாத்து வருகின்றனர். சமீப ஆண்டுகளில், இந்திய கடற்படை தன்னிறைவு மற்றும் நவீனமயமாக்கல் ஆகிய இரண்டையும் நோக்கி முன்னேறி வருகிறது. இது நம் நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு…

Read More

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதால் மொபைல் போன்கள், டிவிக்கள், மடிக்கணினிகள், ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதன பெட்டிகள், ஒப்பனை பொருட்கள் மற்றும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும். டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 3 முதல் 7 சதவீதம் வரை விலை உயர்வை நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக ஜிஎஸ்டி குறைப்பின் நன்மைகளும் கணிசமாகக் குறையும் என்று கூறப்படுகிறது. ரூபாயின் மதிப்பு வேகமாக சரிவது சாமானிய மக்களின் பையில் சுமையை அதிகரிக்கவே செய்யும். இந்த தாக்கம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள், ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதன பெட்டிகள், ஒப்பனை பொருட்கள் மற்றும் வாகனங்கள் போன்ற பொருட்களை நேரடியாக பாதிக்கும். சமீபத்தில், அரசாங்கம் ஜிஎஸ்டியைக் குறைத்தது, இது நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணம் அளித்தது, ஆனால் இந்த ரூபாயின் சரிவால் மீண்டும் சுமை ஏற்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு பலவீனம், வெளிநாடுகளில் இருந்து பாகங்கள் அல்லது முழுப் பொருட்களையும் இறக்குமதி…

Read More