Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அடிக்கடி பணிபுறக்கணிப்பில் ஈடுபடும் வழக்கறிஞர்கள்.. நடவடிக்கை உத்தரவிடக் கோரி மனுதாக்கல்…
    தமிழ்நாடு

    அடிக்கடி பணிபுறக்கணிப்பில் ஈடுபடும் வழக்கறிஞர்கள்.. நடவடிக்கை உத்தரவிடக் கோரி மனுதாக்கல்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    25 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞராக தொழில் செய்து வருகின்றேன்.நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்காக வழக்கறிஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. உங்கள் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் தலைவர்கள் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களாக இருந்து வருகின்றனர் மேலும் சங்கம் சார்பாக மேற்கொள்ளப்படும் பெரும்பாலான நீதிமன்ற புறக்கணிப்புகள் சட்டத்திற்கு புறம்பானது.

    சிலர் நீதிமன்றத்தையும் காவல்துறையையும் மிரட்டும் நோக்கில் இதுபோன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர், வழக்கறிஞர் சிலர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகள் எடுபடும்போது நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு ஆதரவாக பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர் இது போன்று 90 சதவீத நீதிமன்ற புறக்கணிப்புகள் நியாயமற்றவையாகவே உள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் இதுபோன்று சட்டவிரோத பணி புறக்கணிப்புகளுக்கு கடும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது. எனவே இது போன்று நியாயமற்ற கோரிக்கைகளுக்காக சட்டவிரோதமாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும் சங்க நிர்வாகிகள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் S.M.சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி மரியா கிளீட் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல்வேறு கண்டனங்களை பதிவு செய்துள்ளது. வழக்கறிஞர்களின் கோரிக்கை நிறைவேற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு ஒரு தீர்வாகாது அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் அதுவே சரியான முறையாகும், சட்டத் தொழில் ஒரு உன்னதமான தொழில். மேலும் வழக்கறிஞர்கள் சாதாரண ஊழியர்கள் கிடையாது வழக்கறிஞர்கள் வழக்குரைஞர்களின் நலனையும் நீதிமன்றங்களின் மகத்துவத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள்.

    எனவே, அற்பமான காரணங்களுக்காக அல்லது எந்தவொரு வழக்கறிஞரின் சில தனிப்பட்ட குறைகளின் அடிப்படையில் அடிக்கடி நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது எந்த சூழ்நிலையிலும் ஏற்கத்தக்கது அல்ல ஏதேனும் பொதுவான காரணம் ஏற்பட்டால் மட்டுமே, வழக்கறிஞர் பார் கவுன்சிலையோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் அதை தவிர்த்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

    வழக்கறிஞர்கள் தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள். அவர்கள் நீதி வழங்கும் அமைப்பில் பங்குதாரர்கள். அவர்கள் இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது நீதி வழங்கும் அமைப்பில் நீதிமன்றத்திற்கு அவர்களின் உதவி மிக முக்கியமானது.
    இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் பெயர், முகவரி கொண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் புகார் கொடுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர் சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக எம்.பி.க்கள் தமிழ்நாட்டிற்காக என்ன கிழித்தார்கள்?.. அதிமுக கேள்வி..
    Next Article கூலித் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.81 கோடிக்கு விற்பனை!
    Editor TN Talks

    Related Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.