நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 மாதங்களில் முடிந்துவிடும் என நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார்.
சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகிறது பராசக்தி திரைப்படம். இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இடையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதால், படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான விசாரனைக்கு இடைக்கால தடை விதித்ததால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி இருக்கிறது. இலங்கையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த 20-ம் தேதி அதர்வா நடிப்பில் டி.என்.ஏ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதர்வா, இன்னும் 2 மாதங்களில் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றார். விஜயகாந்தைப் போல் முரளியையும் ஏ.ஐ மூலம் திரையில் பார்க்க வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதர்வா, தற்போது அதுபோல் எந்த திட்டமும் இல்லை எனவும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது எனவும் கூறினார்.