தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோன்று நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோவை மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்று தொடங்கி 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தங்கள் பயணத் திட்டங்களை அதற்கு தக்கவாறு திட்டமிட்டுக் கொள்ளலாம்.
