தேங்காய் மரம் “கல்பவிருட்ஷம்” என்று அழைக்கப்படும் அளவுக்கு மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் இருந்து கிடைக்கும் தேங்காய் பால் (Coconut Milk) என்பது சமையல், மருந்தியல் மற்றும் ஆரோக்கியம் ஆகிய அனைத்திலும் பயன்படும் இயற்கை உணவுப் பொருளாகும். தேங்காயின் உள்ளிருக்கும் மெல்லிய வெள்ளைப் பகுதிகளை துருவி, தண்ணீர் சேர்த்து பிழிந்து எடுக்கும் பாறைநிறமான திரவமே தேங்காய் பால். இது தென்னிந்திய சமையலில் மட்டுமின்றி, உலகம் முழுவதும், குறிப்பாக தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

தேங்காய் பால் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த ஒன்று.

இதில் காணப்படும் முக்கிய சத்துக்கள்:

  • நல்ல கொழுப்புகள் (Medium-chain Triglycerides – MCTs).

இவை உடலால் எளிதில் ஜீரணிக்கப்படும் மற்றும் சக்தி வழங்கும் கொழுப்புகள்.

  • லாவ்ரிக் ஆசிட் (Lauric Acid) – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
  • கேப்ரிக் ஆசிட் (Capric Acid) – உடல் சக்தியை அதிகரிக்கும்
  • கேப்ரிலிக் ஆசிட் (Caprylic Acid) – குடல் நலத்துக்கு உதவும்.

வைட்டமின் சி (Vitamin C)

நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.

சருமத்துக்கு Collagen வழங்கும்.

வைட்டமின் ஏ (Vitamin E)

Anti-oxidant ஆக செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கும்.

Vitamin B Group(வைட்டமின் பி குரூப்)

(பி1 – Thiamine, பி3 – Niacin, பி5 – Pantothenic acid, பி6 – Pyridoxine)

  • சக்தி உற்பத்தி
  • மூளை மற்றும் நரம்பு அமைப்பு நலம்.
  • செரிமான முறை சிறப்பாக செயல்பட உதவும்.

மக்னீசியம் (Magnesium)

  • தசை மற்றும் நரம்பு அமைப்பை சீராக்கும்.
  • இதய செயல்பாட்டை ஆதரிக்கும்.

பொட்டாசியம் (Potassium)

  • இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
  • உடல் நீர்ச்சத்து சமநிலையை பராமரிக்கும்.

கால்சியம் (Calcium)

எலும்புகள் மற்றும் பற்களின்  ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

பாஸ்பரஸ் (Phosphorus)

எலும்பு வளர்ச்சிக்கும் சக்தி உற்பத்திக்கும் அவசியம்.

இரும்பு (Iron)

  • சிவப்பணுக்கள் உருவாக உதவுகிறது.
  • Anaemia-ஐ தடுக்கிறது.

செம்பு (Copper)

  • இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக்க உதவும்.

Anti-oxidant செயல்பாடு

  • லாவ்ரிக் ஆசிட் மற்றும் வைட்டமின் E கூட்டு உடலில் உள்ள தீங்கான free radicals-ஐ குறைத்து, செல் சேதத்தைக் குறைக்கும்.
  • முதுமையை தாமதப்படுத்தும்.

ஆக இப்படி பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய இந்த தேங்காய் பால் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று கூறுவது வழக்கம். எனவே உங்களது அன்றாட வாழ்வில் தினமும் ஒரு அரை டம்ளர் தேங்காய் பால் குடித்து வாருங்கள். தேங்காய்ப்பால் குடிக்க முடியாதவர்கள் உங்களது சமையலில் தேங்காய் பாலை சேர்த்து சமைத்து உண்டு நல்ல உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளுங்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version